பட்டப் பகலில் நடந்த ஏறிய கொலை..! 10 பேர் பெயரை தட்டி தூக்கிய போலீஸ்..! கொள்ளைக்கான காரணம் இதுதான் ?
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் பகுதியில் நடைபெற்ற கொலை சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் ருத்திரான் கோயில் தெருவை சேர்ந்தவர் சர்புதீன்(40), இவருக்கு திருமணம் ஆகி 3 குழந்தைகள் உள்ள நிலையில், கடந்த 2022 ஆம் ஆண்டு திருக்கழுக்குன்றத்தில் உள்ள மசூதி தெரு மற்றும் ஜாகிர் ஹுசைன் தெரு பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அதிக அளவில் உள்ளதாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதியைச் சேர்ந்த சிலருடன் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
திட்டமிட்டு கொலை
இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் திருக்கழுக்குன்றத்தில் இருந்து கல்பாக்கம் வரை தனது காரில் சென்று கொண்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத 5 பேர் கொண்ட கும்பல் சர்புதீன் சென்று கொண்டிருந்த காரை வழிமறித்து மறைத்து வைத்திருந்த அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடி உள்ளனர். இதில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். தகவல் அறிந்து வந்த திருக்கழுக்குன்றம் போலீசார் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக செங்கல்பட்டு தலைமை அரசு மருத்துவமனைக்கு உடலை அனுப்பி வைத்து கொலை குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவமானது பட்டப் பகலிலேயே இது போன்ற துணிகர சம்பவம் நடந்திருப்பது அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
பரபரப்பை ஏற்படுத்திய சிசிடிவி காட்சிகள்
கொலை சம்பவம் நடைபெற்ற இடத்தில் இருந்த, வணிக வளாக கட்டிடத்தில் முகப்பில் இருந்த சிசிடிவி காட்சிகளில் கொலை சம்பவம் பதிவாகி இருந்தது, இந்த சிசிடிவி காட்சிகள் தற்பொழுது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை சம்பவம் , நன்கு திட்டமிட்டு செய்யப்பட்ட சம்பவம் என்பது தற்பொழுது, வெளியாகி உள்ள சிசிடிவி கட்சியின் மூலம் அம்பலம் ஆகியுள்ளது. பதிவாகியுள்ள சிசிடிவி காட்சிகளில், சரபுதீன் தனது காரை இயக்குவதற்காக, காரின் கதவைத் திறந்தவுடன், பின்னால், இருசக்கர வாகனத்தில் ஒரு கும்பல் வருகின்றது. வந்தவுடன் ஒரு நொடி கூட தாமதிக்காமல், நேரடியாக அவரை கண்மூடித்தனமாக கத்தியால் வெட்டி தாக்குதலில் ஈடுபட்டது. மேலும், அந்த கும்பலில் இருந்த இரண்டு மூன்று பேர் , காரின் கதவு மற்றும் முன்புறம் இருந்த கண்ணாடியை உடைத்து அவரை வெளியே தள்ளி மீண்டும் விட்டு விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். சுமார் ஒன்றரை நிமிடத்தில் இந்த சம்பவத்தை அந்த கும்பல் நிறைவேற்றி இருந்தது. இந்த காட்சிகள் தற்பொழுது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
கொலை செய்யப்பட்ட வழக்கில் 10 பேர் கைது
சிசிடிவி காட்சிகள் மற்றும் செல்போன் சிக்னல் வைத்து போலீசார் தீவிர தேடுதல், வேட்டையில் இறங்கினர். அப்போது, கொலை வெறி தூண்டுதலுக்கு மூளையாய் இருந்து வேலை செய்த, திருக்கழுக்குன்றம் மசூதி தெருவை சேர்ந்த சலீம் பாஷா, என்பவரை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில், கொலைக்கு காரணமான திருக்கழுக்குன்றம் பகுதியை சேர்ந்த, இப்ராஹிம், மன்சூர் அலிகாந்த், முகமது அஜீஸ், வெள்ளை என்கிற அப்துல் காதர், பாரூக், ரஹ்மதுல்லா, சலீம் பாஷா, சென்னை மீஞ்சூர் பகுதியை சேர்ந்த ரஷீத் உசேன், ரஹமான் மற்றும் திருக்கழுக்குன்றம் பேரூராட்சி 14 ஆவது திமுக வார்டு கவுன்சிலர் தவுலத் பீவி ஆகிய 10 பேரை போலீசார் கைது செய்தனர். திருக்கழுக்குன்றம் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி கதிரவன் முன்னிலையில், ஆஜர் படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். மேலும் சர்புதின் கொலை வழக்கில் தொடர்புடைய 4 பேரை, மாமல்லபுரம் காவல் துணை கண்காணிப்பாளர் ஜெகதீஸ்வரன் தலைமையில் 3 தனிப்படைகள் அமைத்து தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.