மேலும் அறிய

Crime : கடத்தலில் புதிய டெக்னிக்.. ரூ.64 கோடி மதிப்புள்ள ஹெராயின்.. கேட்கவே பயங்கரமாக இருக்கு..!

சர்வதேச போதை கடத்தும் கும்பல், தற்போது புதிய டெக்னிக்காக, இதைப் போன்ற பெரிய மதிப்பிலான கடத்தலுக்கு, வயதான முதியவர்களை பயன்படுத்துவதாக அதிகாரிகள் தகவல்.

எத்தியோப்பியா நாட்டு தலைநகர் அடிஸ் அபாபாவிலிருந்து, சென்னைக்கு விமானத்தில் கடத்தி கொண்டுவரப்பட்ட ரூ. 64 கோடி மதிப்புடைய 8.26  கிலோ ஹெராயின் போதைப்பொருளை சென்னை விமான நிலையத்தில், மத்திய வருவாய் புலனாய் துறை  அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்த கடத்தலில் ஈடுபட்ட மும்பையைச் சேர்ந்த 79 வயது முதியவர் கைது.

எத்தியோப்பியா நாட்டு தலைநகர் அடீஸ் அபாபாவிலிருந்து, எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு, கடந்த செவ்வாய்க்கிழமை காலை வந்தது. அந்த விமானத்தில் பெருமளவு போதைப்பொருள் கடத்தி  வரப்படுவதாக, சென்னையில் உள்ள மத்திய வருவாய் புலனாய்வு துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை அடுத்து மத்திய வருவாய் புலனாய் துறையின் தனிப்படை பிரிவினர்,  சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு சாதாரண பயணிகள் போல் வந்து, தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

இந்த நிலையில் எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் இருந்து, மும்பையைச் சேர்ந்த 79 வயது முதியவர் ஒருவர், சுற்றுலாப் பயணிகள் விசாவில் ஆப்பிரிக்கா நாடுகளுக்கு சென்று விட்டு, இந்த விமானத்தில் எத்தியோப்பியா வழியாக சென்னை வந்தார். அவர் மீது மத்திய வருவாய் புலனாய் துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரை நிறுத்தி விசாரித்தனர்.

அதன்பின்பு அவருடைய உடமைகளை சோதனை செய்தனர். அவருடைய சூட்கேசுக்குள்  மறைத்து வைத்திருந்த, 2 பார்சல்களில், 8.26  கிலோ ஹெராயின் போதை பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது. அந்த ஹெராயின் போதை பொருள் பார்சல்களை மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் கைப்பற்றினர்.ஹெராயின்  போதை பொருள், ஒரு கிலோ ரூபாய் 8 கோடியாகும். இது 8 கிலோ 26 கிராம் ஹெராயின் போதை பொருள் மொத்த மதிப்பு ரூபாய் 64 கோடி. இதை அடுத்து மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள், அந்த 79 வயது முதியவரை கைது செய்தனர். அவர் கொண்டு வந்த ரூபாய் 64 கோடி மதிப்புடைய ஹெராயின் போதைப்பொருளையும் பறிமுதல் செய்தனர்.

அதன் பின்பு கடத்தல் ஆசாமி 79 வயது முதியவரை, சென்னை தியாகராய நகரில் உள்ள மத்திய வருவாய் புலனாய்வு துறை அலுவலகத்திற்கு கொண்டு சென்று, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த முதியவர் சர்வதேச போதை கடத்தும் கும்பலை சேர்ந்தவர் என்று தெரிய வருகிறது. சர்வதேச போதைக்கும்பல், வழக்கமாக பெண்கள், இளைஞர்கள் போன்றவர்களை, இதைப் போன்ற பெரிய அளவிலான போதை பொருள்  கடத்தலுக்கு பயன்படுத்தி வந்தனர். ஆனால் அவர்கள் அடிக்கடி பிடிபட்டு விடுகின்றனர். எனவே சர்வதேச போதை கடத்தும் கும்பல், இதைப் போன்ற வயது முதிர்ந்த முதியவர்களை பயன்படுத்தி, புதிய முறையில் போதை பொருள் கடத்தலுக்கு, பயன்படுத்துகின்றனர் என்று தெரிய வந்துள்ளது.இந்த முதியவரான கடத்தல் ஆசாமி, யாருக்காக இந்த கடத்தலில் ஈடுபட்டார்? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்

தலைப்பு செய்திகள்

இன்ஸ்டாகிராம் காதல் நாடகம்; பேராசிரியையிடம் நகை பறித்த ‘காதலன்’ உட்பட 4 பேர் கைது - CCTV காட்டிய குட்டு!
இன்ஸ்டாகிராம் காதல் நாடகம்; பேராசிரியையிடம் நகை பறித்த ‘காதலன்’ உட்பட 4 பேர் கைது - CCTV காட்டிய குட்டு!
சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கோர விபத்து: நண்பர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாப பலி!
சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கோர விபத்து: நண்பர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாப பலி!
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சதாப்தி ரயிலில் வெடிகுண்டு சோதனை! மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு..! 
சதாப்தி ரயிலில் வெடிகுண்டு சோதனை! மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு..! 

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
Viswanath & Sons Review: விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
TN Govt: ”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
Brezza vs Venue EMI Comparison: மாருதி பிரெஸ்ஸா - ஹூண்டாய் வென்யூ கார்களுக்கான EMI-களுக்கு இடையே உள்ள வேறுபாடு என்ன.? எது பெஸ்ட்.?
மாருதி பிரெஸ்ஸா - ஹூண்டாய் வென்யூ கார்களுக்கான EMI-களுக்கு இடையே உள்ள வேறுபாடு என்ன.? எது பெஸ்ட்.?
கேரளாவா, ஜப்பானா? மின்னும் தரை.. முகமே பார்க்கலாம்! வியக்கவைத்த காசர்கோடு- வைரல் வீடியோ
கேரளாவா, ஜப்பானா? மின்னும் தரை.. முகமே பார்க்கலாம்! வியக்கவைத்த காசர்கோடு- வைரல் வீடியோ
Embed widget