மேலும் அறிய
Advertisement
14 ஆண்டுகளுக்கு முன்பே எச்சரித்த அதிகாரி..! கண்டுகொள்ளாத மாவட்ட ஆட்சியர்கள்..! 1000 கோடி ஆக்கிரமிப்பு
காஞ்சிபுரம்,சென்னை, புதுக்கோட்டை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் சுமார் ஆயிரம் கோடி ரூபாய் மேல் மதிப்புடைய அரசு நிலம் போலி பட்டா மூலம் ஆக்கிரமிப்பு என தெரியவந்துள்ளது
சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே 6 வழிப்பாதையாக விரிவாக்கம் செய்யும் பணி கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகிறது. இதற்காக நிலங்களை கையகப்படுத்தும் பணியும் நடந்து வந்தது. இதற்கு இழப்பீட்டு தொகை தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் சார்பில் வழங்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் ஸ்ரீபெரும்புதூர் தாலுகா பீமன்தாங்கல் என்னும் கிராமத்தில் நிலம் கையகப்படுத்தப்பட்டபோது, அரசு நிலத்திற்கு போலி பட்டா தயாரித்து தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடம் இருந்து 126 கோடி ரூபாய் இழப்பீடு பெற்ற வழக்கில், ஏற்கனவே ஆஷிஸ் மேத்தா மற்றும் செல்வம் ஆகியோர் கைது செய்யப் பட்டிருந்தனர். 83 நபர்களின் வங்கிக்கணக்குகள் முடக்கப்பட்டு தற்போது வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில் பீமன்தாங்கள் நில மோசடி வழக்கு விவகாரம் பூதாகரமாக நிலையில் பீமன்தாங்கள் போலி பட்டா குறித்து 2007 ஆம் ஆண்டிலேயே நில நிர்வாக ஆணையராக இருந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ரமேஷ்ராம் மிஸ்ரா, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. என்னவென்றால், தமிழகத்தில் சென்னை, புதுக்கோட்டை, காஞ்சிபுரம் ,திருவள்ளூர் திருவண்ணாமலை ஆகிய 5 மாவட்டங்களில் உள்ள 46 கிராமங்களில் இருக்கக்கூடிய அரசுக்கு சொந்தமான இடங்களில் போலி பட்டா தயாரித்து மோசடி செய்ததாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும் மேற்கண்ட 46 கிராமங்களில் அரசு நிலங்களை அரசுக்கு தெரியாமல் போலி ஆவணம் தயாரித்து மோசடியில் ஈடுபட்ட நபர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளவும் இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். எனவும் பரிந்துரை செய்துள்ளார்.அதேபோல் மோசடியாக செய்யப்பட்ட நிலங்கள் அனைத்திற்கும் வழங்கப்பட்ட பட்டாக்களை ரத்து செய்யவும் அறிவுறுத்தி உள்ளார்.
ஆனால், 14 ஆண்டுகளாக மேற்கண்ட ஐந்து மாவட்டங்களில் அரசு நிலங்கள் போலி பட்டா மூலம் ஆக்கிரமிக்கப்பட்டது. தொடர்பாக இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால், பீமன் தாங்கள் கிராமத்தில் நடந்தது போல அரசுக்கு சொந்தமான நிலத்தை போலி ஆவணம் மூலம் பட்டா பெற்று நிலத்தை ஆக்கிரமித்து அரசுக்கு ஆயிரம் கோடி ரூபாய் வரை இழப்பீடு ஏற்படுத்தப்பட்டு இருப்பது தற்போது தெரியவந்துள்ளது. மேலும் அந்த கடிதத்தில் தற்போது கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் ஆஷிஸ் மேத்தா முறைகேடான முறையில் செட்டில்மெண்ட் தொகை பெற்றிருப்பதாக, அப்பொழுதே ஐஏஎஸ் அதிகாரியாக இருந்த ரமேஷ்ராம் மிஸ்ரா காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் எழுதி உள்ளார்.
அதேபோல் முறைகேடான முறையில் பட்டா பெற்றிருப்பதாகவும் அதை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் எனவும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். பதினான்கு ஆண்டுகளுக்கு முன்பு அப்பொழுது இருந்த மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் வருவாய் துறையினர் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்காத காரணத்தினால், தற்போது அரசுக்கு கோடிக்கணக்கில் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது . மேலும் சென்னையின் முக்கிய பகுதியாக விளங்கும் கோயம்பேடு ,மயிலாப்பூர் நுங்கம்பாக்கம் ஆகிய பகுதிகளில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருப்பதாக அந்தக் கடிதத்தில் தெரிவித்துள்ளார்..
தற்போது சிபிசிஐடி போலீசார் நிலமோசடி வழக்கு தொடர்பாக தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை சிபிசிஐடி பீமன்தாங்கள் நில மோசடி தொடர்பாக போலீசார் மேலும் இரண்டு நபர்களிடம் தற்போது தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
கல்வி
ஆன்மிகம்
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion