மேலும் அறிய
நடிகர் ஹிப்ஹாப் தமிழா ஆதி வீட்டின் மீது கல் வீசி தாக்குதல்..! என்ன நடந்தது?
குடிபோதையில் ஹிப்ஹாப் தமிழா ஆதி வீட்டின் மீது கல் வீசி தாக்குதல் நடத்திய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
![நடிகர் ஹிப்ஹாப் தமிழா ஆதி வீட்டின் மீது கல் வீசி தாக்குதல்..! என்ன நடந்தது? chennai panaiyur Two persons have been arrested for throwing stones at a drunken hip hop Tamil Adi house. நடிகர் ஹிப்ஹாப் தமிழா ஆதி வீட்டின் மீது கல் வீசி தாக்குதல்..! என்ன நடந்தது?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/04/27/ab407e257140d2200248e94fa5ad75b4_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
பிரேம்குமார், அர்ஜீன்
இசையமைப்பாளர், பாடகர், நடிகர், பாடலாசிரியர் என பன்முகத் திறமைகளை கொண்டவர் ஹிப்ஹாப் ஆதி. துவக்கத்தில் இசையமைப்பாளராக தனது திரைப்பயணத்தை துவங்கிய இவர் தற்போது நடிகராகவும் கோலிவுட்டில் வலம்வந்துக் கொண்டிருக்கிறார். தயாரிப்பாளராகவும் மாறி தனது படங்களை தயாரித்தும் வருகிறார். மற்ற தயாரிப்புகளிலும் நடித்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளாகவே இவரின் பாடல்கள் மற்றும் படங்கள் இளைஞர்கள் மத்தியில் பேசுபொருள் ஆகியுள்ளது. இசையமைப்பாளராக இருந்து நடிகராக மாறிய இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது. இதையடுத்து ஹிப்ஹாப் ஆதியின் சுந்தர் சியின் ஆம்பள இசைமைத்துள்ள அவர், மீசைய முறுக்கு, நட்பே துணை, நான் சிரித்தால், அன்பறிவு உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
![நடிகர் ஹிப்ஹாப் தமிழா ஆதி வீட்டின் மீது கல் வீசி தாக்குதல்..! என்ன நடந்தது?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/04/27/f75096efda3e8dc483c82c7b595653a4_original.jpg)
இந்நிலையில் சென்னை கிழக்கு கடற்கரை சாலை, பனையூர் சீ கிளிப் அவென்யூ 5-வது டிரைவ் தெருவில் வசித்து வருகிறார் ஹிப்ஹாப் தமிழா ஆதி. அதன்படி இவரது வீட்டின் கதவில் மர்ம நபர்கள் சிலர் குடிபோதையில் கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் ஹிப்பாப் தமிழா ஆதி வீட்டின் கதவு சேதமானது. எதிர் வீட்டில் வசிப்பவர்கள் இதனை கண்டு காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவித்துள்ளனர். போலீசாரை கணடதும் மர்ம நபர்கள் காரை எடுத்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.
![நடிகர் ஹிப்ஹாப் தமிழா ஆதி வீட்டின் மீது கல் வீசி தாக்குதல்..! என்ன நடந்தது?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/04/27/0501d67a8a3924f6a8bc394909744329_original.jpg)
பின்னர் போலீசார் நிகழ்விடத்திற்கு சென்று சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது அங்கு வந்த காரின் பதிவெண்ணை கண்டுபிடித்தனர். அதை வைத்து காரின் உரிமையாளரான அஜய் வாண்டையாரின் வீட்டிற்கு சென்று போலீசார் விசாரித்தனர்.
![நடிகர் ஹிப்ஹாப் தமிழா ஆதி வீட்டின் மீது கல் வீசி தாக்குதல்..! என்ன நடந்தது?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/04/27/d15f62c07d8c9061557004ca10b8bfca_original.jpg)
இந்த விசாரணையில் அவர்கள் அஜய் வாண்டையாரின் ஆக்டிங் டிரைவர் என்பது தெரியவந்தது. பின்னர் வடபழனியை சேர்ந்த பிரேம்குமார் (24), மதுரையை சேர்ந்த அர்ஜீன் (24), ஆகிய இருவரையும் கைது செய்த கானத்தூர் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
அரசியல்
தமிழ்நாடு
விவசாயம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion