மேலும் அறிய
Advertisement
Crime : மிஸ்டுகால் காதலி.. குழந்தையை அவமானமாக நினைத்த விபரீதம்.. சிக்கிய கொடூர தந்தை
"4-மாத ஆண் குழந்தையின் எலும்புக்கூடுகளை கைப்பற்றி உடல் கூறு ஆய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்"
மிஸ்டு கால் மூலம்
சென்னை மீனம்பாக்கம் பகுதியில் சேர்ந்த விஜயலட்சுமி வயது (20). கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு மிஸ்டு கால் மூலம் செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் பகுதியை சேர்ந்த வருண் (20) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இந்த பழக்கம் காதலாக மாறியுள்ளது. இந்நிலையில் விஜயலட்சுமி கர்ப்பம் ஆனதால் வருண் தனது வீட்டிற்கு தெரியாமல் விஜயலட்சுமியை திருமணம் செய்து மாடம்பாக்கம் பகுதியில் குடியமர்த்தி வைத்தார். இவர்களுக்கு கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர்
இதுவரை வீட்டிற்கு தெரியாமல் இருந்து வந்த நிலையில் விஜயலட்சுமி வருணின் வீட்டிற்கு தன்னையும், குழந்தையையும் அழைத்து செல்லுமாறு கூறியுள்ளார். இதனையடுத்து வருண், பெற்றோரிடம் தனக்கு திருமணம் ஆனதாகவும், 4-மாதத்தில் ஆண் குழந்தை பிறந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் வருணிடம் விஜயலட்சுமி மற்றும் அவரது ஆண் குழந்தையை எங்கேயாவது விட்டு விட்டு வருமாறு கூறியுள்ளனர்.
நண்பருக்கு குழந்தை இல்லாததால்..
இதனால் விஜயலட்சுமியிடம் இருந்து கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு ஆண் குழந்தையை வாங்கிய வருண் தனது நண்பருக்கு குழந்தை இல்லாததால் அவரது வீட்டில், குழந்தை வளரட்டும் என கூறியுள்ளார். தொடர்ந்து குழந்தையை கூடுவாஞ்சேரி அடுத்த பெருமாட்டு நல்லூர் சுடுகாட்டிற்கு எடுத்து வந்த வருண் குழந்தையை கழுத்தை நெரித்து கொன்று புதைந்துள்ளார். நீண்ட நாட்களாக குழந்தையை பார்க்க வேண்டும் என விஜயலட்சுமி நினைத்த நிலையில், வருணின் நண்பர் வீட்டிற்கு சென்று பார்த்துள்ளார்.
போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
ஆனால் அங்கு குழந்தை இல்லாததால் சந்தேகமடைந்த விஜயலட்சுமி மணிமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து வருணை கைது செய்த போலீசார், அவரிடம் நடத்திய தீவிர விசாரணையில் குழந்தையை கொன்று புதைத்தது தெரிய வந்தது. தொடர்ந்து பெருமாட்டு நல்லூர் சுடுகாடு அருகே புதைக்கப்பட்டிருந்த 4- மாத ஆண் குழந்தையின் எலும்புக்கூடுகளை கைப்பற்றி உடல் கூறு ஆய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
தமிழ்நாடு
அரசியல்
விழுப்புரம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion