மேலும் அறிய

Youtuber Sikkander | யூடியூபர் சிக்கா மீது பாய்ந்தது குண்டர் சட்டம் ; கோவை காவல்துறை நடவடிக்கை..

சமூக இணையதளத்தில் ஆபாசமாகவும், இழிவாகவும் பார்ப்பவர்களை முகம் சுழிக்கும் வகையில் வீடியோ வெளியிட்டு வரும் ரவுடி பேபி சூர்யா மற்றும் சிக்கா ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்குமாறு புகார் அளிக்கப்பட்டது.

கோவை மாவட்டம் பெரிய நாயக்கன்பாளையத்தைச் சேர்ந்தவர் திலகா. திலகா மற்றும் அவரது கணவர் முத்து ஆகியோர் யூடியூபில் விழிப்புணர்வு மற்றும் சினிமா அப்டேட் வீடியோ பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் யூடியூபரான ரவுடி பேபி சூர்யாவிற்கும், திலகாவிற்கும் இடையே மோதல் இருந்து வந்துள்ளது. சுப்பு லட்சுமி என்கிற ரவுடி பேபி சூர்யா நடத்தி வரும் சூர்யா மீடியா மற்றும் சிக்கந்தர்ஷா என்கிற சிக்கா நடத்தி வரும் சிங்கர் சிக்கா ஆபிசியல் என்ற யூடியூப் சேனல்களில் திலகாவை பற்றி மிகவும் இழிவாகவும், ஆபாசமாகவும் உருவ கேலி செய்தும் தொடர்ந்து பேசி வந்துள்ளார். மேலும் தொடர்ந்து சமூக இணையதளத்தில் ஆபாசமாகவும், இழிவாகவும் பார்ப்பவர்களை முகம் சுழிக்கும் வகையில் வீடியோ வெளியிட்டு வரும் ரவுடி பேபி சூர்யா மற்றும் சிக்கா ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்குமாறு, கோவை மாவட்ட சைபர் கிரைம் காவல் துறையினரிடம் புகார் அளித்தார்.

அந்த புகாரில் திலகாவின் 10 வயது மகள் ஆன்லைன் மூலம் பாடங்கள் பயில்வதில் உள்ள பிரச்னைகள் தொடர்பாக பேசிய காணொலியை அவர்களது யூடியூபில் பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோவிற்கு பதிவிட்ட ரவுடி பேபி சூர்யா, அவதூறு வார்த்தைகளை பயன்படுத்தியதாகவும், இது தொடர்பாக தம்பதிகளும், சூர்யாவின் யூடியூப் லைவ்வில் பதிலளிக்க, அங்கும் சூர்யா, மோசமான வார்த்தைகளால் பேசியதோடு, கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் தம்பதிகளின் செல்போன் எண்களை தனது எண் என தனது யூடியூப் வலைதளத்தில் பதிவிட்டுள்ளதாகவும், இதனால் பலரும் சூர்யா என நினைத்து மோசமான வார்த்தைகளால் பேசி மிரட்டல் விடுத்தாக தெரிவித்தார்.

இதையடுத்து பாலியல் ரீதியாக பேசுதல், பெண்களை இழிவாக பேசுதல், தகவல் தொழில் நுட்ப சட்டம், பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். மதுரையில் தங்கியிருந்த திருப்பூரை சேர்ந்த சுப்புலட்சுமி என்கிற ரவுடி பேபி சூர்யா (35), அவரது நண்பர் மதுரையை சேர்ந்த சிக்கந்தர் என்கிற சிக்கா (48) ஆகிய இருவரையும் தனிப்படை காவல் துறையினர் கடந்த ஜனவரி 4 ம் தேதி கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 3 செல்போன்களை பறிமுதல் செய்தனர். பின்னர் இருவரும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில் சிறையில் உள்ள சிக்கந்தர்ஷா என்கிற சிக்கா மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் பரிந்துரை செய்தார். இதன் பேரில் சிக்காவை குண்டர் சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் அடைக்க கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் உத்தரவிட்டார். இதற்கான உத்தரவு நகலை காவல் துறையினர் சிக்காவிடம் வழங்கினர். இது போன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோர் பற்றி கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 9498181212 மற்றும் வாட்ஸ் ஆப் எண் 7708100100 என்ற எண்ணிலும் புகார் அளிக்கலாம் என கோவை மாவட்ட காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

தலைப்பு செய்திகள்

நடுக்கடலில் துப்பாக்கிச்சூடு: ரத்த வெள்ளத்தில் மிதந்த தமிழக மீனவர்... ஆட்சியர் அலுவலகத்தில் மனைவி தரையில் புரண்டு கதறல்!
நடுக்கடலில் துப்பாக்கிச்சூடு: ரத்த வெள்ளத்தில் மிதந்த தமிழக மீனவர்... ஆட்சியர் அலுவலகத்தில் மனைவி தரையில் புரண்டு கதறல்!
பள்ளிவாசல் அருகே மதுக்கடையா? கொதித்தெழுந்த பெருந்தோட்டம் கிராம மக்கள்!
பள்ளிவாசல் அருகே மதுக்கடையா? கொதித்தெழுந்த பெருந்தோட்டம் கிராம மக்கள்!
போலீஸ் கண்முன்னே கொடூரம்! காஞ்சிபுரம் ஆடித் திருவிழாவில் கதற கதற 2 பேர் வெட்டிக்கொலை!
போலீஸ் கண்முன்னே கொடூரம்! காஞ்சிபுரம் ஆடித் திருவிழாவில் கதற கதற 2 பேர் வெட்டிக்கொலை!
சென்னை விமான நிலையத்தில் ஆசனவாயில் மறைத்த ரூ.3 கோடி தங்கம் சிக்கியது எப்படி?
சென்னை விமான நிலையத்தில் ஆசனவாயில் மறைத்த ரூ.3 கோடி தங்கம் சிக்கியது எப்படி?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
Director Cheran: ”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
Aavin Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
உழைக்கும் வர்க்கத்தின் தோழன்... ஹெவி ஃபெர்பார்மன்ஸ் பண்ணும் TVS XL 100 Heavy Duty வாங்கலாமா?
உழைக்கும் வர்க்கத்தின் தோழன்... ஹெவி ஃபெர்பார்மன்ஸ் பண்ணும் TVS XL 100 Heavy Duty வாங்கலாமா?
TN Weather News: இன்றைய கனமழை எச்சரிக்கை..! எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இன்றைய கனமழை எச்சரிக்கை..! எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
IND vs SL 1st Test: சுருண்ட இலங்கை.. இமாலய இலக்கை நிர்ணயிக்குமா இந்தியா? வெற்றி வசப்படுமா?
IND vs SL 1st Test: சுருண்ட இலங்கை.. இமாலய இலக்கை நிர்ணயிக்குமா இந்தியா? வெற்றி வசப்படுமா?
Hybrid SUV: இனி பட்ஜெட்டில் ஸ்ட்ராங்கான ஹைப்ரிட்னா நாங்க தான்..! பட்டையை கிளப்பும் 3 எஸ்யுவிக்கள் - முழு விவரம்
இனி பட்ஜெட்டில் ஸ்ட்ராங்கான ஹைப்ரிட்னா நாங்க தான்..! பட்டையை கிளப்பும் 3 எஸ்யுவிக்கள் - முழு விவரம்
Trump Threatens Oman: “குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்
“குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்"; ஓமனுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை; எதற்காக.?
Embed widget