மேலும் அறிய

'மாஸ்டர்' பட பாணியில் குட்கா விற்பனை ; கோவையில் 2 கடைகளுக்கு சீல்

பள்ளி மாணவர்களின் கையில் A, B, என்ற எழுத்துகளின் குறியீடு இருந்தால் மட்டுமே குட்கா விற்பனை செய்ததாகவும், தினம் ஒரு எழுத்து மாற்றி விற்பனை செய்து வந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது”

கோவை காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் கோவை மாவட்டத்தில் புறநகர் இயங்கும் காவல் துறை ரோந்து வாகனங்களில், அதி நவீன தொழில்நுட்ப வசதியுடன் கூடிய கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. எல்.அண்ட்.டி குழுமம் சார்பில் இந்த கேமரா, காவல் துறை ரோந்து வாகனத்தின் முன்புறம் மற்றும் பின்புறத்தில் பொருத்தப்பட்டுள்ளது. இதில் 2TB Hard Disk  பொருத்தப்பட்டுள்ளது. இதிலிருந்து, காவல் துறை கட்டுப்பாடு அறையுடன் இணைத்து வீடியோ காட்சிகளைப் பார்க்கும் வசதியும் வாகனத்திலேயே ஒரு Displayவும் பொருத்தப்பட்டு உள்ளது. இன்று முதற்கட்டமாக 18 ரோந்து வாகனங்களை கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் இன்று உரிய காவல் நிலையத்திற்கு வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காவல் துறையின் மூன்றாவது கண்ணாக இந்த கேமராக்கள் செயல்படும் என்றும், ஐ.ஆர். விஷன், ஜிபிஎஸ் வசதிகளுடன் கூடிய இந்த கேமராவில் பதிவாகும் காட்சிகள் 45 நாட்களுக்கு சேமிக்கும் திறன் உள்ளதாகவும் கூறினார். அடுத்த கட்டமாக காவல் துறையின் இருசக்கர ரோந்து வாகனங்களிலும், கேமரா பொறுத்தபடும் ஆலோசிக்கப்படுவதாக தெரிவித்தார். தற்போது கோவை மாவட்டத்தின் புறநகர் பகுதிகளில் 11 ஆயிரம் கேமராக்கள் இயக்கத்தில் இருப்பதாகவும், இதன் மூலம் குற்ற சம்பவங்கள் குறைந்து இருப்பதாக தெரிவித்தார். குற்றவாளிகளை எளிதில் அடையாளம் கண்டு பிடிப்பதற்கும், இந்த கண்காணிப்பு கேமராக்கள் பெரும் உதவியாக இருப்பதாக தெரிவித்தார்.

மாஸ்டர்' பட பாணியில் குட்கா விற்பனை ; கோவையில் 2 கடைகளுக்கு சீல்

பைக் சாகசங்களில் ஈடுபட்ட  வாலிபர்களை அழைத்து, எச்சரிக்கை விடுத்திருப்பதால் கடந்த நாட்களில் சமூக வலைத்தளங்களில் பைக் சாகச காட்சிகள் பதிவிடுவது தவிர்க்கப்பட்டுள்ளதாக கூறினார். ஆன்லைன் குற்றங்கள் அதிகரித்திருப்பதாக தெரிவித்த அவர், இந்த ஆண்டில் மட்டும் ஆன்லைன் மோசடி தொடர்பாக 2500 புகார்கள வந்துள்ளதாக கூறினார். ஆன்லைன் மோசடி பேர்வழிகள், ஐடி துறையில் பணிபுரிவர்களை குறிவைத்து மோசடியில் ஈடுபடுவது அதிகரித்துள்ளது என்றார். கேரளா மாநிலத்திலிருந்து கோவை மாவட்டத்திற்குள், மாவோயிஸ்டுகள் ஊடுருவாமல் தடுக்கும் விதமாக 14 செக்போஸ்ட்கள் அமைக்கப்பட்டு 24 மணி நேர கண்காணிப்பு நடைபெறுவதாக தெரிவித்தார். நக்சல் தடுப்பு குழுவினர் மலை கிராமங்களில் தொடர்  ரோந்து பணியில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்தார்.

உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுடன் இணைந்து, கோவை மாவட்டம் முழுவதும் நாள்தோறும் புகையிலை, குட்கா வேட்டையில் ஈடுபட்டு வருகிறோம், கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களை குறி வைத்து சில்லறை வியாபாரிகள் கஞ்சா, குட்கா விற்பனை நடைபெறுகிறது. தினந்தோறும் புகையிலை வியாபாரிகள் ஒரு குறியீட்டுடன், குறிப்பிட்ட அடையாளத்துடன் வந்தால் தான் புகையிலை, குட்கா விற்பதாக தெரிவித்தார். பள்ளி மாணவர்களின் கையில் A, B, என்ற எழுத்துகளின் குறியீடு இருந்தால் மட்டுமே குட்கா விற்பனை செய்ததாகவும், தினம் ஒரு எழுத்து மாற்றி விற்பனை செய்து வந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார். கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களே இதுபோன்ற புகையிலை, குட்கா விற்பனை குறித்து போலீசுக்கு உபயோகமான தகவல்கள் கொடுப்பதாக மாணவர்களை பாராட்டினார். பள்ளி மாணவர்களுக்கு குட்கா விற்பனை செய்து வந்த 2 கடைகளுக்கு சீல் வைத்து உள்ளதாகவும், டன் கணக்கில் குட்கா பிடிப்பதும், 10 பாக்கெட் வைத்திருந்தாலும் பிடிப்பது தான் முக்கியம் எனத் தெரிவித்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
"மாவீரம் போற்றுதும்" மாவீரர் தினத்தை நினைவுகூர்ந்த தவெக தலைவர் விஜய்!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
"BJP சொல்வதுதான் ஃபைனல்" உருக்கமாக பேசிய ஷிண்டே.. முதல்வர் பதவி ரேஸில் இருந்து விலகிய சிவசேனா!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

விஜய்யை தாக்கிய வெற்றிமாறன்! பின்னணியில் திமுக? கொந்தளிக்கும் தவெகவினர்”குறுக்க வர மாட்டோம்” மோடிக்கு CALL பண்ண ஷிண்டே! சோகத்தில் சிவசேனா”இவர் தான் என் காதலர்”மதம் மாறும் கீர்த்தி சுரேஷ்? கிறித்தவ முறைப்படி திருமணம்திமுக பக்கம் சாயும் நயினார்! EPS கொடுத்த அசைன்மெண்ட்! நேரில் சென்ற SP வேலுமணி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
"மாவீரம் போற்றுதும்" மாவீரர் தினத்தை நினைவுகூர்ந்த தவெக தலைவர் விஜய்!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
"BJP சொல்வதுதான் ஃபைனல்" உருக்கமாக பேசிய ஷிண்டே.. முதல்வர் பதவி ரேஸில் இருந்து விலகிய சிவசேனா!
Fengal Cyclone: நாளை 16 மாவட்டங்களில் கனமழை.! அடுத்த 5 நாட்களுக்கும் கனமழை இருக்கு; லிஸ்ட் இதோ.!
Fengal Cyclone: நாளை 16 மாவட்டங்களில் கனமழை.! அடுத்த 5 நாட்களுக்கும் கனமழை இருக்கு; லிஸ்ட் இதோ.!
Salem Power Shutdown: சேலத்தில் நாளை (28.11.2024) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது மக்களே
சேலத்தில் நாளை (28.11.2024) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது மக்களே
Sabarimala: ஐயப்ப பக்தர்களே பம்பை நதிக்கரையிலிருந்தும் இருமுடி கட்டி செல்லலாம் -  புது அறிவிப்பு இதோ
ஐயப்ப பக்தர்களே பம்பை நதிக்கரையிலிருந்தும் இருமுடி கட்டி செல்லலாம் - புது அறிவிப்பு இதோ
Suriya 45 : தோல்வியில் இருந்து மீளும் சூர்யா...கோயம்புத்தூரில் பூஜையுடன் தொடங்கியது சூர்யா 45 படப்பிடிப்பு
Suriya 45 : தோல்வியில் இருந்து மீளும் சூர்யா...கோயம்புத்தூரில் பூஜையுடன் தொடங்கியது சூர்யா 45 படப்பிடிப்பு
Embed widget