மேலும் அறிய
மாற்றுத்திறனாளி சிறுமிக்கு பாலியல் தொந்தரவு - 70 வயது முதியவருக்கு 29 ஆண்டுகள் சிறை தண்டனை
15 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த குற்றவாளிக்கு 29 ஆண்டு சிறை தண்டனை-செங்கல்பட்டு போக்சோ நீதிமன்ற நீதிபதி தீர்ப்பு.
![மாற்றுத்திறனாளி சிறுமிக்கு பாலியல் தொந்தரவு - 70 வயது முதியவருக்கு 29 ஆண்டுகள் சிறை தண்டனை chengalpattu pocso court jugement 29 years jail for 70 year old man he rape 15 year old child மாற்றுத்திறனாளி சிறுமிக்கு பாலியல் தொந்தரவு - 70 வயது முதியவருக்கு 29 ஆண்டுகள் சிறை தண்டனை](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/07/22/e288fdd601c6d059c6bdba793c13ff4c1658453886_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
பாலியல் வழக்கில் 29 ஆண்டுகள் சிறை
செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் தாலுகா சித்தாமூர் அடுத்த போந்தூர் கிராமம் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த 14 வயது சிறுமியை (மனநல வளர்ச்சியற்ற) கடந்த 2015 ஆம் ஆண்டு, அதே பகுதியைச் சேர்ந்த எல்லன் என்பவரின் மகன் மண்ணாங்கட்டி (எ) ராஜமாணிக்கம் (70) பாலியல் கொடுமை செய்தார். இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார், மேல்மருவத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
![மாற்றுத்திறனாளி சிறுமிக்கு பாலியல் தொந்தரவு - 70 வயது முதியவருக்கு 29 ஆண்டுகள் சிறை தண்டனை](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/07/22/81cdb3a913c6cb9e534b192fd409745a1658453824_original.jpg)
இதுதொடர்பான வழக்கு செங்கல்பட்டு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. நீதிமன்ற விசாரணை நிறைவடைந்த நிலையில் முதியவருக்கு மூன்று பிரிவுகளில் 29 ஆண்டு ஆயுள் மற்றும் கடுங்காவல் தண்டனையும், 40 ஆயிரம் ரூபாய் அபராதம் அபராதம் கட்டத்தவறினால் மேலும், மூன்றரை ஆண்டு சிறை தண்டனையும் வழங்கி தீர்ப்பளித்தார். மேலும், பாதிக் கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு சார்பில் 5 இலட்சம் ரூபாய் நிவாரண தொகை வழங்க வேண்டும் என தீர்ப்பு கூறினார்.
![மாற்றுத்திறனாளி சிறுமிக்கு பாலியல் தொந்தரவு - 70 வயது முதியவருக்கு 29 ஆண்டுகள் சிறை தண்டனை](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/07/22/b223a0a81d41c59e8a9402eb2084a5e61658453852_original.jpg)
தீர்ப்பு விவரம்
குற்றவாளி மண்ணாங்கட்டி@ ராஜமாணிக்கம் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளும் உறுதி செய்யப்பட்டதால்,
1) 450 IPC - 10 வருடம் சிறை தண்டனை & 10,000/- ரூபாய் அபராதம் கட்ட தவறினால் ஒரு ஆண்டு காலம் சிறை தண்டனை
2) 354(B) IPC - 5 வருடம் & 5000 அபராதம், கட்ட தவறினால் 6 மாதம் சிறை தண்டனை
3) 6 of POCSO Act- ஆயுள் தண்டனை மற்றும் 25 ஆயிரம் அபராதம் கட்ட தவறினால் இரண்டு ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை. அனைத்தும் ஏக காலத்திற்கு, விதித்து போக்சோ நீதிமன்ற நீதிபதி தமிழரசி அவர்கள் தீர்ப்பளித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
[
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
க்ரைம்
பொது அறிவு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion