மேலும் அறிய

Crime : பெண் உறுப்பில் மிளகாய் பொடி... 10 ஆண்டுகள் பாலியல் வன்கொடுமை.. 9 வயது சிறுமிக்கு நேர்ந்த சோகம்!

சென்னை பெரவள்ளூர் பகுதியில் இயங்கி வரும் தனியார் காப்பகத்தில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கு தற்போது நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

சென்னை, பெரவள்ளூர் பகுதியில் இயங்கி வரும் தனியார் காப்பகத்தில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அந்த காப்பக நிர்வாகி இசபெல் என்பவரின் சகோதரரை போலீசார் கடந்த 2020ம் ஆண்டு போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். அந்த சிறுமியின் பாலியல் வழக்கு தற்போது நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

நீதிமன்றத்தில் பாலியல் தொந்தரவால் பாதிக்கப்பட்ட சிறுமி உட்பட 2 பெண்களிடம் நீதிபதி நடந்த சம்பவம் குறித்து தனியாக விசாரணை நடத்தினார். அப்போது சிறுமி, தனக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து நீதிபதியிடம் கூறினார். தனக்கு 9 வயதில் இருந்து பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும், சில நேரங்களில் தனது தாய் மாமன் தேசப்பன், அவரது நண்பர்களான சிவா, சீனிவாசன், ரமேஷ் ஆகியோர் பாலியல் உணர்வுகளை தூண்டி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் அதிர்ச்சி தகவல்களை நீதிபதியிடம் அழுதபடி கூறினார். .

இதை கேட்டு நீதிபதி கடும் மனவேதனை அடைந்தார். உடனே நீதிபதி, சம்பவம் குறித்து முறையாக விசாரணை நடத்த குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரி லலிதாவுக்கு உத்தரவிட்டார். நீதிபதி உத்தரவுப்படி, குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரி லலிதா விசாரணை நடத்தியபோது, சிறுமிக்கு தொடர் பாலியல் தொந்தரவு நடந்தது உறுதியானது. அதைதொடர்ந்து குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரி லலிதா, ராயபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியை சித்ரவதை செய்து தொடர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த நபர்கள் மீது அளித்தார்.

Crime : பெண் உறுப்பில் மிளகாய் பொடி... 10 ஆண்டுகள் பாலியல் வன்கொடுமை.. 9 வயது சிறுமிக்கு நேர்ந்த சோகம்!

புகாரின்படி, அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தினர். அதில், சிறுமியின் தாய் மாமன் தேசப்பன், தனது நண்பர்களான சிவா, சீனிவாசன், ரமேஷ் மற்றும் இதற்கு உடந்தையாக இருந்த தேசப்பன் மனைவி ரேவதி (40), சிறுமியின் தாய் சாந்தி (45) மற்றும் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த விவரங்கள் அனைத்தும் தெரிந்தும் அதுகுறித்து புகார் அளிக்காமல் இருந்ததாக பெரவள்ளூரில் இயங்கி வரும் தனியார் காப்பகத்தின் நிர்வாகி இசபெல், ஜஸ்மின், சுகந்தி, பிரசன்னா, அலெக்சாண்டர், பாத்திமா ஆகிய 12 பேர் மீது போலீசார் போக்சோ, ஐபிசி 312, 506(2) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்தனர். அதைதொடர்ந்து, சிறுமியின் தாய் சாந்தி, சிறுமியின் தாய்மாமன் மனைவி ரேவதி, தனியார் காப்பகத்தின் நிர்வாகி இசபெல் ஆகியோரை அதிரடியாக கைது செய்தனர். போலீசார் தேடுவதை அறிந்த முக்கிய குற்றவாளியான சிறுமியின் தாய்மாமன் தேசப்பன், அவரது நண்பர்களான சிவா, சீனிவாசன், ரமேஷ் மற்றும் தனி யார் காப்பக நிர்வாகிகள் உட்பட 9 பேர் தலைமறைவாகிவிட்டனர். அவர்களை பிடிக்க விஜய், காதர்மீரான், செல்வகுமார் ஆகிய 3 உதவி ஆய்வாளர்கள் தலைமையில் 3 தனிப்படை கள் அமைக்கப்பட்டு குற்றவாளியை தேடி வருகின்றனர். 10 ஆண்டுகளாக சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்து சிகரெட் சூடு வைத்தும், காயப்படுத்தி கொடுமைப்படுத்திய சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீதிபதியின் கனிவான விசாரணையால், சிறுமிக்கு நேர்ந்த கொடுமை தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

பின்னர் விசாரணையில் சிறுமிக்கு நேர்ந்த பாலியல் தொந்தரவு குறித்து போலீசார் கூறியதாவது: சென்னை காசிமேடு சிங்கம் பேட்டை பகுதியை சோந்தவர் அண்ணாமலை. இவர், சாந்தி என்ற பெண்ணை கடந்த 1999ம் ஆண்டு திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு 2000ம் ஆண்டில் அழகான பெண் குழந்தை ஒன்று பிறந்தது. மகள் ஒரு வயதாக இருக்கும் போது அண்ணாமலை இறந்துவிட்டார். திருமணம் நடந்த சில ஆண்டுகளிலேயே கணவர் இறந்துவிட்டதால் சாந்தி மறுமணம் செய்ய முடிவு செய்தார். அதற்கு தனது மகள் தடையாக இருந்தார். இதனால் ராயபுரம் 2வது லேன் பெரியதம்பி தெருவில் வசித்து வரும் தனது சகோதரன் தேசப்பனுக்கு திருமணம் நடந்து, குழந்தை இல்லாததால் மகளை வளர்க்கும்படி கூறி ஒப்படைத்தார். பிறகு தனக்கு பிடித்தபடி சாந்தி வேறு ஒருவரை இரண்டாவதாக மறுமணம் செய்து கொண்டார்.

2 வயது முதல் சிறுமியை தேசப்பன் மற்றும் அவரது மனைவி ரேவதி வளர்த்து வந்தனர். சிறுமி அருகில் உள்ள பள்ளியில் படித்து வந்தார். சிறுமிக்கு 9 வயது ஆனதும், இரவில் தூங்கும் போது தாய்மாமன் தேசப்பன், சிறுமிக்கு பாலியல் உணர்வுகளை தூண்டும் வகையில் பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். வீட்டில் மனைவி ரேவதி இல்லாத போது, சிறுமியை வலுக்கட்டாயமாக தேசப்பன் பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார். இதை தனது மனைவி ரேவதி மற்றும் தனது சகோதரி சாந்தியிடம் கூறினால் உன்னை கொலை செய்துவிடுவேன் என்று கூறி சிறுமியை மிரட்டி வந்துள்ளார். தந்தையை போல் வளர்த்த தாய்மாமனே தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததால் வெளியில் சொல்ல முடியாமல் சிறுமி தவித்து வந்துள்ளார். 

அதோடு இல்லாமல் தேசப்பன், சிறுமி 2013ம் ஆண்டு வயதுக்கு வந்த பிறகும், தினமும் நள்ளிரவில் பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். தன்னுடன் நிறுத்திக் கொள்ளாமல் தேசப்பன், தனது நண்பர்களான சிவா, ரமேஷ், சீனிவாசன் ஆகியோருக்கு சிறுமியை பலியாக்கியுள்ளார். அவர்களும் சிறுமியை ஒவ்வொருவரும் தனித்தனியாக அழைத்து சென்று பாலியல் தொந்தரவு செய்துள்ளனர். சில நேரங்களில் தனது தாய்மாமன் தேசப்பன் உள்பட 4 பேரும் கூட்டு பாலியல் தொந்தரவும் கொடுத்து சிறுமியை சீரழித்துள்ளனர். தேசப்பன் மற்றும் அவரது நண்பர்கள் சிகரெட் சூடு மற்றும் காயங்களை ஏற்படுத்தி சிறுமியை தொடர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

Crime : பெண் உறுப்பில் மிளகாய் பொடி... 10 ஆண்டுகள் பாலியல் வன்கொடுமை.. 9 வயது சிறுமிக்கு நேர்ந்த சோகம்!

ஒருகட்டத்தில் சிறுமியின் உடலில் பல இடங்களில் காயங்களை பார்த்த அவரது தாய்மாமன் மனைவி ரேவதி நடந்த சம்பவம் குறித்து சிறுமியிடம் கேட்டுள்ளார். அதை சிறுமி கூறி அழுததும், ரேவதி இந்த வயதில் உனக்கு ஆண் துணை கேட்கிறதா என்று கூறி கடுமையாக தாக்கியுள்ளார். அதோடு இல்லாமல் சிறுமியும் ஒரு பெண் என்று பாராமல் சிறுமியின் பெண் உறுப்பில் 'மிளகாய் பொடி' கொட்டி கதற கதற அடித்து துன்புறுத்தி உள்ளார். இதுகுறித்து சிறுமியின் அனைத்து விவரங்களும் தாய் சாந்திக்கு தெரிந்தும் அவர் தனது சகோதரனை கண்டிக்கவும், கேட்கவும் இல்லை.

தனக்கு நடந்த கொடுமைகளை தாயும் கேட்காததால் தினம் தினம் பாலியல் தொந்தரவுக்கு ஆளான சிறுமி ஒரு கட்டத்தில் விரக்தியடைந்து வீட்டை விட்டு கடந்த 2020ம் ஆண்டு தனியாக வெளியேறினார். பிறகு பிராட்வே பகுதியில் சுற்றி திரிந்த சிறுமியை பொதுமக்கள் ‘1098' குழந்தைகள் உதவி எண்ணுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி குழந்தைகள் மீட்பு மையத்தில் இருந்து வந்து சிறுமியை மீட்டு பெரவள்ளூர் பகுதியில் உள்ள தனியார் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

சிறுமிக்கு நடந்த கொடுமைகள் அனைத்தும் தனியார் காப்பக நிர்வாகியான இசபெல் மற்றும் சக ஊழியர்களுக்கும் தெரியும். ஆனால் அவர்கள் இதுகுறித்து காவல் துறையில் எந்தவித புகாரும் அளிக்காமல் இருந்துள்ளனர். சிறுமியின் தகவல் அறிந்த இசபெல் சகோதரன் சிறுமியை பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். பிறகு சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் தனியார் காப்பக நிர்வாகியின் சகோதரனை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு தான் தற்போது நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Minister Moorthy: ” இது ஆண்ட பரம்பரை என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்” சர்ச்சையாகும் அமைச்சர் மூர்த்தி பேச்சு
” இது ஆண்ட பரம்பரை என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்” சர்ச்சையாகும் அமைச்சர் மூர்த்தி பேச்சு
மொத்தமா மாறப்போகுது! சென்னை மாநகராட்சி விரிவாக்கம்.. தமிழக அரசு அறிவிப்பு!
மொத்தமா மாறப்போகுது! சென்னை மாநகராட்சி விரிவாக்கம்.. தமிழக அரசு அறிவிப்பு!
TN Rain: திருநெல்வேலியில் ஒரேநாளில் 18 செ.மீ கனமழை..இன்று எங்கு கனமழை பெய்யும்.!
TN Rain: திருநெல்வேலியில் ஒரேநாளில் 18 செ.மீ கனமழை..இன்று எங்கு கனமழை பெய்யும்.!
சாகசத்திற்கு தயாரா? குடியரசு தின அணிவகுப்பை நேரில் பார்க்கனுமா? உடனே புக் பண்ணுங்க!
சாகசத்திற்கு தயாரா? குடியரசு தின அணிவகுப்பை நேரில் பார்க்கனுமா? உடனே புக் பண்ணுங்க!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”அஜித் சொன்ன சீக்ரெட்” : மகிழ் திருமேனி Open Talk : குஷியில் ரசிகர்கள்ஸ்டாலின் ஏழை முதல்வரா? இது நம்ம LIST -லயே இல்லயே! வெளியான சொத்து பட்டியல்!ADMK Alliance BJP : Amit shah  போட்ட ஆர்டர் அடங்கி போன Annamalai டெல்லியில் நடந்தது என்ன? : EPSNithish Kumar | கூட்டணி மாறும் நிதிஷ் குமார்?தலைவலியில் பாஜக! சூடுபிடிக்கும் பீகார் தேர்தல் Bihar

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister Moorthy: ” இது ஆண்ட பரம்பரை என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்” சர்ச்சையாகும் அமைச்சர் மூர்த்தி பேச்சு
” இது ஆண்ட பரம்பரை என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்” சர்ச்சையாகும் அமைச்சர் மூர்த்தி பேச்சு
மொத்தமா மாறப்போகுது! சென்னை மாநகராட்சி விரிவாக்கம்.. தமிழக அரசு அறிவிப்பு!
மொத்தமா மாறப்போகுது! சென்னை மாநகராட்சி விரிவாக்கம்.. தமிழக அரசு அறிவிப்பு!
TN Rain: திருநெல்வேலியில் ஒரேநாளில் 18 செ.மீ கனமழை..இன்று எங்கு கனமழை பெய்யும்.!
TN Rain: திருநெல்வேலியில் ஒரேநாளில் 18 செ.மீ கனமழை..இன்று எங்கு கனமழை பெய்யும்.!
சாகசத்திற்கு தயாரா? குடியரசு தின அணிவகுப்பை நேரில் பார்க்கனுமா? உடனே புக் பண்ணுங்க!
சாகசத்திற்கு தயாரா? குடியரசு தின அணிவகுப்பை நேரில் பார்க்கனுமா? உடனே புக் பண்ணுங்க!
அடங்கி போன அண்ணாமலை; அமித்ஷா போட்ட ஆர்டர்..டெல்லியில் நடந்தது என்ன?
அடங்கி போன அண்ணாமலை; அமித்ஷா போட்ட ஆர்டர்..டெல்லியில் நடந்தது என்ன?
"விவசாயிகளின் நலனே முக்கியம்.." உறுதிபட கூறிய பிரதமர் மோடி!
IBPS RRB Result: ஐபிபிஎஸ் ஆர்ஆர்பி தேர்வு முடிவுகள் வெளியீடு; காண்பது எப்படி?
IBPS RRB Result: ஐபிபிஎஸ் ஆர்ஆர்பி தேர்வு முடிவுகள் வெளியீடு; காண்பது எப்படி?
RSS தலைவருக்கு பறந்த கடிதம்.. ரூட்டை மாற்றும் கெஜ்ரிவால்.. பாஜகவுக்கு ஷாக்!
RSS தலைவருக்கு பறந்த கடிதம்.. ரூட்டை மாற்றும் கெஜ்ரிவால்.. பாஜகவுக்கு ஷாக்!
Embed widget