Crime: நைட் க்ளப்பில் பெண்ணிடம் பவுன்சர்ஸ் அத்துமீறல்?! நடுராத்திரியில் நடந்த அடிதடி ரகளை!
பிரபல நைட் க்ளப் ஒன்றுக்கு சென்ற நண்பர்கள் குழுவில் இருந்த பெண் ஒருவரை அந்த க்ளப்பில் வேலை செய்து வரும் பவுன்சர்களில் ஒருவர் தவறான் முறையில் அணுகி தொட்டதாகக் கூறப்படுகிறது.
நைட் கிளப்புக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பு தராமல் பவுன்சர்களே அவர்களைத் தாக்கிய சம்பவம் குறித்த வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
பெண்ணிடம் அத்துமீறிய பவுன்சர்கள்?
ஹரியானா மாநிலம், குர்க்ராம் மாவட்டத்தின் பிரபல நைட் க்ளப் ஒன்றுக்கு சென்ற நண்பர்கள் குழுவில் இருந்த பெண் ஒருவரை அந்த க்ளப்பில் வேலை செய்து வரும் பவுன்சர்களில் ஒருவர் தவறான முறையில் அணுகி தொட்டதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து நண்பர்கள் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதம் முற்றிய நிலையில், நைட் க்ளப் மேலாளர் நண்பர்கள் குழுவை குண்டுகட்டாகத் தூக்கி வெளியேற்றி விரட்டி விடுமாறு பவுன்சர்களுக்கு ஆணையிட்டதாகக் கூறப்படுகிறது.
மேலும் படிக்க: Crime : காஞ்சிபுரம் : மளிகை கடைக்காரர் வெட்டிக்கொலை.. வலைவைத்து கொலையாளிகளைப் பிடித்த காவலர்கள்.. என்ன நடந்தது?
வீடியோ வைரல்
தொடர்ந்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பவுன்சர்கள் ஒன்றிணைந்து அந்த நண்பர்கள் குழுவை இழுத்துச் செல்வதும், அவர்களை அடிப்பதும் வீடியோவாக வெளியாகியுள்ளது.
பெண் ஒருவர் இந்த வீடியோவை அழுதுகொண்டே பதிவு செய்துள்ள நிலையில், ரத்தம் வருவதாகவும் விட்டுவிடும்படி கெஞ்சியும் பவுன்சர்கள் தொடர்ந்து அக்குழுவில் இருந்த ஆண்களை அறைவதும் அடிப்பதும் இந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.
Gurugram, Haryana | A man, who went with his friends to Club Casa Danza in Udyog Vihar on the intervening night of Aug 7-8 was beaten by several bodyguards after one of them allegedly molested a female friend in their group.
— ANI (@ANI) August 10, 2022
(Vid source: Complainant)
(Note- Abusive language) pic.twitter.com/APAn2SNyCd
நேற்று (ஆக.10) இரவு உத்யோக் விகார் நகரத்தில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ள நிலையில், காவல் நிலையத்தில் இச்சம்பவம் குறித்தும், நைட் க்ளப் மீதும் முன்னதாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.
விலை உயர்ந்த வாட்ச் பறிப்பு
ஐடி ஊழியர் ஒருவர் அளித்துள்ள இப்புகாரில் தங்களிடமிருந்து 10 ஆயிரம் மதிப்புள்ள வாட்ச் ஒன்றையும் பவுன்சர்கள் பறித்துக் கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இச்சம்பவத்தில் சம்பந்தப்பட்ட நபர்களை பணி நீக்கம் செய்துள்ள க்ளப் நிர்வாகம், அத்துமீறல் குற்றச்சாட்டை மறுத்துள்ளது.
இந்நிலையில், இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்