மேலும் அறிய
சென்னை: பேச மறுத்த ஆண் நண்பர்: இளம் பெண் தற்கொலை.. கடிதத்தில் இருந்தது என்ன?
வளசரவாக்கத்தில் நண்பர் பேசுவதை தவிர்த்து வந்ததால் இளம் பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வளசரவாக்கம்
சென்னை வளசரவாக்கம், பழனியப்பா நகர் பகுதியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணராவ் (53), சினிமா துறையில் கேமரா மேனாக பணிபுரிந்து வருகிறார். இவரது மகள் அரிதா ராஜேஸ்வரி(25), பட்டப்படிப்பு முடித்த இவர் வீட்டில் மாணவர்களுக்கு டியூஷன் எடுத்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு தனது அறைக்குள் சென்ற அரிதா ராஜேஸ்வரி நீண்ட நேரம் ஆகியும் வெளியே வராததால் அவரது பெற்றோர் உள்ளே, சென்று பார்த்தபோது அரிதா ராஜேஸ்வரி தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து வளசரவாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கபட்டது. தகவல் அறிந்து வளசரவாக்கம் இன்ஸ்பெக்டர் ஆபிரகாம் குரூஸ் தலைமையில் விரைந்து வந்த போலீசார் இறந்து போன அரிதாராஜேஷ்வரி உடலை மீட்டு பிரதே பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் அரிதா ராஜேஸ்வரி கோடம்பாக்கத்தை சேர்ந்த மதுமோகன் என்பவரிடம் நண்பராக பழகி வந்ததாகவும், மதுமோகனுக்கு அதிகமான கடன் பிரச்சினை இருந்து வந்ததால், கடந்த சில வாரங்களாக அரிதா ராஜேஸ்வரிடம் பேசுவதை தவிர்த்து வந்ததாக கூறப்படுகிறது.

மேலும் படித்து விட்டு அரசு வேலை சம்பந்தமான தேர்வு எழுதுமாறு கூறியதாகவும், இதனால் மிகுந்த மன உளைச்சலில் அரிதாராஜேஷ்வரி இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் தனது தற்கொலைக்கு யாரும் காரணம் இல்லை என எழுதி வைத்திருப்பதாக போலீசார் தெரிவித்தனர். அரிதா ராஜேஸ்வரியின் தற்கொலைக்கு காரணம் என்ன என்பது குறித்து, வளசரவாக்கம் போலீசார் தீவிரமாக விசாரணை, செய்து வரும் நிலையில் அவரது நண்பரிடம் விசாரணை செய்ய வேண்டும் என அவரது தந்தை புகார் தெரிவித்துள்ளார். இது குறித்தும் வளசரவாக்கம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இளம் பெண் தற்கொலை விவகாரம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
எந்த ஒரு பிரச்னைக்கு தற்கொலை தீர்வாகாது. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு மாற்றம் ஏற்பட கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசவும்.
மாநில உதவிமையம் : 104
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -2464005
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement


612
Active
28518
Recovered
157
Deaths
Last Updated: Sun 13 July, 2025 at 12:57 pm | Data Source: MoHFW/ABP Live Desk
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
உலகம்
அரசியல்
Advertisement
Advertisement