சென்னை : தொடர்ச்சியான பப்ஜி விளையாட்டு.. மாணவன் தற்கொலை.. உயிரிழந்தது தெரியாமல் விளையாட அழைத்த நண்பர்கள்..
மாணவர் இறந்தபிறகும் கூட, அவருடைய என்னிற்கு நண்பர்கள் பப்ஜி விளையாட்டு அழைப்பைப் பகிர்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
![சென்னை : தொடர்ச்சியான பப்ஜி விளையாட்டு.. மாணவன் தற்கொலை.. உயிரிழந்தது தெரியாமல் விளையாட அழைத்த நண்பர்கள்.. chennai near tambaram college student dies by suicide after playing pubg video game for hours without intervals சென்னை : தொடர்ச்சியான பப்ஜி விளையாட்டு.. மாணவன் தற்கொலை.. உயிரிழந்தது தெரியாமல் விளையாட அழைத்த நண்பர்கள்..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/05/17/f062752ebc2e9414437c8b5cf5739d55_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
சென்னை தாம்பரம் அடுத்த பெருங்களத்தூர் பீர்க்கன்காரணை, அம்மன் கோவில் தெரு சேர்ந்தவர் ராகவன். இவர் கார் ஓட்டுநராக பணியாற்றி வருகின்றனர். இவருக்கு 3 பையன்கள். இரண்டாவது மகன் அருண்குமார் கிண்டியில் உள்ள பிரபல தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். அருண்குமார் கடந்த 3 வருடங்களாக பப்ஜி விளையாடி உள்ளார். மேலும் கடந்த ஒரு வாரமாக கல்லூரி கூட செல்லாமல் விளையாட்டில் மூழ்கி உள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று, தாய், தந்தையினர் வேலைக்கு சென்றுள்ளனர்.
அப்போது கல்லூரி சென்று திரும்பிய அருண் குமாரின் சகோதரர் கதவு பூட்டியதை கண்டு அதிர்ச்சி அடைந்த ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தபோது, அருண் தூக்கில் தொங்கியது தெரியவந்துள்ளது. பின்னர் அவரது உடல் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கான குரோம்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை பீர்க்கன்காரனை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் அருண்குமார் தூக்கில் தொங்கும் முன்பு வரை பப்ஜி விளையாடியதாகவும், இறந்தபிறகு கூட அவரது தொலைபேசிக்கு பப்ஜி விளையாட்டு தொடர்பாக அழைப்பு மெசேஜ் அனுப்பி வருவதாகவும் அவரது பெற்றோர் வேதனை தெரிவித்தனர். மீண்டும் ஒரு கல்லூரி மாணவன் பஜ்ஜிக்கு அடிமையாகி தற்கொலை செய்து கொண்டிருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து காவல்துறையினரிடம் தொடர்புகொண்டு கேட்டபோது, பப்ஜி விளையாட்டில் ஆர்வம் கொண்டவராக இருந்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக கல்லூரி செல்லாமல் பப்ஜி விளையாடியுள்ளார். இந்நிலையில், அவரின் தாய், தந்தை வேலைக்குச் சென்றுள்ளனர். அப்போது, சகோதரர் வெளியே சென்று விட்டு வீடு திரும்பியபோது அருண்குமார் வீட்டில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
மாணவன் தற்கொலை செய்துகொண்டு உயிர் இழந்தது கூட தெரியாமல் அவருடைய நண்பர்கள் பலரும் அவரை பப்ஜி விளையாட வாட்ஸ்-அப் மூலம் அழைப்பு விடுத்து வருவதாக பெற்றோர்கள் புகார் அளித்துள்ளனர். பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் தற்போது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர்.
வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்துகொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104.
சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060).
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)