மேலும் அறிய

தள்ளுவண்டியில் சிறுவன் சடலம்.! உணவின்றி இறந்தாரா? அதிர்ச்சியை ஏற்படுத்திய பிரேத பரிசோதனை முடிவு

சாலையோர தள்ளு வண்டியில் சடலமாக மீட்கப்பட்ட சிறுவன் உணவின்றி இறந்துள்ளான் - பிரேத பரிசோதனை அறிக்கையில் தகவல்

விழுப்புரம் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மேல் தெரு என்ற இடத்தில் சிவகுரு என்பவர் உள்ளார். இவர் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக சாலையோரம் நான்கு சக்கர தள்ளுவண்டியில் சலவை தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் அவர் கடையை அடைத்து வீட்டுக்கு சென்ற சிவகுரு மீண்டும் அடுத்த நாள் வந்துள்ளார். அப்போது அவர் அங்கு பார்த்த போது தள்ளு வண்டியில் 5 வயது மதிக்கத்தக்க சிறுவன் இருந்துள்ளான். அந்த சிறுவன் தூங்குவதாக நினைத்து அருகில் இருந்தவர்கள் சிறுவனை தட்டி எழுப்ப முயற்சி செய்துள்ளனர்

மழைக்காலத்தில் உடலை கதகதப்பாக்கும் உணவுகள் இதோ!

ஆனால் சிறுவன் அசைவின்றி கிடந்ததால் அதிர்ச்சி அடைந்து அவர் விழுப்புரம் மேற்கு காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்துபார்த்ததில் சிறுவன் சடலமாக இருந்தது தெரியவந்தது.

தள்ளுவண்டியில் சிறுவன் சடலம்.! உணவின்றி இறந்தாரா? அதிர்ச்சியை ஏற்படுத்திய பிரேத பரிசோதனை முடிவு

Jaw Pain and Heart Attack | தாடை வலி, மாரடைப்பு வருவதற்கான அறிகுறியா?

இதனால் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து அப்பகுதியில் உள்ள அனைத்து வீடுகளிலும் சிறுவனின் புகைப்படத்தை காட்டி விசாரணை மேற்கொண்டதில் அனைவரும் தங்கள் வீட்டு குழந்தை இல்லை என்று தெரிவித்துள்ளனர். இதனால் விழுப்புரம் மேற்கு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Diabetes | சர்க்கரை நோய் குறித்து பரப்பப்படும் டாப் 10 பொய்கள் இவைதான்.. இதையெல்லாம் நம்பாதீங்க..

யாருடைய குழந்தை?, விழுப்புரம் பகுதியை சேர்ந்தவரா? அல்லது யாராவது கொலை செய்துவிட்டு தள்ளு வண்டியில் உடலை வீசிச் சென்றனரா என்ற கோணத்திலும விழுப்புரம் மேற்கு காவல் துறையினர் தற்போது தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

மேலும், எஸ்.பி., ஸ்ரீநாதா உத்தரவின் பேரில், 4 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இறந்த சிறுவன் அங்கன்வாடி மையங்களில் அரசு வழங்கும் சீருடை அணிந்திருந்தான். அதனால், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 1,300 அங்கன்வாடி மையங்களுக்கும், சிறுவனின் புகைப்படத்தை போலீசார் அனுப்பினர். ஆனாலும், இறந்த சிறுவன் குறித்த விவரம் தெரியவில்லை. இந்நிலையில், விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

 பிரேத பரிசோதனை அறிக்கை:

இது குறித்து எஸ்.பி., ஸ்ரீநாதா கூறுகையில், 'சிறுவனின் உடற்கூராய்வு முடிவடைந்தது. சிறுவன் கொலை செய்யப்படவில்லை. இயற்கையாக இறந்துள்ளார். சிறுவன் குடலில் உணவு மற்றும் தண்ணீர் இல்லை. இதனால், சிறுவன் 2 நாட்கள் உணவு இல்லாமல் இருந்திருக்கலாம். அதன் காரணமாகவும் அவர் இறந்திருக்க வாய்ப்புள்ளது. முதலில், சிறுவன் யார் என அடையாளம் காணும் கோணத்தில் விசாரித்து வருகிறோம். இதையடுத்து, அவர் இறப்பு குறித்த விபரங்கள் தெரிய வரும் என்றார்.

 

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.

 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

தலைப்பு செய்திகள்

" மனைவியின் Whats app , instagram சாட் " அதிர்ந்து போன கணவன் !! ஏன் எதற்காக ?
சிறுவன் மீது லத்தி, பூட்ஸ் கால்களால் தாக்குதல்: சீர்காழி அருகே காவல் துறையினர் மீது குற்றம்சாட்டும் குடும்பத்தினர்!
சிறுவன் மீது லத்தி, பூட்ஸ் கால்களால் தாக்குதல்: சீர்காழி அருகே காவல் துறையினர் மீது குற்றம்சாட்டும் குடும்பத்தினர்!
மயிலாடுதுறையில் 32 பேர் மீது பாய்ந்த குண்டர் சட்டம்: மாவட்ட காவல் துறை அதிரடி நடவடிக்கை! 
மயிலாடுதுறையில் 32 பேர் மீது பாய்ந்த குண்டர் சட்டம்: மாவட்ட காவல் துறை அதிரடி நடவடிக்கை! 
" என் பொண்டாட்டி எனக்கு மட்டும் தான் " மனைவியுடன் திருமணம் மீறிய உறவு - இறுதியில் நடந்த சோகம்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
Ukraine Big Attack on Russia: யம்மாடி, 822 ட்ரோனா.?! ரஷ்யாவை தாறுமாறாக தாக்கிய உக்ரைன்; பற்றி எரிந்த ஏவுகணை தொழிற்சாலை; 6 பேர் பலி
யம்மாடி, 822 ட்ரோனா.?! ரஷ்யாவை தாறுமாறாக தாக்கிய உக்ரைன்; பற்றி எரிந்த ஏவுகணை தொழிற்சாலை; 6 பேர் பலி
Iran Vs Qatar: போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
Scorpio Lifestyler First Look: மஹிந்திரா ஸ்கார்பியோ லைஃப்ஸ்டைலர் எப்படி இருக்கு.? நீங்க இதுக்காக காத்திருக்கணுமா.? இதோ ஃபர்ஸ்ட் லுக்
மஹிந்திரா ஸ்கார்பியோ லைஃப்ஸ்டைலர் எப்படி இருக்கு.? நீங்க இதுக்காக காத்திருக்கணுமா.? இதோ ஃபர்ஸ்ட் லுக்
US Iran War China: பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
Avore EX2 Price Range Features: ஒரே சார்ஜில் ஊர் விட்டு ஊர் போகலாம்.! அவோர் EX2 EV பைக்கின் விலை, ரேஞ்ச், அம்சங்களை தெரிஞ்சுக்கோங்க
ஒரே சார்ஜில் ஊர் விட்டு ஊர் போகலாம்.! அவோர் EX2 EV பைக்கின் விலை, ரேஞ்ச், அம்சங்களை தெரிஞ்சுக்கோங்க
Embed widget