மேலும் அறிய

வலி நிவாரணி மாத்திரை டூ போதை ஊசி.. இளைஞர்களுக்கு சப்ளை.. அதிர வைக்கும் சம்பவம்! 3 பேர் கைது

போதை மாத்திரைகளை வாங்கி, அதை தண்ணீரில் கலந்து போதை ஊசியாக மாற்றி கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் ஆட்டோ டிரைவர்களுக்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

சென்னை மாவட்டம் கொடுங்கையூர் பகுதியில் கல்லூரி மாணவர்களுக்கு போதை மாத்திரை மற்றும் ஊசிகளை சிலர் விற்பனை செய்வதாக எம்.கே.பி. நகர் காவல் உதவி ஆணையாளர் தமிழ்வானனுக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து அவரது உத்தரவின் பேரில், கொடுங்கையூர் காவல் துறையினர் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் கொடுங்கையூர் கிருஷ்ணமூர்த்தி நகர், ஜவகர் நகரில் நேற்று சந்தேகத்திற்கு இடமாக வகையில் வந்த வாலிபரை பிடித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அந்த வாலிபரிடம் போதை மாத்திரைகள் இருப்பது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், அந்த வாலிபர் கொளத்தூர் பஜனை கோயில் தெருவை சேர்ந்த சூர்யா (25) என்பது தெரியவந்தது. மேலும் திருவொற்றியூர் சாத்துமா நகரை சேர்ந்த பிரபு (35) என்பவரிடம் போதை மாத்திரைகளை வாங்கி, அதை தண்ணீரில் கலந்து போதை ஊசியாக மாற்றி, கொடுங்கையூர் கிருஷ்ணமூர்த்தி நகரை சேர்ந்த ஜாபர் (29) என்பவருடன் சேர்ந்து கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் ஆட்டோ டிரைவர்களுக்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

இதையடுத்து பிரபு மற்றும் ஜாபரை காவல் துறையினர் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். இதில் பிரபு கடந்த 15 ஆண்டுகளாக சென்னையில் உள்ள பிரபல மருந்தகத்தில் விற்பனை பிரதிநிதியாக பணி புரிந்து வருவதும், அவர் மூலமாக வலி நிவாரணி மாத்திரைகளை வாங்கியதும் தெரியவந்தது. மேலும் 10 மாத்திரைகள் கொண்ட அட்டையினை 400 ரூபாய்க்கு வாங்கி அதனை 800 ரூபாய்க்கு விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து சூர்யா, பிரபு, ஜாபர் ஆகிய 3 பேரையும் காவல் துறையினர் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 582 மாத்திரைகள் மற்றும் ஊசிகளையும் பறிமுதல் செய்தனர்.

இது குறித்து கொடுங்கையூர் சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் ஜார்ஜ் மில்லர் கூறுகையில், “வலி நிவாரணி மாத்திரைகளை சிலர், முறைகேடாக வாங்கி போதை ஊசியாக மாற்றி இளைஞர்களுக்கு விற்பனை செய்து வருகின்றனர். பல மருந்தகங்களில் மருத்துவரின் ஒப்புதல் சீட்டு இல்லாமல் மாத்திரைகளை கொடுப்பதினால் இது போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது. இதனால் மாணவர்கள் பலர் இந்த போதை ஊசி பழக்கத்திற்கு அடிமையாகி வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட பிரபு மெடிக்கல் ஷாப்பில் வேலை செய்வதால், அதை பயன்படுத்தி வலி நிவாரணி மாத்திரைகளை போதைக்காக விற்பனை செய்துள்ளார். எனவே எந்த மெடிக்கல் ஷாப்களில் இருந்து அதிக அளவில் வலி நிவாரணி மாத்திரைகள் விற்கப்படுகிறது என்பது குறித்தும், அவ்வாறு மருத்துவரின் ஒப்புதல் சீட்டு இல்லாமல் வலி நிவாரணி மாத்திரைகளை விற்கும் உரிமையாளரை கைது செய்வதோடு, அந்த மெடிக்கல் ஷாப்பிற்கு சீல் வைக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

மதுரை டூ சென்னை 4 ஆயிரம்.. தனியார் பேருந்துகள் நடத்தும் கட்டண கொள்ளை - தடுக்கப்போவது யார்?
மதுரை டூ சென்னை 4 ஆயிரம்.. தனியார் பேருந்துகள் நடத்தும் கட்டண கொள்ளை - தடுக்கப்போவது யார்?
அமைச்சர் அன்பில் மகேஷை கலாய்த்த ஜீவாவுக்கு கடும் எதிர்ப்பு...விளக்கம் கொடுத்த ஜீவா
அமைச்சர் அன்பில் மகேஷை கலாய்த்த ஜீவாவுக்கு கடும் எதிர்ப்பு...விளக்கம் கொடுத்த ஜீவா
ஆண்களுக்கும் இலவசப் பேருந்துகள்: ஏன் தேவை? பாயிண்ட் பாயிண்டாக பட்டியலிட்ட பாமக!
ஆண்களுக்கும் இலவசப் பேருந்துகள்: ஏன் தேவை? பாயிண்ட் பாயிண்டாக பட்டியலிட்ட பாமக!
Mumbai Mayor: கூட்டணிக்கே விபூதி அடிக்கும் பாஜக? ரிசார்ட் பாலிடிக்ஸை தொடங்கிய ஏக்நாத் - மும்பை யாருக்கு?
Mumbai Mayor: கூட்டணிக்கே விபூதி அடிக்கும் பாஜக? ரிசார்ட் பாலிடிக்ஸை தொடங்கிய ஏக்நாத் - மும்பை யாருக்கு?
ABP Premium

வீடியோ

Rahul gandhi meeting | ”எல்லாரும் டெல்லி வாங்க”ராகுலுடன் முக்கிய மீட்டிங்!படையெடுத்த தமிழக காங்கிரஸ்
Alanganallur Jallikattu TVK flag | ஜல்லிக்கட்டில் தவெக கொடி! ”பரிசு கிடையாது வெளிய போ” கண்டித்த கமிட்டி
Soori vs Vijay | ”தவெகவை மீறி படம் ஓடுமா” வம்பிழுத்த நெட்டிசன்! சூரி தரமான பதிலடி!
ESCAPE ஆன விழா குழுவினர்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மதுரை டூ சென்னை 4 ஆயிரம்.. தனியார் பேருந்துகள் நடத்தும் கட்டண கொள்ளை - தடுக்கப்போவது யார்?
மதுரை டூ சென்னை 4 ஆயிரம்.. தனியார் பேருந்துகள் நடத்தும் கட்டண கொள்ளை - தடுக்கப்போவது யார்?
அமைச்சர் அன்பில் மகேஷை கலாய்த்த ஜீவாவுக்கு கடும் எதிர்ப்பு...விளக்கம் கொடுத்த ஜீவா
அமைச்சர் அன்பில் மகேஷை கலாய்த்த ஜீவாவுக்கு கடும் எதிர்ப்பு...விளக்கம் கொடுத்த ஜீவா
ஆண்களுக்கும் இலவசப் பேருந்துகள்: ஏன் தேவை? பாயிண்ட் பாயிண்டாக பட்டியலிட்ட பாமக!
ஆண்களுக்கும் இலவசப் பேருந்துகள்: ஏன் தேவை? பாயிண்ட் பாயிண்டாக பட்டியலிட்ட பாமக!
Mumbai Mayor: கூட்டணிக்கே விபூதி அடிக்கும் பாஜக? ரிசார்ட் பாலிடிக்ஸை தொடங்கிய ஏக்நாத் - மும்பை யாருக்கு?
Mumbai Mayor: கூட்டணிக்கே விபூதி அடிக்கும் பாஜக? ரிசார்ட் பாலிடிக்ஸை தொடங்கிய ஏக்நாத் - மும்பை யாருக்கு?
TN TRB: நட்டாற்றில் 4 லட்சம் ஆசிரியர்கள்; தேர்வு அட்டவணையை டிஆர்பி உடனே வெளியிடக் கோரிக்கை!
TN TRB: நட்டாற்றில் 4 லட்சம் ஆசிரியர்கள்; தேர்வு அட்டவணையை டிஆர்பி உடனே வெளியிடக் கோரிக்கை!
அரசு ஊழியர்கள் பிப்.3 முதல் தொடர் வேலை நிறுத்தம்; சூளுரைத்த அமைப்பு! அதிர்ச்சியில் அரசு
அரசு ஊழியர்கள் பிப்.3 முதல் தொடர் வேலை நிறுத்தம்; சூளுரைத்த அமைப்பு! அதிர்ச்சியில் அரசு
உங்களுக்கு போட்டியா எங்க அண்ணன் வரான்...ரீல்ஸ் போட்ட சிறுவர்கள்..அனிருத் கொடுத்த பதிலை பாருங்கள்
உங்களுக்கு போட்டியா எங்க அண்ணன் வரான்...ரீல்ஸ் போட்ட சிறுவர்கள்..அனிருத் கொடுத்த பதிலை பாருங்கள்
Hosur Airport: ”நீங்க கேட்டா கொடுக்கணுமா” தமிழக அரசின் முக்கிய கோரிக்கை நிராகரிப்பு - மத்திய அரசின் காரணம்
Hosur Airport: ”நீங்க கேட்டா கொடுக்கணுமா” தமிழக அரசின் முக்கிய கோரிக்கை நிராகரிப்பு - மத்திய அரசின் காரணம்
Embed widget