மேலும் அறிய

“தொழிலதிபரை கடத்திய விஜய் கட்சி நிர்வாகி” அதிரடியாக கைது செய்த காவல்துறையினர்..!

”விஜய் கட்சி தொடங்கி மாநாடு நடத்தவிருக்கும் நிலையில் அவர் கட்சி நிர்வாகி கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது”

திரும்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த இடையம்பட்டி நடுவூர் பகுதியில் பிரபல சன்பீடி உரிமையாளர் யுவராஜ். இவருடைய மகன் தியாகராஜ் வயது(39) இவர் முன்னாள் இளைஞர் அணி காங்கிரஸ் மாநில செயலாளராக இருந்துள்ளார். தியாகராஜின் மனைவி அகிலா இவருடைய அண்ணன் அரவிந்தன் பொன்னேரி ஊராட்சி மன்ற துணை தலைவராக உள்ளார். இருவரும் ஒன்றாக வெளியே செல்வது வழக்கம். தியாகராஜனிடம் அதிக பணம் இருப்பதை அறிந்த அரவிந்தன் பணம் பறிக்கும் நோக்கில் அவருடைய நண்பரும் தமிழக வெற்றிக் கழகம் மற்றும் விஜய் மக்கள் இயக்கத்தின் மாவட்ட மாணவரணி தலைவர் சேண்டி (எ) சந்தோஷ் என்பவரிடம் தியாகராஜனை கடத்தி அவரிடம் பணம் பறிக்கலாம் என கூறியதாக சொல்லப்படுகிறது. இதன் காரணமாக அரவிந்தன் மற்றும் சந்தோசும் இருவரும் தியாகராஜனை கடத்த, ஒரு கடத்தல் கும்பலை உருவாக்கியுள்ளனர். இதனால் தியாகராஜனை தகுந்த நேரம் பார்த்து கடந்த திட்டமிட்டனர். கடந்தா அ 23-ஆம் தேதி எலவம்பட்டி பகுதியில் உள்ள ஆர்.டி.ஓ அலுவலகத்திற்கு ஓட்டுநர் உரிமம் புதுப்பிக்க இருசக்கர வாகனத்தில் தியாகராஜன் சென்றுள்ளார். 

“தொழிலதிபரை கடத்திய விஜய் கட்சி நிர்வாகி” அதிரடியாக கைது செய்த காவல்துறையினர்..!

தொழிலதிபரை கடத்தி பணம் கேட்ட கும்பல்

அப்போது திட்டமிட்டபடி இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் மற்றும் காரில் வந்த 8 பேர் கொண்ட கும்பல் தியாகராஜன் சென்ற இருசக்கர வாகனத்தை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி தியாகராஜ் அணிந்திருந்த சட்டையை கழட்டி அவரை கையை கட்டி, கண்களை மூடி காரில் அழைத்துச் சென்றனர். அப்போது சந்தோஷின் மற்றொரு நண்பரான வீரமணிகண்டன் பார் கவுன்சிலில் பதிவு செய்யாத வழக்கறிஞராகவும், பாஜகவில்  வெளிநாட்டு வாழ் பிரிவு திருப்பத்தூர் மாவட்ட தலைவராக உள்ளார். இவர் தனது மாமனாருக்கு சொந்தமான லக்கிநாயக்கன்பட்டியில் உள்ள பார்ம் ஹவுஸில் கடத்திவரப்பட்ட தியாகராஜனை அடைத்து வைத்து கடத்தல் கும்பலுடன் ஒரு கோடி பணம் கேட்டும், சரா மாரியாக தாக்கியும் மிரட்டியுள்ளனர். அதன்பிறகு தியாகராஜ் என்னிடம் அவ்வளவு பணம் இல்லை என் அப்பாவிடமும் நான் பேசுவதில்லை எனவே என்னுடைய மச்சான் அரவிந்தனுக்கு போன் செய்து நான் பணத்தைக் கேட்டுப் பார்க்கிறேன் எனக் கூறியுள்ளார். பிறகு தியாகராஜனும் தனது மச்சான் அரவிந்தனுக்கு போன் செய்து அவசரமாக பணம் வேண்டும் உன்னிடம் இருக்கும் பணம் அனைத்தையும் எடுத்து கொண்டுவரக்கூறி தொலைபேசியை துண்டித்துள்ளார்.

“தொழிலதிபரை கடத்திய விஜய் கட்சி நிர்வாகி” அதிரடியாக கைது செய்த காவல்துறையினர்..!

கடத்திலில் ஈடுபட்ட கும்பல் மீது காவல் நிலையத்தில் புகார்

அப்போது கடத்தல் கும்பலின் திட்டப்படி  முதலில் ஒரு கோடி கேட்டு மிரட்டி உள்ளார். அவ்வளவு பணம் இல்லை என்பதால் 50 லட்சம் கேட்டுள்ளனர். அதுவும் தர முடியாது என்று கூறியதற்கு பின்பு படிப்படியாக குறைத்து இறுதியில் 12 லட்சம் கொடுப்பதாக அரவிந்தன் ஒப்புக்கொண்டார். இவை அனைத்தும் அரவிந்தன் திட்டபடியே நடந்தேறி வந்துள்ளது. அதன் பின்னர் கடத்தல் கும்பல் அரவிந்தனை தர்மபுரி மேம்பாலம் கீழே வரவைத்து 12 லட்சம் ரூபாயை பெற்றுக் கொண்ட பின்பு கடத்தல் கும்பலிடம் கொடுத்துவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார். அதன் பின் தியாகராஜ் சட்டை கழட்டப்பட்ட நிலையில் கண்களை கட்டி தர்மபுரி மேம்பாலம் கீழே கடத்திச் சென்ற கும்பல் விட்டு சென்றுள்ளனர்.  உடல் முழுவதும்  படுகாயத்துடன் இருந்த தியாகராஜ் அவ்வழியாக சென்ற ஆட்டோவில் தனியார் மருத்துவமனையில்  தியாகராஜை சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

பின்னர்  தன்னுடைய செல்போனில் இருந்து அவருடைய குடும்பத்தினருக்கு தொடர்பு கொண்டு நடந்த சம்பவம் குறித்து தெரிவித்துள்ளார். தகவல் அறிந்து மருத்துவமனைக்கு வந்த  குடும்பத்தினர் அவரை வீட்டுக்கு அழைத்து சென்றுள்ளனர். இது குறித்து அவரது மகன் யுவராஜ், கந்திலி காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் தனிப்படைகள் அமைத்து கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் குறித்து தீவிர விசாரணையில் மேற்கொண்டனர்.

“தொழிலதிபரை கடத்திய விஜய் கட்சி நிர்வாகி” அதிரடியாக கைது செய்த காவல்துறையினர்..!

தொழிலதிபரை கடத்திய ஆறு பேர் கைது

அப்போது சந்தேகம் அடைந்த காவல்துறையினர் அரவிந்தனை விசாரணைக்கு அழைத்து  கிடுக்கு பிடி விசாரணை மேற்கொண்டதில் தியாகராஜனிடம் 12 லட்சம் கொடுத்ததாக கூறிவிட்டு கடத்தல் கும்பலிடம் பத்தரை இலட்சம் மட்டுமே கொடுத்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டதில் அரவிந்தன் கடத்தலுக்கு மூளையாக செயல்பட்டதாக ஒப்புக்கொண்டார். இதன் காரணமாக கடத்தல் சம்பவத்துக்கு முக்கிய காரணமாக இருந்த விஜய் மக்கள் இயக்கத்தின் மாவட்ட மாணவரணி தலைவர் சந்தோஷ், வீரமணிகண்டன், தினகரன்,அஜித்குமார், விஷ்வா, உள்ளிட்ட ஆறு பேரை தனி படையினர் பிடித்தனர்.

பின்பு கந்திலி காவல் நிலையத்தில் அரவிந்தன் உட்பட ஆறு பேரையும் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும் இந்த கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட சிலர் தப்பி ஓடியதாகவும் அவர்களைத் தேடும் பணியிலும் தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். சொந்த மாமனையே அடியாட்கள் வைத்து கடத்தி பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்ட மச்சான் மற்றும் தமிழக வெற்றிக்கழக நிர்வாகி பாஜக நிர்வாகி உள்ளிட்டோரால் திருப்பத்தூரில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

”ஓய்ந்தது பரப்புரை - கடைசி கட்ட திருப்பங்கள் இலங்கையை ஆளப்போவது யார்?” - ஸ்பெஷல் ரிப்போர்ட்!
”ஓய்ந்தது பரப்புரை - கடைசி கட்ட திருப்பங்கள் இலங்கையை ஆளப்போவது யார்?” - ஸ்பெஷல் ரிப்போர்ட்!
”எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு அறிக்கை, வேலுமணிக்கு மவுனமா?” EPS ஆடும் ஆட்டம் என்ன..?
”எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு அறிக்கை, வேலுமணிக்கு மவுனமா?” EPS ஆடும் ஆட்டம் என்ன..?
”இந்த நாளில் தான் உதயநிதி துணை முதல்வர் அறிவிப்பு” தேதியை குறிப்பிட்ட அமைச்சர்..!
”இந்த நாளில் தான் உதயநிதி துணை முதல்வர் அறிவிப்பு” தேதியை குறிப்பிட்ட அமைச்சர்..!
ஒரு பள்ளி விடமால் ஆய்வு செய்வேன்- எச்சரித்த ஆட்சியர்....!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Trichy bike stunt apology : வம்பிழுத்த இளைஞர்! சுளுக்கெடுத்த வருண் SP! திருச்சியில் பரபரப்புTirupati laddu animal fat : ”திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு” சந்திரபாபு பகீர்Kuraishi on Manimegalai Priyanka : Govt Bus Damage : படிக்கட்டு உடைந்த பஸ்” உயிரோடு விளையாடலாமா” ஆத்திரத்தில் பயணிகள்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
”ஓய்ந்தது பரப்புரை - கடைசி கட்ட திருப்பங்கள் இலங்கையை ஆளப்போவது யார்?” - ஸ்பெஷல் ரிப்போர்ட்!
”ஓய்ந்தது பரப்புரை - கடைசி கட்ட திருப்பங்கள் இலங்கையை ஆளப்போவது யார்?” - ஸ்பெஷல் ரிப்போர்ட்!
”எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு அறிக்கை, வேலுமணிக்கு மவுனமா?” EPS ஆடும் ஆட்டம் என்ன..?
”எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு அறிக்கை, வேலுமணிக்கு மவுனமா?” EPS ஆடும் ஆட்டம் என்ன..?
”இந்த நாளில் தான் உதயநிதி துணை முதல்வர் அறிவிப்பு” தேதியை குறிப்பிட்ட அமைச்சர்..!
”இந்த நாளில் தான் உதயநிதி துணை முதல்வர் அறிவிப்பு” தேதியை குறிப்பிட்ட அமைச்சர்..!
ஒரு பள்ளி விடமால் ஆய்வு செய்வேன்- எச்சரித்த ஆட்சியர்....!
”எஸ்.பி.வேலுமணிக்காக களமிறங்கிய ஓபிஎஸ் மகன் ஜெயபிரதீப்” தமிழக அரசு மீது பரபரப்பு புகார்..!
”எஸ்.பி.வேலுமணிக்காக களமிறங்கிய ஓபிஎஸ் மகன் ஜெயபிரதீப்” தமிழக அரசு மீது பரபரப்பு புகார்..!
சென்னையை அதிர வைத்த சூட்கேஸ் கொலை.. பெண்ணை வீட்டிற்கு வரவைத்த இளைஞர்.. நடந்தது என்ன ?
சென்னையை அதிர வைத்த சூட்கேஸ் கொலை.. பெண்ணை வீட்டிற்கு வரவைத்த இளைஞர்.. நடந்தது என்ன ?
Breaking News LIVE : சூர்யா நடிக்கும் கங்குவா படத்தின் ரிலீஸ் தேதி நவம்பர் 14 என அறிவிப்பு
Breaking News LIVE : சூர்யா நடிக்கும் கங்குவா படத்தின் ரிலீஸ் தேதி நவம்பர் 14 என அறிவிப்பு
”தொழிலாளர்களை விவசாயிகளாக மாற்றி புரட்சி செய்த புது ஆறு” இப்போ வயசு 91ங்க!!!
”தொழிலாளர்களை விவசாயிகளாக மாற்றி புரட்சி செய்த புது ஆறு” இப்போ வயசு 91ங்க!!!
Embed widget