மேலும் அறிய

எலும்புக்கூடை வைத்து துப்பு..! கள்ளக்காதலால் நடந்த கொலையை கச்சிதமாக கண்டுபிடித்த காவல்துறை..!

கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொண்டு கணவனை கொலை செய்த மனைவியை கைது செய்தனர்.

சில மனித எலும்பு கூடு
 
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அடுத்த வெள்ளப்பந்தல் கிராமத்தில் ஏரியின் அருகில் உள்ள நில பகுதியில் மனித எலும்புகள் சிதறி கிடந்தன. அந்த பகுதியில் ஆடு, மாடுகளை மேய்க்க சென்ற சில மனித எலும்பு கூடு சிதறி கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து திருக்கழுக்குன்றம் போலீசாருக்கு அந்த பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர். இதுகுறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த திருக்கழுக்குன்றம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் தலைமையில் சிதறி கிடந்த எலும்புகளை சேகரித்து மனித எலும்புகள்தான் என்று உறுதி செய்தனர். இதுகுறித்து செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரதீப், மாமல்லபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெகதீஸ்வரன் ஆகியோருக்கு தகவல் அளித்தனர்.

எலும்புக்கூடை வைத்து துப்பு..! கள்ளக்காதலால் நடந்த கொலையை கச்சிதமாக கண்டுபிடித்த காவல்துறை..!
 
மனித தலை மார்பக எலும்பு 
 
அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீஸ் சூப்பிரண்டு பிரதீப் விசாரணை மேற்கொண்டார். மனித எலும்புகளை சேகரிக்கும்போது அந்த பகுதி அருகில் உள்ள ஏரியில் இருந்து துர்நாற்றம் வீசுவது தெரியவந்தது. அந்த பகுதிக்கு சென்ற போலீசார் 2 அடி பள்ளத்தில் மண்டை ஓடு ஒரு பக்கவாட்டில் நொறுங்கிய நிலையிலும் , மனித தலை மார்பக எலும்பு உள்ளிட்ட உடல் பாக எலும்புகள் மற்றும் துணிகள் கிடந்ததை கண்ட போலீசார் டாக்டர் உதவியுடன் எலும்புகளை சேகரித்து பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
 
கள்ளக் காதலன்
 
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில்  சம்பவம் நடந்த  வெள்ளப் பந்தல் கிராமத்தில் ஒரு வயல் வெளி பம்ப் செட்டில் தங்கியிருந்த  குடும்பத்தினர் சில தினங்களாக காணவில்லை, என்று பொது மக்கள் கொடுத்த தகவலையடுத்து அந்த குடும்பத்தை சேர்ந்தவர்கள் யார் என்று திருக்கழுக்குன்றம் காவல் ஆய்வாளர் ரவிக்குமார் தலைமையிலான போலீசார் தேடி கண்டு பிடித்தனர். அப்போது சித்ரா ( வயது 26) என்ற பெண்ணை அழைத்து வந்து  போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில் தானும், கள்ளக் காதலன் சக்திவேல் என்பவரும் சேர்ந்து கணவர் சந்திரனை என்ற குமாரை கொன்று புதைத்ததை ஒப்புக் கொண்டார். 
 
எலும்புக்கூடை வைத்து துப்பு..! கள்ளக்காதலால் நடந்த கொலையை கச்சிதமாக கண்டுபிடித்த காவல்துறை..!
 
மேலும் சித்ரா  போலீசில் தெரிவித்ததாவது, திருக்கழுக்குன்றம் அடுத்த மாதுளங்குப்பத்தை சேர்ந்த சந்திரன் என்ற குமார் ( வயது 35)  என்பவருக்கும், கல்பாக்கம் அடுத்த விட்டிலாபுரம் கிராமத்தை சேர்ந்த  எனக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு  திருமணமாகி இரண்டு வயதில் நாகராஜ் என்ற ஆண் குழந்தை உள்ள நிலையில்,  நாங்கள் திருக்கழுக்குன்றம் அடுத்த வெள்ளப் பந்தல் கிராமத்தை சேர்ந்த துரைபாபு என்பவரின், வயல் வெளியைப் பார்த்துக் கொண்டு அங்கேயே பம்ப் செட்டில் தங்கியிருந்தோம். இந்நிலையில்  செங்கல்பட்டை அடுத்த மையூர் கிராமத்தை சேர்ந்த சக்திவேல் என்பவருடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது.
 
கடந்த மாதம் எனது கணவர் சந்திரன் வெளியில் சென்றிருந்த போது சக்திவேல் வெள்ளப் பந்தல் கிராமத்திற்கு வந்தார். அப்போது நானும் சக்திவேலும் தனிமையில் இருந்தோம். இந்நிலையில் திடீரென அங்கு வந்த கணவர் சந்திரன் எங்களை பார்த்து விட்டு எங்களை அடித்தார். உடனே நானும் கள்ளக் காதலன் சக்திவேலும் சேர்ந்து சந்திரன் தலையில் கட்டையால், தாக்கி கொலை செய்து விட்டு அருகில் உள்ள ஏரிப் பகுதியில் புதைத்து விட்டு தப்பி சென்றோம் என்று தெரிவித்தார். சந்திரனை கொலை செய்த சித்ரா மற்றும் சக்திவேலை கைது செய்த போலீசார் திருக்கழுக்குன்றம் குற்றவியல் நீதிமன்ற நீதிபதியிடம், ஆஜர்ப்படுத்தி நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைத்தனர். மேலும்  எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்ட 10 மணி நேரத்திற்குள் குற்றவாளிகளை கண்டு பிடித்து  கைது செய்த போலீசாரை  பொதுமக்கள்  வெகுவாக பாராட்டினர்
எலும்புக்கூடை வைத்து துப்பு..! கள்ளக்காதலால் நடந்த கொலையை கச்சிதமாக கண்டுபிடித்த காவல்துறை..!
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Seeman: இடைநிலை ஆசிரியர்களுக்கும் சம ஊதியத்திற்கு அரசாணை வெளியிட வேண்டும் - சீமான் வலியுறுத்தல்
Seeman: இடைநிலை ஆசிரியர்களுக்கும் சம ஊதியத்திற்கு அரசாணை வெளியிட வேண்டும் - சீமான் வலியுறுத்தல்
தமிழகத்தில் கால் வைக்கும் முன் விஜய்க்கு கை கொடுத்த ராகுல் காந்தி.! ஷாக்காகி நிற்கும் திமுக
தமிழகத்தில் கால் வைக்கும் முன் விஜய்க்கு கை கொடுத்த ராகுல் காந்தி.! ஷாக்காகி நிற்கும் திமுக
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி: பணி நிரந்தரம் கோரி போராட்டம்! அதிர்ச்சியில் ஆசிரியர்கள்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி: பணி நிரந்தரம் கோரி போராட்டம்! அதிர்ச்சியில் ஆசிரியர்கள்
Iran Warns America: அமெரிக்காவை எச்சரித்த ஈரான் உச்ச தலைவர்; அமெரிக்கர்கள் வெளியேற ட்ரம்ப் உத்தரவு; வெடிக்குமா போர்.?
அமெரிக்காவை எச்சரித்த ஈரான் உச்ச தலைவர்; அமெரிக்கர்கள் வெளியேற ட்ரம்ப் உத்தரவு; வெடிக்குமா போர்.?
ABP Premium

வீடியோ

H.ராஜா ARREST! போலீசாருடன் வாக்குவாதம்! ”உங்க வண்டில ஏன் ஏறணும்”
ஆட்சியில் பங்கு பஞ்சாயத்து! தமிழ்நாடு வரும் ராகுல்! நிர்வாகிகளுடன் MEETING
Vijay in CBI Office | டெல்லி சென்ற விஜய் திக்திக் CBI விசாரணை உச்சக்கட்ட பரபரப்பில் தவெகவினர் | TVK | Karur Stampede
Annamalai 2026 election | அரவக்குறிச்சிக்கு NO! தொகுதி மாறும் அண்ணாமலை? பாஜகவின் கொங்கு கணக்கு

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Seeman: இடைநிலை ஆசிரியர்களுக்கும் சம ஊதியத்திற்கு அரசாணை வெளியிட வேண்டும் - சீமான் வலியுறுத்தல்
Seeman: இடைநிலை ஆசிரியர்களுக்கும் சம ஊதியத்திற்கு அரசாணை வெளியிட வேண்டும் - சீமான் வலியுறுத்தல்
தமிழகத்தில் கால் வைக்கும் முன் விஜய்க்கு கை கொடுத்த ராகுல் காந்தி.! ஷாக்காகி நிற்கும் திமுக
தமிழகத்தில் கால் வைக்கும் முன் விஜய்க்கு கை கொடுத்த ராகுல் காந்தி.! ஷாக்காகி நிற்கும் திமுக
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி: பணி நிரந்தரம் கோரி போராட்டம்! அதிர்ச்சியில் ஆசிரியர்கள்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி: பணி நிரந்தரம் கோரி போராட்டம்! அதிர்ச்சியில் ஆசிரியர்கள்
Iran Warns America: அமெரிக்காவை எச்சரித்த ஈரான் உச்ச தலைவர்; அமெரிக்கர்கள் வெளியேற ட்ரம்ப் உத்தரவு; வெடிக்குமா போர்.?
அமெரிக்காவை எச்சரித்த ஈரான் உச்ச தலைவர்; அமெரிக்கர்கள் வெளியேற ட்ரம்ப் உத்தரவு; வெடிக்குமா போர்.?
BiggBoss Tamil : வெளியவந்து ரொம்ப வருத்தப்பட்டேன்...18 லட்சத்துடன் வெளியேறிய கானா வினோத் வீடியோ
BiggBoss Tamil : வெளியவந்து ரொம்ப வருத்தப்பட்டேன்...18 லட்சத்துடன் வெளியேறிய கானா வினோத் வீடியோ
PhD Scholarship: பட்டப்படிப்பு மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை! வெளியான அறிவிப்பு- உடனே விண்ணப்பிங்க!
PhD Scholarship: பட்டப்படிப்பு மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை! வெளியான அறிவிப்பு- உடனே விண்ணப்பிங்க!
பொங்கல் விடுமுறை மழையிலேயே போய்டுமா? ஒரு பக்கம் குளிர் அதிகரிக்குமாம் - வானிலை மையம் விடுத்த எச்சரிக்கை என்ன?
பொங்கல் விடுமுறை மழையிலேயே போய்டுமா? ஒரு பக்கம் குளிர் அதிகரிக்குமாம் - வானிலை மையம் விடுத்த எச்சரிக்கை என்ன?
India Germany Visa: அப்பாடா, இனி பிரச்னையே இல்ல.! இந்தியர்களுக்கு இனிப்பான அறிவிப்பை வெளியிட்ட ஜெர்மனி; அது என்ன.?
அப்பாடா, இனி பிரச்னையே இல்ல.! இந்தியர்களுக்கு இனிப்பான அறிவிப்பை வெளியிட்ட ஜெர்மனி; அது என்ன.?
Embed widget