வேறொரு பெண்ணுடன் செல்போனில் மணிக்கணக்கில் அரட்டை.! கோபப்பட்ட மனைவி! அதிர்ச்சி கொடுத்த கணவர்!
வாக்குவாதத்தைத் தொடர்ந்து, மனைவி ஒரு அறைக்குள் சென்று பூட்டிக் கொண்டார். கணவர் வராண்டாவில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வேறொரு பெண்ணிடம் பேசியதற்காக மனைவி செல்போனை உடைத்ததால் கணவன் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தவர் உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த கிருஷ்ணா. வயது 22. இவர், ஓராண்டுக்கு முன்பு, தனது சொந்த ஊரைச் சேர்ந்த பூஜா என்பவரை பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.
இந்த நிலையில், கிருஷ்ணனின் மனைவி சொந்த ஊருக்குச் சென்று 6 மாதங்களுக்குப் பிறகு கடந்த திங்கள்கிழமை சுங்குவார்சத்திரம் திரும்பினார். ஆறு மாதங்களுக்குப் பிறகு இருவரும் சந்தித்தபோதும், கிருஷ்ணா தனது மொபைல் போனில் மூழ்கிக் கிடந்துள்ளார்.
சம்பவத்தன்று, பூஜா இரவு உணவு சமைக்கச் சென்றபோது, அவரது கணவர் யாருடனோ போனில் பேச ஆரம்பித்தார். வேலை முடிந்து ஒரு மணி நேரத்துக்குப் பிறகும் அவர் ஒரு பெண்ணுடன் போனில் பேசிக் கொண்டிருந்தார். அந்தப் பெண்ணைப் பற்றி பூஜா விசாரித்தபோது, அவர் ஒரு சக ஊழியர் என்று கிருஷ்ணா கூறியுள்ளார்.
அந்த பெண்ணுடன் அவருக்கு காதல் இருப்பதாக மனைவி சந்தேகித்துள்ளார். இதனால், இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. சிறிது நேர வாக்குவாதத்திற்குப் பிறகு, மனைவி கணவனின் செல்போனைப் பறித்து அதை உடைத்துவிட்டார் என்று தெரிகிறது.
இதனைத் தொடர்ந்து, பூஜா ஒரு அறைக்குள் சென்று பூட்டிக் கொண்டார். கிருஷ்ணா வராண்டாவில் உள்ள கூரையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அரை மணி நேரம் கழித்து பூஜா கதவைத் திறந்தபோது, கணவர் கூரையில் தூக்கில் தொங்குவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவரின் கூச்சல் சத்தத்தை கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து கிருஷ்ணாவின் உடலை மீட்டு பிரதே பரிசோதனை அனுப்பி வைத்து, இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மன உளைச்சலோ, தற்கொலை எண்ணமோ மேலிடும்போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.
சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்