மேலும் அறிய

Crime : உள்ளாடைக்குள் மறைத்து போதைப்பொருள் கடத்தல்..! எத்தியோப்பிய பெண் கைது..!

ஆடைக்குள்ளும், உடலுக்குள்ளும் மறைத்து வைத்து கொண்டு வந்த, உகாண்டா நாட்டு பெண் பயணியை சுங்கத்துறை கைது செய்து விசாரணை.

எத்தியோப்பியன் நாட்டு தலைநகர் அடீஸ் அபாபாவில் இருந்து எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அந்த விமானத்தில் சர்வதேச போதை கடத்தும் கும்பலைச் சேர்ந்த ஒரு பெண் பெருமளவு போதைப் பொருட்களை கடத்தி வருவதாக சென்னை விமான நிலைய சுங்கத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
 
இதை அடுத்து விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள், பெண் சுங்க அதிகாரிகள் உட்பட்டோா், அந்த விமானத்தில் வந்த 217 பயணிகளையும் தீவிரமாக கண்காணித்து, சந்தேகத்திற்கிடமான, குறிப்பாக  வெளிநாட்டுப் பயணிகளை நிறுத்தி சோதனை நடத்தினர். 

Crime : உள்ளாடைக்குள் மறைத்து போதைப்பொருள் கடத்தல்..! எத்தியோப்பிய பெண் கைது..!
 
உள்ளாடைகள், மற்றும் உடலுக்குள்...
 
அப்போது உகாண்டா நாட்டை சோ்ந்த நம்பீரா நோலீன் என்ற  பெண் பயணி மருத்துவ விசாவில் சென்னைக்கு வந்தார். அவர் மீது சுங்க அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரை நிறுத்தி விசாரித்தனர். அவா் விசாரணையில்  முன்னுக்குப் பின் முரணாக பேசினார். இதை அடுத்து அந்த பெண்ணை தனி அறைக்கு அழைத்துச் சென்று பெண் சுங்க அதிகாரிகள் முழுமையாக பரிசோதித்தனர். அப்போது அவருடைய உள்ளாடைகள், மற்றும் உடலுக்குள் கொக்கையின் போதை பொருள் மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். சுங்க அதிகாரிகள் அதை பறிமுதல் செய்தனர். அந்த போதைப்பொருள் 3.250 கிலோ இருந்தது. அதன் சா்வதேச மதிப்பு சுமாா் ரூ.35 கோடி. இதை அடுத்து சுங்க அதிகாரிகள் அந்தப் பெண்ணை கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். 
 
கடந்த சில மாதங்களாக இந்த குறிப்பிட்ட ஏா்லைன்ஸ்  விமானத்தில் பெருமளவு போதை பொருள் கடத்தி வருவது வாடிக்கையாகிவிட்டது. இந்த விமானம் இந்த ஆண்டு தொடக்கத்தில் தான் புதிதாக சென்னைக்கு விமான சேவையை தொடங்கியது. இந்த குறிப்பிட்ட விமானத்தில் பெருமளவு போதைப் பொருள் கடத்தப்பட்டு வருவது, சென்னை விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
Crime : உள்ளாடைக்குள் மறைத்து போதைப்பொருள் கடத்தல்..! எத்தியோப்பிய பெண் கைது..!
 
துடைப்பானுக்குள் மறைத்து கடத்தப்பட்ட தங்கக்குச்சிகள்...! சென்னை விமான நிலையத்தில் நூதன கடத்தல் முயற்சி.
 
கடந்த ஓரிரு தினங்களுக்கு முன்னர்,  இரவு சுமார் 11.40 மணியளவில் எல். ராம்குமார் என்ற தூய்மைப் பணியாளர், தளம் துடைக்க பயன்படுத்தும் துடைப்பத்தினை எடுத்துக்கொண்டு போக்குவரத்துப் பகுதிக்கு வந்தார். ராம்குமார் துடைப்பத்தை டோர் ஃபிரேம் மெட்டல் டிடெக்டருக்கு (டிஎஃப்எம்டி) வெளியே வைத்துக்கொண்டு, சோதனைக்கு சுங்கத்துறை அதிகாரிகள் அழைத்துச் சென்றனர்.  மேலும், அங்கு பணியில் இருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படை (சிஐஎஸ்எஃப்) ஊழியர்கள், தூய்மைப் பணியாளரின் நடமாட்டம் குறித்து சந்தேகம் அடைந்து, அவர் எங்கு செல்கிறார் என்று கவனித்து வந்துள்ளனர். 

அவரிடம்  அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த அதிகாரிகள் தூய்மை பணியாளரிடம் எங்கு செல்கிறீர்கள் என்று கேட்டதற்கு, போக்குவரத்து பகுதி மற்றும் அருகிலுள்ள பிற இடங்களை சுத்தம் செய்யப் போவதாக பதிலளித்தார். இந்த பதில் பாதுகாப்பு அதிகாரிகளின் சந்தேகத்தை மேலும் அதிகரித்தது. இதனால் அவரை ஸ்கேனர் உள்ள பகுதிக்கு அழைத்துச் சென்று, ஸ்கேனரின் கீழ் சுத்தம் செய்யும் துடைப்பத்தை வைத்தபோது, ​​சுத்தம் செய்யும் துடைப்பானின் கைப்பிடி குழாயின் உள்ளே சில பொருட்களின் அடர்த்தியான உருவம் தென்பட்டுள்ளது. 

இதனால், துடைப்பானின் கம்பியை திறந்து பரிசோதனை செய்ததில், கருப்பு நாடாவால் சுற்றப்பட்ட பத்து சிறிய துண்டுகள் குச்சி போல இருந்தது. அந்த துண்டுகளை மேலும் பரிசோதனை செய்து பார்த்ததில்,  அது தங்க குச்சிகள் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  சுமார் 70 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 1.811 கிலோ எடையுள்ள, தங்கக் குச்சிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பரிசோதனைக்குப் பின்னர் தூய்மைப் பணியாளர் எல்.ராம்குமார் AIU அதிகாரிகளிடம்  விசாரணைக்காக  ஒப்படைக்கப்பட்டுள்ளார். அவரிடம் சுங்கத்துறை அதிகாரிகள், சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்ட இந்த தங்க குச்சிகள் எங்கு இருந்து? யார் மூலம் வந்தது? யார் இந்த கடத்தலுக்குப் பின்னர் உள்ளனர் என்றெல்லாம் கேள்வி எழுப்பி விசாரித்து வருகின்றனர். சென்னை விமான நிலையத்தில் நூதனமான முறையில் கடத்திவரப்பட்ட தங்கத்தை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகளை போலீசார் கைது செய்தனர். 

தலைப்பு செய்திகள்

" இளம் பெண்ணிடம் எல்லை மீறிய மெடிக்கல் ரெப் " பணம் கேட்டு மிரட்டிய பெண் வழக்கறிஞர்
மாமூல் தர மறுத்த அரிசிக்கடை மீது பெட்ரோல் குண்டுவீச்சு: புதுச்சேரியில் ரவுடியின் வெறியாட்டம்!
மாமூல் தர மறுத்த அரிசிக்கடை மீது பெட்ரோல் குண்டுவீச்சு: புதுச்சேரியில் ரவுடியின் வெறியாட்டம்!
கொள்ளிடம் ரயில்வே சுரங்கப்பாதையில் ரகசியச் சதி... சிக்கிய ரௌடி மொட்டை சிவா!
கொள்ளிடம் ரயில்வே சுரங்கப்பாதையில் ரகசியச் சதி... சிக்கிய ரௌடி மொட்டை சிவா!
தாம்பரம் அருகே கொடூரம்! 6-ஆம் வகுப்பு மகளுக்கு நடந்த அநீதி... பெற்ற தாய் செய்த அதிர்ச்சி காரியம்!
தாம்பரம் அருகே கொடூரம்! 6-ஆம் வகுப்பு மகளுக்கு நடந்த அநீதி! பெற்ற தாய் செய்த அதிர்ச்சி காரியம்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi : நேற்று அமுதன்.. இன்று தனுஷ்.! தொடரும் கொலைகளே சாட்சி- விஜய் அரசை விளாசிய உதயநிதி
நேற்று அமுதன்.. இன்று தனுஷ்.! தொடரும் கொலைகளே சாட்சி- விஜய் அரசை விளாசிய உதயநிதி
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
ஒரே சார்ஜில் 683 கி.மீட்டர் மைலேஜ்.. தேர்போல கார்.. அறிமுகமாகியது Mahindra BE 6 Sporteq!
ஒரே சார்ஜில் 683 கி.மீட்டர் மைலேஜ்.. தேர்போல கார்.. அறிமுகமாகியது Mahindra BE 6 Sporteq!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
" இளம் பெண்ணிடம் எல்லை மீறிய மெடிக்கல் ரெப் " பணம் கேட்டு மிரட்டிய பெண் வழக்கறிஞர்
Gen Z இளைஞர்களின் மாதாந்திர சம்பளம் எங்கே போகிறது தெரியுமா? அதிரவைக்கும் உண்மை!
Gen Z இளைஞர்களின் மாதாந்திர சம்பளம் எங்கே போகிறது தெரியுமா? அதிரவைக்கும் உண்மை!
விஜய்யிடம் ‘தகைசால் தமிழர்’ விருது பெற்ற கிருஷ்ணசாமி: குஷியில் காங்கிரஸ், பாமக! காரணம் என்ன?
விஜய்யிடம் ‘தகைசால் தமிழர்’ விருது பெற்ற கிருஷ்ணசாமி: குஷியில் காங்கிரஸ், பாமக! காரணம் என்ன?
Embed widget