சென்னை அருகே இலங்கை வாலிபர் கைது - என்ஐஏ போலீசார் தீவிர விசாரணை
கேளம்பாக்கம் அருகே அனுமதியின்றி தங்கியிருந்த இலங்கை வாலிபர் கைது.
சென்னை அருகே கேளம்பாக்கத்தை அடுத்துள்ள தையூர் பகுதியில் வீடு ஒன்றில் இலங்கை வாலிபர் குடியிருப்பதாக கூறி, தேசிய புலனாய்வு முகமை போலீஸ் இன்ஸ்பெக்டர் எபிசன் பிரோன்கோ தலைமையிலான குழுவினர் இன்று காலை அவரது வீட்டை முற்றுகையிட்டனர்.
இதையடுத்து கேளம்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் தலைமையிலான போலீசார் அப்பகுதிக்கு சென்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து தேசிய புலனாய்வு முகமை போலீஸ் இன்ஸ்பெக்டர் எபிசன் பிரோன்கோ தலைமையிலான குழுவினர் அந்த வீட்டிற்குள் சென்று அதில் குடியிருந்த வாலிபரிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அந்த வாலிபரின் பெயர் முகமது பைசல் (43) என்பதும் இலங்கை கொழும்பு நகரத்தைப் பூர்வீகமாய் கொண்டவர் என்பதும் தெரிய வந்தது.
4 ஆண்டுகளுக்கு முன்பு தில்லியில் தங்கி இருந்தபோது தேசிய புலனாய்வு முகமை போலீசார் முகமது பைசல் மீது வழக்கு பதிவு செய்திருப்பதும் தெரிய வந்தது. இதனிடையே தில்லியை விட்டு வெளியேறிய முகமது பைசல் பின்னர் தமிழ்நாட்டிற்கு வந்து ஓ.எம்.ஆர். சாலையில் கழிப்பட்டூர் பகுதியில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் மனைவி, மகனுடன் தங்கி இருந்ததும் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு தையூர் பகுதிக்கு வந்ததும் தெரிய வந்தது.
அண்மையில் தேசிய புலனாய்வு முகமையால் கைது செய்யப்பட்ட கும்பலில் இருந்த ஒரு நபருடன் முகமது பைசல் அண்மையில் செல்போனில் பேசியதை அடுத்து அதன் மூலம் என்.ஐ.ஏ. போலீசார் விசாரணை மேற்கொண்டதாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து வீட்டில் இருந்த லேப்டாப், செல்போன், இலங்கை பாஸ்போர்ட் ஆகியவற்றை கைப்பற்றிய போலீசார் முகமது பைசலை தங்களுடன் அழைத்துச் சென்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து NIA வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் சென்னை கேளம்பாக்கம் தையூர் பகுதியில் இலங்கையைச் சேர்ந்த நபர் ஒருவர் வீட்டில் பதுங்கி இருப்பதாக தகவல் வெளியாகியது. உடனடியாக அவருடைய வீட்டிற்கு சென்று தீவிர சோதனை மேற்கொண்டோம். சோதனை செய்ததில் அந்த நபருக்கு சட்டவிரோதமான போதைப்பொருள் மற்றும் ஆயுதம் கடத்தல் சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்தது. இவர் இந்தியா மற்றும் இலங்கையில் போதை மற்றும் ஆயுதங்களை கடத்தி வந்துள்ளார். இந்த மாபியா கும்பல் ஆனது குணசேகரன் மற்றும் புஷ்பராஜ் என்கிற பூக்குட்டி கண்ணன் ஆகியோர் தலைமையில் இயங்கும் குழுவின் கீழ் இயங்கி வருவதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் சில முக்கிய டிஜிட்டல் ஆதாரங்களை கைப்பற்றியுள்ளதாகவும், முழுமையாக விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தனர்.
மேலும் படிக்க: Nancy Pelosi Visits: சீறிப்பாய்ந்த சீனாவின் 20 ராணுவ விமானங்கள்! கட்டுப்பாட்டில் தைவானின் வான்பாதுகாப்பு மண்டலம்? உச்சக்கட்ட பரபரப்பு!
இலங்கையின் ஆட்சி கவிழ்ப்பு முன்னரே தெரியும்; கோத்தபயவுக்கு இந்தியா விசா மறுத்தது உண்மை - பரபரப்பை கிளப்பும் கீர்த்தி
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்