மேலும் அறிய

’உன் கண்ணு ரொம்ப அழகா இருக்கு’ - கல்லூரி மாணவியிடம் இரவில் சாட் செய்த பேராசிரியர் பணியிடை நீக்கம்

’’நீ வா, நம்ம ரெண்டு பேரும் தனியா இருக்கும்போது நெறயா பண்ணலாம் என்று பேராசிரியர் திருநாவுக்கரசு சாட் செய்ததாக புகார்’’

கோவை மாவட்டம் பேரூர் பகுதியில் தமிழ்க்கல்லூரி என அழைக்கப்படும் தவத்திரு சாந்தலிங்க அடிகளார் கலை அறிவியல் கல்லூரி இயங்கி வருகிறது. இக்கல்லூரியில் தமிழ்த்துறையில் முனைவர் கா. திருநாவுக்கரசு என்பவர் இணைப் பேராசிரியராக பணியாற்றி வந்தார். இவர் அந்தக் கல்லூரி மாணவிகளிடம் அத்துமீறி ஆபாசமாக பேசுவதாக புகார் எழுந்து வந்தது. இந்நிலையில் இணைப் பேராசிரியர் திருநாவுக்கரசு மூன்றாம் ஆண்டு பயின்று வரும் மாணவி ஒருவருக்கு இரவு நேரத்தில் டெலிகிராம் செயலியில் ஆபாசமாக பேசிய உரையாடல்கள் ஸ்கிரீன் ஷாட்களாக வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

’உன் கண்ணு ரொம்ப அழகா இருக்கு’ - கல்லூரி மாணவியிடம் இரவில் சாட் செய்த பேராசிரியர் பணியிடை நீக்கம்

இரவு நேரங்களில் அந்த மாணவிக்கு டெலிகிராம் ஆப்பில் திருநாவுக்கரசு சாட் செய்வதை வழக்கமாக கொண்டிருக்கிறார். அதில், "வீட்ல எல்லாரும் வந்துட்டாங்களா? உன்ன எனக்கு ரொம்ப பிடிக்கும்? பக்கத்துல யாராச்சும் இருக்காங்களா? உன் கண்ணு ரொம்ப அழகா இருக்கு, உன் முகம் ரொம்ப அழகா இருக்கு, நீயும் நானும் இனி ரொம்ப க்ளோஸ், நீ என் கூட இருந்தா நல்லா இருக்கும், சமைக்க பழகிக்கோ, தனியா இருக்க போர் அடிக்கலயா, நைட்டுக்கு நான் வரவா, வீட்ல அம்மா இருக்காங்க இல்லாதப்போ சொல்றன் நீ வா, நம்ம ரெண்டு பேரும் தனியா இருக்கும் போது நெறயா பண்ணலாம்.” என்றெல்லாம் பேசியுள்ளார். மேலும், திருநாவுக்கரசு அந்த மாணவிக்கு சட்டையைக் கழற்றி விட்டு உள்பனியனுடன் கட்டிலில் சாய்ந்த படி செல்பி எடுத்து அனுப்பியுள்ளார். பிறகு இதே போல ‘நீயும் போட்டோ எடுத்து அனுப்பு’ என்றும் கூறுகிறார். இந்த புகார் குறித்து அந்தக் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் கேட்டதற்கு, திருநாவுக்கரசு அதை ஒப்புக்கொள்ளும் வீடியோவும் வெளியாகியுள்ளது. இதையடுத்து இணைப்பேராசிரியர் திருநாவுக்கரசு மீது கல்லூரி நிர்வாகம் மற்றும் உயர்கல்வித்துறை அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

’உன் கண்ணு ரொம்ப அழகா இருக்கு’ - கல்லூரி மாணவியிடம் இரவில் சாட் செய்த பேராசிரியர் பணியிடை நீக்கம்

மாணவி ஒருவரிடம் இரவு நேரத்தில் பாலியல் ரீதியாக பேசி தொல்லை கொடுத்தது தொடர்பாக, முன்னாள் மாணவர் ஒருவர் அளித்த புகாரின் பேரில், இணைப்பேராசிரியர் திருநாவுக்கரசு பணியிடை நீக்கம் செய்து கல்லூரி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இது குறித்து அக்கல்லூரி நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், புகார் தொடர்பாக அளிக்கப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில் குற்றம் நடந்ததற்கான முகாந்திரம் இருப்பதாகவும், இது தொடர்பாக திருநாவுக்கரசு அளித்த விளக்கம் திருப்திகரமாக இருக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக கல்லூரி நிர்வாகம் தனிக்குழு அமைத்து விசாரணை நடத்தி வருவதாகவும், அவர்களின் அறிக்கை அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்லூரி நிர்வாகம் கூறியுள்ளது. இந்நிலையில், திருநாவுக்கரசு மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, முன்னாள் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Rahul Gandhi: ''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
TN Rain: மழை வருமா, வராதா? ;  தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
மழை வருமா, வராதா? ; தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Ashwin Profile: ”நான் சொடுக்கு பந்து போடணுமா?”தலையெழுத்தை மாற்றிய COACH நாயகன் அஸ்வினின் கதை..!Rahul gandhi on MP injury: ”ஆமா...தள்ளிவிட்டேன்! என்னையவே தடுக்குறீங்களா?” ஆதாரத்துடன் பேசிய ராகுல்Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rahul Gandhi: ''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
TN Rain: மழை வருமா, வராதா? ;  தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
மழை வருமா, வராதா? ; தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
"ஒரு ஆணுக்கு இரண்டு மனைவிகள்.. லிவ் இன் ரிலேஷன்ஷிப் தவறு" நிதின் கட்காரி பரபர கருத்து!
ஸ்பெல்லிங் கூட சரியா எழுத தெரியாதா? ஜெகதீப் தன்கருக்கு எதிரான தீர்மானம் டிஸ்மிஸ்!
ஸ்பெல்லிங் கூட சரியா எழுத தெரியாதா? ஜெகதீப் தன்கருக்கு எதிரான தீர்மானம் டிஸ்மிஸ்!
IIT Madras: அதிநவீன ஆராய்ச்சி ஆய்வகங்களைப் பார்வையிடலாம்; ஐஐடி சென்னை அழைப்பு!
IIT Madras: அதிநவீன ஆராய்ச்சி ஆய்வகங்களைப் பார்வையிடலாம்; ஐஐடி சென்னை அழைப்பு!
நல்லா இருக்கீங்களா அம்மா? நேரில் நலம் விசாரித்த முதல்வர்.. சர்ப்ரைஸ் ஆன பாட்டி!
நல்லா இருக்கீங்களா அம்மா? நேரில் நலம் விசாரித்த முதல்வர்.. சர்ப்ரைஸ் ஆன பாட்டி!
Embed widget