மேலும் அறிய

VJ Chithra : சின்னத்திரை நடிகை சித்ரா மரணவழக்கில் குற்றப்பத்திரிக்கையை ரத்துசெய்ய முடியாது; சென்னை உயர்நீதிமன்றம்

சின்னத்திரை நடிகை சித்ரா மரண வழக்கில் கணவர் ஹேமநாத் மீதான குற்றப்பத்திரிக்கையினை ரத்து செய்ய முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சிதரா மரண வழக்கு: சின்னத்திரை நடிகை சித்ரா மரண வழக்கில் கணவர் ஹேம்நாத் மீதான குற்றப்பத்திரிக்கையினை ரத்து செய்ய முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

பிரபல முன்னணி தமிழ் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து வந்த நடிகை சித்ரா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் என சொல்லப்பட்டது. சித்ராவின் பெற்றோர் சித்ராவின் மரணத்தில் சந்தேகம் உள்ளது என வழக்கு தொடர்ந்த நிலையில், சித்ராவின் கணவர் ஹேம்நாத் மீதும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

தன்மீதான குற்றப்பத்திரிக்கையினை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார் ஹேம்நாத். இதனை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ஹேம்நாத் மீதான குற்றப்பத்திரிக்கையினை ரத்து செய்ய முடியாது என தீர்ப்பளித்து, வழக்கையும் தள்ளுபடி செய்துள்ளது. 

சின்னத்திரை நடிகை சித்ரா மரணத்தில் தன் மீதான குற்றப்பத்திரிகையை ரத்து செய்யக்கோரி கணவர் ஹேம்நாத் தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

சின்னத்திரை நடிகை சித்ராவின் மரணம் தொடர்பாக ஹேம்நாத் உள்ளிட்டோர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில் தன் மீதான குற்றப்பத்திரிகையை ரத்து செய்யக் கோரி வழக்கு தொடர்ந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், காவல்துறை விசாரணைக்கு தடை விதித்தும், மனு தொடர்பாக காவல்துறை பதிலளிக்கவும் உத்தரவிட்டிருந்தது. ஹேம்நாத் மீதான வழக்கை ரத்து செய்யக் கூடாது என இடையீட்டு மனுவை சித்ராவின் தந்தை காமராஜ் தாக்கல் செய்திருந்தார்.

அவரது வாதத்தில், மகள் சித்ராவின் முகத்தில் காயங்கள் காணப்பட்டதால், ஹேம்நாத்தை சந்தேகிப்பதாகவும்,  நாடகத்தில் சக நடிகர்களுடன் நெருக்கமாக நடிக்க கூடாது என சித்ரவதை செய்த ஹேம்நாத்தால், உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் தனது மகள் சித்ரவதை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

மேலும் சித்ரா வீட்டில் இல்லாத நேரத்தில் தனது பெண் தோழிகளை வீட்டிற்கு ஹேம்நாத் அழைத்து வந்துள்ளதாகதாகவும், இருவரும் ஒன்றாக இருக்கும் போதுதான் தனது மகள் தற்கொலை செய்துள்ளதாகவும் காமராஜ் தனது வேதனையை வெளிப்படுத்தப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி சதீஷ்குமார் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ஹேம்நாத் தரப்பில் சித்ரா குடும்பத்தில் அவர் மட்டுமே வருமானம் ஈட்டுபவராக இருந்தார் என்றும், குடும்ப செலவுக்காக சித்ராவை மட்டுமே நம்பியிருந்ததை சித்ராவின் தாய் பலமுறை கூறியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. தங்களுக்குள் எவ்வித பிரச்சினையும் ஏற்பட்டதில்லை என்றும், வரதட்சணை எதுவும் கேட்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. சித்ராவை தாக்கியதாக கூறுவது தவறு என்றும், அவரது தற்கொலை தான் என்றும் தெரிவிக்கபட்டது.

மேலும், சித்ராவின் மரணத்தில் முன்னாள் அமைச்சர்கள் இருவர் சம்பந்தப்பட்டுள்ளதாகவும், ஆனால் என்னவென்று எனக்கு முழுமையாக தெரியவில்லை என்றும் ஹேம்நாத் தரப்பில் வாதிட்டபோது, நீதிபதி குறுக்கிட்டு, அந்த அடிப்படையில் இந்த குற்றச்சாட்டை கூறுகிறீர்கள் என கேள்வி எழுப்பினார்.

அவர்களுக்கு தொடர்பு இல்லையென்றால் இந்த விவகாரத்தில் ஏன் என்னை இந்த அளவுக்கு சிக்க வைக்க வேண்டும் என்றும், சித்ராவின் கணவர் என்பதாலேயே கொலை குற்றச்சாட்டு சுமத்தக்கூடாது என்றும், தற்கொலை செய்து கொண்ட இடத்தில் என்ன நடந்தது என்று கூட தெரியாது என ஹேம்நாத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, நடிகை சித்ராவின் மரணம் தொடர்பான வழக்கில் ஹேம்நாத் மீதான குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரம் உள்ளதால் குற்றப்பத்திரிகையை ரத்து செய்ய முடியாது என கூறி, அவரது மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார். மேலும் விசாரணை நீதிமன்றத்தில் விசாரணையை எதிர்கொள்ள உத்தரவிட்டுள்ளார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூடிபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

அதிகாரிகளை மிரளச் செய்த ரேஷன் அரிசி கடத்தல்! லாரியுடன் அரிசி மூட்டைகள் பறிமுதல்.. ஒருவர் கைது.
அதிகாரிகளை மிரளச் செய்த ரேஷன் அரிசி கடத்தல்! லாரியுடன் அரிசி மூட்டைகள் பறிமுதல்.. ஒருவர் கைது.
ஈசிஆர் சாலையில் தொடர் ஆடு திருட்டு !! கறிக்கடை உரிமையாளர் உள்பட 3 பேர் அதிரடி கைது
ஈசிஆர் சாலையில் தொடர் ஆடு திருட்டு !! கறிக்கடை உரிமையாளர் உள்பட 3 பேர் அதிரடி கைது
DMK MLA: மாற்றுத்திறனாளி நிலத்தை அபகரித்த திமுக எம்.எல்.ஏ.,? கடையநல்லூர் ராஜேந்திரன் மீது வழக்குப்பதிவு
மாற்றுத்திறனாளி நிலத்தை அபகரித்த திமுக MLA? கடையநல்லூர் ராஜேந்திரன் மீது வழக்குப்பதிவு
விழுப்புரத்தில் அடுத்தடுத்து 2 கடைகளில் கொள்ளை! ரூ.7.10 லட்சம் பணம் அபேஸ்; CCTV ஹார்டு டிஸ்க்குகளும் மாயம்!
விழுப்புரத்தில் அடுத்தடுத்து 2 கடைகளில் கொள்ளை! ரூ.7.10 லட்சம் பணம் அபேஸ்; CCTV ஹார்டு டிஸ்க்குகளும் மாயம்!

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Weather Update: அடுத்த 2 வாரம் மிரட்டப்போகும் மழை.. சென்னை தப்புமா? - வெதர்மேன் கொடுத்த அப்டேட்!
Weather Update: அடுத்த 2 வாரம் மிரட்டப்போகும் மழை.. சென்னை தப்புமா? - வெதர்மேன் கொடுத்த அப்டேட்!
10 கோயில்களில் அமல்.. கோயில் அன்னதான திட்டத்தில் வெளியான சூப்பர் அப்டேட்.. நோட் பண்ணுங்க!
10 கோயில்களில் அமல்.. கோயில் அன்னதான திட்டத்தில் வெளியான சூப்பர் அப்டேட்.. நோட் பண்ணுங்க!
BS-VII: 3 கட்டங்களாக அமலுக்கு வரும் BS-VII - ஆரம்பமே கார்கள் தான் டார்கெட் - எந்தெந்த SUV-களுக்கு ஆப்பு? உமிழ்வு விதிகள்
3 கட்டங்களாக அமலுக்கு வரும் BS-VII - ஆரம்பமே கார்கள் தான் டார்கெட் - எந்தெந்த SUV-களுக்கு ஆப்பு? உமிழ்வு விதிகள்
TN Govt: கிடுகிடுவென உயர்ந்த விலை..! சன்னரக அரிசியை ரூ.50-க்கு விற்க தமிழக அரசு முடிவு? மக்கள் ஹாப்பி
கிடுகிடுவென உயர்ந்த விலை..! சன்னரக அரிசியை ரூ.50-க்கு விற்க தமிழக அரசு முடிவு? மக்கள் ஹாப்பி
Chennai Water: சென்னை குடிநீர் பிரச்னைக்கான தீர்வு..! 98KM, 9 நிலையங்கள், ரூ.3,108 கோடி பட்ஜெட் - இணையும் நீராதாரங்கள்
சென்னை குடிநீர் பிரச்னைக்கான தீர்வு..! 98KM, 9 நிலையங்கள், ரூ.3,108 கோடி பட்ஜெட் - இணையும் நீராதாரங்கள்
Mamata Banerjee: மமதா பானர்ஜியை கத்தியால் குத்த முயன்ற பெண்.. திட்டமிட்ட சதியா? .. தேசிய அளவில் பரபரப்பு!
Mamata Banerjee: மமதா பானர்ஜியை கத்தியால் குத்த முயன்ற பெண்.. திட்டமிட்ட சதியா? .. தேசிய அளவில் பரபரப்பு!
Honda Electric SUV: க்ரேட்டா, விட்டாராவை நான் அடிக்கிறேன்..! டிச.2, முதல் EV-ஐ இறக்கும் ஹோண்டா - பட்ஜெட்டில் SUV
க்ரேட்டா, விட்டாராவை நான் அடிக்கிறேன்..! டிச.2, முதல் EV-ஐ இறக்கும் ஹோண்டா - பட்ஜெட்டில் SUV
TN Weather News: சென்னையில் தொடங்கிய மழை - இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் தொடங்கிய மழை - இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
Embed widget