செங்கல்பட்டு அருகே பள்ளி மாணவர்கள் கடத்தல்; போலீஸ் தீவிர விசாரணை - நடந்தது என்ன ?
செங்கல்பட்டு தாலுகா காவல் நிலையத்திற்கு அளித்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பள்ளி ஆசிரியர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
செங்கல்பட்டில் பள்ளியில் பயின்று வரும் சகோதரி, சகோதரன் காரில் கடத்தல், புகாரின் அடிப்படையில் செங்கல்பட்டு தாலுகா போலீசார் தீவிர விசாரணை
செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஒழலூர் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் வேலன் (31) இவருக்கு ஆர்த்தி (30) என்கிற மனைவியும் ரக்சதா (11) என்கிற மகளும் வயது, நித்தின் (7) என்கிற மகனும் உள்ளனர். கடந்த ஓர் ஆண்டுகளுக்கு முன்பு வேலன் மற்றும் ஆர்த்தி ஆகிய இருவரும் பிரச்சனையின் காரணமாக ஆர்த்தி தனது தாய் வீட்டில் இருந்து வருகிறார்.
வேலனின் பிள்ளைகள் ஒழலூர் ஊராட்சியில் அரசு ஆதிதிராவிட நடுநிலைப்பள்ளியில் ரட்சிதா 6-ம் வகுப்பு மற்றும் நித்தின் 2-ம் வகுப்பு பயின்று வருகின்றனர். இந்நிலையில் ரட்சிதா மற்றும் நித்தின் ஆகிய இருவரும் இன்று காலை வழக்கம் போல் பள்ளிக்கு சென்ற நிலையில் மதியம் உணவு இடைவேளையில் அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் காரில் இரண்டு பேரையும் கடத்திச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது
இதுகுறித்து தகவல் அறிந்த வேலன் செங்கல்பட்டு தாலுகா காவல் நிலையத்திற்கு அளித்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பள்ளி ஆசிரியர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இச்சம்பவம் குறித்து காவல்துறையை தொடர்பு கொண்டு விசாரித்த பொழுது : முதற்கட்டமாக குழந்தைகள் கடத்தப்பட்டதாக கிடைத்த புகாரின் அடிப்படையில் விசாரணையை மேற்கொண்டு வருகிறோம். அருகில் இருக்கும் சிசிடிவி காட்சிகளையும் கைப்பற்றி விசாரணையை துவக்க உள்ளோம். முதற்கட்ட விசாரணையில் குழந்தைகளின் தாய், தந்தை பிரிந்து வாழ்வது தெரியவந்துள்ளது. தந்தை அரவணைப்பில் குழந்தைகள் வளர்ந்து வருவதால், தாயார் தரப்பில் குழந்தைகளை கடத்த இந்த சம்பவத்தில் ஈடுபட்டார்களா என விசாரணையை துவக்கி உள்ளோம் என தெரிவித்தனர்.