மேலும் அறிய

RK Suresh Aarudhra Gold : ஆருத்ரா வழக்கின் நிலவரம் என்ன? 15 கோடி ரூபாய் வரை பேரம் பேசி ஆர்கே சுரேஷ் வாங்கியதாக குற்றப்பத்திரிகையில் தகவல்.!

நடிகர் ஆர்கே சுரேஷ் 15 கோடி ரூபாய் பேரம் பேசி வாங்கியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது..

தமிழகத்தை உலுக்கிய நிதி நிறுவன மோசடிகள்

ஆருத்ரா, ஹிஜாவு, ஐஎஃப்எஸ், எல்பின் உள்ளிட்ட 8 பெரிய நிதி நிறுவனங்கள் தமிழகம் முழுவதும் 2.91 லட்சத்துக்கும் மேற்பட்ட முதலீட்டாளர்களிடமிருந்து ரூ.14,168 கோடி வசூலித்து மோசடியில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. மோசடி நிதி நிறுவன நிர்வாகிகள், முகவர்கள் உட்பட 45 பேரைக் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

இதில் ஆருத்ரா என்ற நிதி நிறுவனம், 1,09,285 முதலீட்டாளர்களிடமிருந்து 2,438 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளது. இந்த வழக்கில் கடந்த ஒருமாதத்தில் மாலதி, மைக்கேல் ராஜ், ஹரிஷ், ராஜ செந்தாமரை, சந்திர கண்ணன் ஆகியோர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 

இந்த மோசடியில் திரைப்பட நடிகர், தயாரிப்பாளர் மற்றும் தமிழக பா.ஜ.கவின் ஓ.பி.சி. பிரிவு துணை தலைவராக இருக்கும் ஆர்.கே.சுரேசுக்கும், பா.ஜ.கவின் நிர்வாகி ஹரீஷ் ஆகியோருக்கும் தொடர்பிருந்த்து கண்டுபிடிக்கப்பட்டது

சொத்துக்கள் முடக்கம்

மோசடி செய்யப்பட்ட பணத்தில் இதுவரை ரொக்கமாக 5 கோடியே 69 லட்சம் ரூபாயும், 1 கோடியே 13 லட்சம் மதிப்பிலான தங்கம், வெள்ளிப் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன. நிறுவனத்தின் வங்கிக் கணக்கில் இருந்த 96 கோடி ரூபாய் முடக்கப்பட்டதுடன், கைது செய்யப்பட்டவர்களின் 97 கோடி ரூபாய் மதிப்புடைய அசையா சொத்துக்களும் கண்டறியப்பட்டு முடக்கப்பட்டுள்ளது.

பணத்தை திருப்பிக் கொடுத்த நடவடிக்கை

ஆருத்ராவில் முக்கிய ஏஜென்ட்களாக பணியாற்றியவர்களின் பட்டியலை சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், சரி பார்த்து சுமார் 2000 பேர் வரை ஏஜெண்டர்களாக பணியாற்றி வந்தது தெரிய வந்துள்ளது. இவற்றில் 200 ஏஜெண்டுகள் பல கோடி ரூபாய்களை முதலீடுகளாக பெற்று, ஆருத்ரா நிதி நிறுவனத்தில் முதலீடு செய்ததும் விசாரணையில் கண்டுபிடித்துள்ளனர். முதல்கட்டமாக அதிக பணம் வசூலித்த 200 பேரை கண்டறிந்து தேவை ஏற்பட்டால் அவர்களை கைது செய்யவும், அதிக பணம் வசூலித்த 200 முகவர்களிடம் 30% பணத்தை திரும்ப பெற வாய்ப்பு உள்ளதாகவும் குற்றப்பிரிவு போலீஸ் தெரிவித்துள்ளது.

நடிகர் ஆர்.கே. சுரேஷ் சிக்கியது எப்படி ? 

முன்னதாக, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஆருத்ரா வழக்கில் கைது செய்யப்பட்ட காஞ்சிபுரத்தைச் சேர்ந்த கைதான, ரூசோ நடிக்கும் திரைப்படத்தை ஆர்.கே. சுரேஷ் தயாரிப்பதும் சந்தேகத்தை காவல்துறையினருக்கு ஏற்படுத்தி வந்தது. இந்நிலையில் தன்னை குட்டி பிரபலமாக நினைத்துக் கொண்டு சுற்றி திரிந்த ரூசோவிடம், விசாரணை மேற்கொண்டதில் அதிர்ச்சி தகவல் வெளியானது, ஆர்.கே. சுரேஷ் பாஜகவில் முக்கிய பொறுப்பில் இருப்பதால், இந்த வழக்கில் இருந்து , தானும் தனது நண்பர்களும் எப்படியாவது தப்பிக்க வேண்டும் என்பதற்காக, 12 கோடி ரூபாய் கொடுத்துள்ளார். மேலும் , இன்னும் சில கோடிகளை செலவு செய்தால், இந்த வழக்கை ஒன்றும் இல்லாமல் செய்துவிடலாம் என ஆர் .கே சுரேஷ் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் ரூஸோ கைதான தகவலை அறிந்தவுடன், நடிகர் சுரேஷ், துபாய் சென்று தலைமறைவாகியுள்ளார். இந்த வழக்கில் சுரேஷ் சம்பந்தப்பட்டிருப்பது, உறுதியாகியுள்ளதாக, பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்

குற்றப்பத்திரிகை தாக்கல்

இந்த வழக்கில் டான்பிட் நீதிமன்றம் எனப்படும் தமிழ்நாட்டு முதலீட்டார்கள் பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றத்தில், பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை தரப்பில், அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் டி.பாபு சில நாட்களுக்கு முன்பு குற்றப்பத்திரிக்கை ஒன்றை தாக்கல் செய்துள்ளார். வழக்கறிஞர் டி.பாபு தாக்கல் செய்த 50 பக்க அளவிலான குற்றப்பத்திரிக்கையில், முதற்கட்டமாக 360 புகார்களில் தொடர்புடைய 17 கோடியே 50 லட்சம் ரூபாய் மோசடி குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வழகிற்கு தொடர்புடைய 3,000 பக்கம் அளவிலான கூடுதல் ஆவணங்களை ஒரு நாட்களில் தாக்கல் செய்யப்படும் என கூறப்படுகிறது.

அடுத்த கட்ட நகர்வு 

500 முகவர்கள் முதல் கட்டமாக, அடையாளம் காணப்பட்டு அவர்கள் இதுவரை 800 கோடி ரூபாய் வரை பொதுமக்களிடம் முதலீடுகளைப் பெற்றதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர்களுக்கு சமன் அனுப்பி விசாரிக்க பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முடிவு செய்துள்ளனர். தேவைப்பட்டால் அவர்களை கைது செய்தும் அவர்களுடைய பணம் மற்றும் சொத்துக்களை பறிமுதல் செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே போன்று நடிகர் ஆர் கே சுரேஷ், 15 கோடி ரூபாய் வரை பேரம் பேசி ஆருத்ரா நிதி நிறுவன முகவர்களிடமிருந்து பணத்தை பெற்றதும் விசாரணையில் தெரிய வந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்கு காஞ்சிபுரத்தை சேர்ந்த ரூசோ மிக முக்கிய காரணமாக இருந்து உள்ளதாகவும் காவல்துறையினர்.

தொடர்ந்து விசாரணை முடிந்தவுடன் ஒவ்வொரு கால இடைவெளிகளிலும் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை 360 புகார்கள் மீது விசாரணை நடத்தப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பொழப்ப பாப்போம்.. சென்னைக்கு ரிட்டர்ன் ஆகும் வெளியூர்வாசிகள்! திணறும் சாலைகள்!
பொழப்ப பாப்போம்.. சென்னைக்கு ரிட்டர்ன் ஆகும் வெளியூர்வாசிகள்! திணறும் சாலைகள்!
தமிழகத்தில் வானிலை மாற்றம் !! அடுத்த 48 மணி நேரத்தில் என்ன நடக்கும் ? வானிலை மையம் எச்சரிக்கை
தமிழகத்தில் வானிலை மாற்றம் !! அடுத்த 48 மணி நேரத்தில் என்ன நடக்கும் ? வானிலை மையம் எச்சரிக்கை
33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
ஆழத்தில் மறைந்திருக்கும் அதிசயம்! எவரெஸ்ட் சிகரமே மூழ்கும்! மரியானா அகழியின் சுவாரஸ்யம்
ஆழத்தில் மறைந்திருக்கும் அதிசயம்! எவரெஸ்ட் சிகரமே மூழ்கும்! மரியானா அகழியின் சுவாரஸ்யம்
ABP Premium

வீடியோ

AR Rahman controversy | எதிர்த்து நிற்கும் பாலிவுட்!
Rahul gandhi meeting | ”எல்லாரும் டெல்லி வாங்க”ராகுலுடன் முக்கிய மீட்டிங்!படையெடுத்த தமிழக காங்கிரஸ்
Alanganallur Jallikattu TVK flag | ஜல்லிக்கட்டில் தவெக கொடி! ”பரிசு கிடையாது வெளிய போ” கண்டித்த கமிட்டி
Soori vs Vijay | ”தவெகவை மீறி படம் ஓடுமா” வம்பிழுத்த நெட்டிசன்! சூரி தரமான பதிலடி!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பொழப்ப பாப்போம்.. சென்னைக்கு ரிட்டர்ன் ஆகும் வெளியூர்வாசிகள்! திணறும் சாலைகள்!
பொழப்ப பாப்போம்.. சென்னைக்கு ரிட்டர்ன் ஆகும் வெளியூர்வாசிகள்! திணறும் சாலைகள்!
தமிழகத்தில் வானிலை மாற்றம் !! அடுத்த 48 மணி நேரத்தில் என்ன நடக்கும் ? வானிலை மையம் எச்சரிக்கை
தமிழகத்தில் வானிலை மாற்றம் !! அடுத்த 48 மணி நேரத்தில் என்ன நடக்கும் ? வானிலை மையம் எச்சரிக்கை
33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
ஆழத்தில் மறைந்திருக்கும் அதிசயம்! எவரெஸ்ட் சிகரமே மூழ்கும்! மரியானா அகழியின் சுவாரஸ்யம்
ஆழத்தில் மறைந்திருக்கும் அதிசயம்! எவரெஸ்ட் சிகரமே மூழ்கும்! மரியானா அகழியின் சுவாரஸ்யம்
Study Tips: தேர்வு பயம் இனி வேண்டாம்! 140 ஆண்டு ஜெர்மன் உத்தி: மறதியை விரட்டும் சூப்பர் டிப்ஸ்! மாணவர்கள் கவனத்திற்கு!
Study Tips: தேர்வு பயம் இனி வேண்டாம்! 140 ஆண்டு ஜெர்மன் உத்தி: மறதியை விரட்டும் சூப்பர் டிப்ஸ்! மாணவர்கள் கவனத்திற்கு!
Sastra University: சாஸ்த்ரா பல்கலை. விவகாரம்: ஏழைகளுக்கு ஒரு நீதி, கல்வி வியாபாரிகளுக்கு வேறு நீதியா? மார்க்சிஸ்ட் கேள்வி!
Sastra University: சாஸ்த்ரா பல்கலை. விவகாரம்: ஏழைகளுக்கு ஒரு நீதி, கல்வி வியாபாரிகளுக்கு வேறு நீதியா? மார்க்சிஸ்ட் கேள்வி!
சிங்கிள் சார்ஜில் 146 கி.மீட்டர் மைலேஜ்.. OLA S1 Z இ ஸ்கூட்டரின் விலை, தரம் இதுதான்!
சிங்கிள் சார்ஜில் 146 கி.மீட்டர் மைலேஜ்.. OLA S1 Z இ ஸ்கூட்டரின் விலை, தரம் இதுதான்!
மதுரை டூ சென்னை 4 ஆயிரம்.. தனியார் பேருந்துகள் நடத்தும் கட்டண கொள்ளை - தடுக்கப்போவது யார்?
மதுரை டூ சென்னை 4 ஆயிரம்.. தனியார் பேருந்துகள் நடத்தும் கட்டண கொள்ளை - தடுக்கப்போவது யார்?
Embed widget