மேலும் அறிய
Advertisement
செங்கல்பட்டு: நண்பரின் 8வயது மகளை வன்கொடுமை செய்த நபர்.. நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு!
8 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த குற்றவாளிக்கு ஆயுள் தண்டணை மற்றும் 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை- செங்கல்பட்டு போக்சோ நீதிமன்ற நீதிபதி தீர்ப்பு.
சென்னை கோவிலம்பாக்கம், சுண்ணாம்பு கொளத்தூரை சார்ந்த முருகன் என்பவரின் மகன் பிரசாந் (32) என்பவர் கடந்த 2017 ஆம் ஆண்டு, அதே பகுதியை சார்ந்த அவரின் நண்பரின் 8 வயது மகள் வீட்டில் தனியாக இருந்த போது அவரை தாக்கி, சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த வழக்கில், பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர்கள் மடிப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்தனர்,
புகாரின் பேரில் வழக்கு பதிவுசெய்த காவல்துறையினர் குற்றவாளியை சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் இன்று நீதிமன்ற விசாரணை நிறைவடைந்த நிலையில் குற்றவாளிக்கு நான்கு பிரிவுகளில் ஆயுள் தண்டனையும்,10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் மற்றும் 8 ஆண்டுகள் சிறை தண்டனையும்,41 ஆயிரம் ரூபாய் அபராதமும், அபராதம் கட்டத்தவறினால் மேலும்,3.9ஆண்டுகள் சிறை தண்டனையும் வழங்கி தீர்ப்பளித்தார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு சார்பில் 7 இலட்சம் ரூபாய் நிவாரண தொகை வழங்க வேண்டும் என செங்கல்பட்டு போக்சோ நீதிமன்ற நீதிபதி தமிழரசி தீர்ப்பு வழங்கினார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கல்வி
அரசியல்
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion