மேலும் அறிய
Advertisement
Crime: காதலர் தினத்தில் திருமணம்; இளம்பெண் திடீர் தற்கொலை - கூடுவாஞ்சேரி அருகே பரபரப்பு
கூடுவாஞ்சேரி அருகே பாண்டூரில் பரபரப்பு. காதலர் தினத்தன்று திருமணம் செய்த இளம் பெண் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை. தாம்பரம் ஆர்டிஓ விசாரணை
கணவன் அடிக்கடி குடித்து விட்டு
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்த பெருமாட்டுநல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட பாண்டூர் கிராமம், ஐயனாரப்பன் கோவில் தெருவை சேர்ந்த பொன்னரசி (26) என்பவருக்கும், மறைமலைநகர் அடுத்த கீழக்கரணை கிராமத்தை சேர்ந்த சிரஞ்சீவி (35) என்பவருக்கும் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி காதலர் தினத்தன்று, இரு வீட்டார் சம்பந்தத்துடன் சிங்கப்பெருமாள் கோவிலில் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், கணவருக்கு குடிப்பழக்கம் இருந்த காரணத்தால் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. கணவன் அடிக்கடி குடித்து விட்டு மனைவியிடம் சண்டையிட்டு வந்துள்ளார். கணவனுக்கு குடிப்பழக்கம் இருப்பது, மனைவிக்கு அறவே பிடிக்கவில்லை என கூறப்படுகிறது.
சந்தேகமடைந்த அவரது பெற்றோர்
மேலும் தம்பதியினருக்கு குழந்தை இல்லாத காரணத்தால் தாம்பரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் குழந்தையின்மைக்காக சிகிச்சை பெற்று வந்ததாகவும், இதனால் கணவர் வீட்டில் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது தாய் வீடான பாண்டூர் கிராமத்திற்கு பொன்னரசி வந்து தங்கி வந்துள்ளார். இதில் கணவரை பிரிந்து இருந்த காரணத்தால் மன வருத்தத்தில் இருந்து வந்த பொன்னரிசி, தனது சாவுக்கு காரணம் எனது மாமியார் மற்றும் எனது கணவரின் அண்ணனும்தான் காரணம் என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு, தனது வீட்டில் பூச்செடிக்கு அடிக்க வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை எடுத்து நேற்று இரவு குடித்துள்ளார். இதில் இன்று காலை வெகுநேரமாகியும் பொன்னரசி எழுந்திருக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவரது பெற்றோர் பொன்னரசியை எழுப்பிள்ளனர்.
கூடுவாஞ்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
அப்போது அவர் மயங்கிய நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனை அடுத்து அவரை மீட்டு பொத்தேரில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தத்தினர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் கூடுவாஞ்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் திருமணம் ஆகி ஒரு வருடம் ஆவதால் தாம்பரம் ஆர்டிஓ விசாரணை நடத்தி வருகின்றார். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டதுள்ளது.
Suicidal Trigger Warning.
வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104.
சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
உலகம்
இந்தியா
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion