மேலும் அறிய

நில மோசடி விவகாரம்: அக்காவிடமே ஏமாற்றிய பெண் கவுன்சிலரின் கணவர் கைது

தலைமறைவாக உள்ள கவுன்சிலரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்

சென்னை மயிலாப்பூர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி, இவர் திமுகவின் வட்டச் செயலாளராக இருந்து வருகிறார். இவருடைய மனைவி விமலா கவுன்சிலராக உள்ளார். கிருஷ்ணமூர்த்தியின் சகோதரி நாகலட்சுமி. இவர் சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் வசித்து வருகிறார். இவர்கள் இருவருக்கும் பூர்வீக சொத்து சம்பந்தமாக சிறு பிரச்சனை இருந்ததாக கூறப்படுகிறது. ரூ.2 கோடி மதிப்புள்ள சொத்துக்களை கிருஷ்ணமூர்த்தி,  செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்து கொண்டுள்ளார். நாகலட்சுமி கையெழுத்து போடுவதற்கு பதிலாக தனது மனைவி விமலாவையே, கையெழுத்து போட வைத்ததாக கூறப்படுகிறது.

நில மோசடி விவகாரம்: அக்காவிடமே ஏமாற்றிய பெண் கவுன்சிலரின் கணவர் கைது
 
இதுகுறித்து தகவல் அறிந்த நாகலக்ஷ்மி தாம்பரம் மாநகர் காவல் ஆணையரக அலுவலகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பெயரில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து திமுக வட்டச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தியை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் ஆள்மாறாட்டம் செய்து கைரேகை வைத்து மோசடியில் ஈடுபட்ட புகாரில் சென்னை மாநகராட்சியின் மயிலாப்பூர் பகுதி 124 வது வார்டு கவுன்சிலர் விமலாவையும் தேடி வருகின்றனர்.
 
விசாரணையில் தெரிய வந்த உண்மைகள்
 
காவல்துறையினர் நடத்திய தீவிர விசாரணையில்,  கிருஷ்ணமூர்த்தி மற்றும் அவரது மனைவி விமலா ஆகியோர் பூர்வீக சொத்துக்களை கடந்த 2005 ஆம் ஆண்டு, கிருஷ்ணமூர்த்தியின் சகோதரி ஆன நாகலட்சுமிக்கு தெரியாமல், ஆள்மாறாட்டம் மூலம் சொத்தை அபகரித்தது தெரியவந்தது. அதில் கிருஷ்ணமூர்த்தி தனது மனைவி விமலாவை சகோதரி நாகலட்சுமி என்று பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று, போலியாக கையெழுத்து போட்டு கைரேகையும் வைக்க வைத்துள்ளார். 
 
நாகலட்சுமி தனது கையெழுத்தை ஆங்கிலத்தில் தான் போடுவது வழக்கமாக கொண்டு வந்துள்ளார். ஆனால் பத்திரத்தில் தமிழில் கையெழுத்து போட்டு , இந்த வேலையில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.  இதனைத் தொடர்ந்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் அவரது கணவர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் மீது மோசடி, கூட்டுச்சதி உள்ளிட்ட பல்வேறு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து கிருஷ்ணமூர்த்தியை கைது செய்துள்ளனர். தொடர்ந்து தலைமறைவாக உள்ள கவுன்சிலர் விமலாவை தேடி வருகின்றனர். 
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

இபிஎஸ் வீட்டில் பாஜகவினருக்கு தயாரான சுவையான விருந்து.! யார் யாருக்கு எத்தனை தொகுதி- இன்று இறுதி முடிவு

இந்தியாவிற்கு க்ரீன் சிக்னல்.. க்ரீன்லாந்தால் ஐரோப்பிய நாடுகள் ரெட் சிக்னல் - அடங்காத ட்ரம்ப் கொடுத்த வார்னிங்

ICC Ban: ஐசிசி கொடுத்த வார்னிங்.. இந்தியா வருமா? ”அதிசயம் நிகழும் என எதிர்பார்ப்பு” வங்கதேசத்தின் முடிவு என்ன?

Harvard University: ஹார்வர்ட் பல்கலை., 7 டேட்டா சைன்ஸ் படிப்புகள், இலவசமாக பயிலலாம் - விண்ணப்பிப்பது எப்படி?

ABP Premium

வீடியோ

‘’ஆளுநர் பதவி..MP சீட் !’’OFFER கொடுத்த பாஜகஓகே சொன்ன OPS?DEAL OVER!
20 ஆண்டுகள் 5 தேர்தல்தோல்வியே சந்திக்காத இளைஞன்மோடியின் புதிய Boss
”ஓசூருக்கு எதுக்கு AIRPORT?”தட்டித்தூக்கிய நாயுடு பின்னணியில் மோடி?
OVERTAKE செய்த ஓட்டுநர் தலைகீழாக கவிழ்ந்த அரசு பேருந்து மதுரையில் பரபரப்பு

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இபிஎஸ் வீட்டில் பாஜகவினருக்கு தயாரான சுவையான விருந்து.! யார் யாருக்கு எத்தனை தொகுதி- இன்று இறுதி முடிவு
இபிஎஸ் வீட்டில் பாஜகவினருக்கு தயாரான சுவையான விருந்து.! யார் யாருக்கு எத்தனை தொகுதி- இன்று இறுதி முடிவு
இந்தியாவிற்கு க்ரீன் சிக்னல்.. க்ரீன்லாந்தால் ஐரோப்பிய நாடுகள் ரெட் சிக்னல் - அடங்காத ட்ரம்ப் கொடுத்த வார்னிங்
இந்தியாவிற்கு க்ரீன் சிக்னல்.. க்ரீன்லாந்தால் ஐரோப்பிய நாடுகள் ரெட் சிக்னல் - அடங்காத ட்ரம்ப் கொடுத்த வார்னிங்
ICC Ban: ஐசிசி கொடுத்த வார்னிங்.. இந்தியா வருமா? ”அதிசயம் நிகழும் என எதிர்பார்ப்பு” வங்கதேசத்தின் முடிவு என்ன?
ICC Ban: ஐசிசி கொடுத்த வார்னிங்.. இந்தியா வருமா? ”அதிசயம் நிகழும் என எதிர்பார்ப்பு” வங்கதேசத்தின் முடிவு என்ன?
Harvard University: ஹார்வர்ட் பல்கலை., 7 டேட்டா சைன்ஸ் படிப்புகள், இலவசமாக பயிலலாம் - விண்ணப்பிப்பது எப்படி?
Harvard University: ஹார்வர்ட் பல்கலை., 7 டேட்டா சைன்ஸ் படிப்புகள், இலவசமாக பயிலலாம் - விண்ணப்பிப்பது எப்படி?
சென்னை ; வீடு வாடகைக்கு எடுத்து பாலியல் தொழில் நடத்திய கும்பல் !! மடக்கிய போலீஸ்

Hyundai Bayon: ஃப்ராங்க்ஸை விடவேக்கூடாது..! ஹுண்டாயின் புதிய காம்பேக்ட் க்ராஸ்-ஓவர், ஹைப்ரிட் இன்ஜின்.. ரூ.7 லட்சமே

K.N.NEHRU : ‘கே.என்.நேருவை குறி வைக்கும் பாஜக’ அமலாக்கத்துறை மூலம் கடும் நெருக்கடி..!
‘கே.என்.நேருவை குறி வைக்கும் பாஜக’ அமலாக்கத்துறை மூலம் கடும் நெருக்கடி..!
இனி வீடு, நிலம் வாங்க பத்திர பதிவு அலுவலகம் செல்ல தேவையில்லை.! இன்று முதல் அசத்தல் திட்டம் அறிமுகம்

Embed widget