மேலும் அறிய

“நாம சேர்ந்து செத்துருவோம்” .. சாகும் நேரத்தில் எஸ்கேப் ஆன காதலன்.. இளம்பெண் கொலை!

வைஷாகானுக்கும், அந்த பெண்ணும் நீண்ட காலம் அறிமுகம் இருந்துள்ளது. சிறு வயதில் இருந்து வைஷாகான் அந்த பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்துள்ளார். அதனை சிறு வயதிலேயே அப்பெண்ணும் நம்பியுள்ளார். 

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்துக் கொண்டதாக பதியப்பட்ட வழக்கின் விசாரணை முடிவில் அது திட்டமிட்ட கொலை என தெரிய வந்துள்ளது. 

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள எலத்தூரில் தான் இந்த கொடூரமான சம்பவம் நடைபெற்றுள்ளது. கடந்த ஜனவரி 24ம் தேதி அங்குள்ள பட்டறை ஒன்றில்  இருந்து இளம்பெண் ஒருவர் தூக்கிட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டார். ஆரம்பத்தில் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த எலத்தூர் போலீசார் உள்ளிட்ட அனைவரும் இதனை தற்கொலை என நினைத்தனர். பிரேத பரிசோதனை அறிக்கைக் கூட அப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்பதை உறுதிப்படுத்தியது. 

ஆனால் அப்பெண் வீட்டில் இருந்து ஏன் இந்த பட்டறையில் வந்து தற்கொலை செய்துக் கொள்ள வேண்டும் என்ற கேள்வி போலீசாருக்கு வலுத்தது. சம்பந்தப்பட்ட பட்டறை உரிமையாளரான வைஷாகானிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அவர் முன்னுக்குப் பின் முரணாக பதிலளிக்க போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். 

அப்போது அடிக்கடி அந்த பெண் வைஷாகான் பட்டறைக்கு வந்து செல்லும் காட்சிகள் இருந்துள்ளது. இதனால் அந்த பெண் தற்கொலை விஷயத்தில் ஏதோ மர்மம் உள்ளது என நினைத்த போலீசார் அவரை துருவி துருவி விசாரணை செய்ததில் உண்மை வெளிப்பட்டது. அதாவது வைஷாகானுக்கும், அந்த பெண்ணும் நீண்ட காலம் அறிமுகம் இருந்துள்ளது. சிறு வயதில் இருந்து வைஷாகான் அந்த பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்துள்ளார். ஆனால் இதுதொடர்பாக அந்த பெண் கேட்டபோது காதலிப்பதாக கூறியுள்ளார்.  அதனை சிறு வயதிலேயே அப்பெண்ணும் நம்பியுள்ளார். 

அப்படியாக காதல் ஆசை காட்டி பலமுறை அந்த பெண்ணை வைஷாகான் பாலியல் வன்கொடுமை செய்ததாக சொல்லப்படுகிறது. இதற்கிடையில் வைஷாகானுக்கு மற்றொரு பெண்ணுடன் திருமணமாகியுள்ளது. எனினும் அந்த பெண் தன்னையும் திருமணம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி வந்துள்ளார். இதனிடையே சமீபத்தில் மீண்டும் அந்த பெண் திருமணம் செய்துக் கொள்ள வேண்டும் என கூறியுள்ளார். ஆனால் வைஷாகான் மறுக்கவே இருவருக்குமிடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

இதனால் அப்பெண் தங்களுக்கிடையேயான உறவை தனது மனைவிக்கும், குடும்பத்தினருக்கும் கூறினால் தனது வாழ்க்கை பாழாகிவிடும் என நினைத்த வைஷாகான் அவரை கொலை செய்ய திட்டமிட்டார். அதன்படி தன்னால் உன்னை திருமணம் செய்துக் கொண்டு வாழ முடியாது. அதனால் சேர்ந்து சாகலாம் என கூறி ஜனவரி 24ம் தேதி பட்டறைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு இருவரும் தூக்கு மாட்ட முடிவு செய்துள்ளனர். இரண்டு ஸ்டூல் போடப்பட்டு அந்த பெண் ஏறி தனது கழுத்தில் கயிறை மாட்டி இறுக்கியுள்ளார். இதனைத் தொடர்ந்து வைஷாகான் மற்றொரு ஸ்டூலில் ஏறாமல் அந்த பெண் இருந்த ஸ்டூலை தட்டி விட அப்பெண் துடிதுடித்து இறந்துள்ளார் என தெரிய வந்துள்ளது. 

இதற்கிடையில் வைஷாகான் மீது கொலை வழக்கோடு, போக்சோ வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தலைப்பு செய்திகள்

" உதவுவது போல் நடித்து கல்லூரி மாணவியிடம் பாலியல் அத்துமீறல் " காவல் ஆய்வாளரின் ஓட்டுநர் கைது
" கள்ளக் காதலனுடன் தனிக் குடித்தனம் " 3 வயது குழந்தையை அலற அலற அடித்தே கொன்ற கொடூரம்
" மனைவியுடன் தவறான உறவு " எச்சரித்தும் கேட்காததால் நடந்த அதிர்ச்சி சம்பவம்
காஞ்சிபுரத்தில் பரபரப்பு! ‘ஆப்பரேஷன் சைபர் விஜில்’: சிக்கிய 18 போ்! வெளியான அதிர்ச்சி பின்னணி!
காஞ்சிபுரத்தில் பரபரப்பு! ‘ஆப்பரேஷன் சைபர் விஜில்’: சிக்கிய 18 போ்! வெளியான அதிர்ச்சி பின்னணி!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Trump Vs Netanyahu: ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
"என்னைப் பத்தி கிசுகிசு வந்துடும்னு பயம்.." மனம் திறந்த ஜமீன்கோட்டை ஹீரோயின்! ஞாபகம் இருக்கா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
Embed widget