மேலும் அறிய

Crime: 2 பட்டியலின சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை! மீட்கப்பட்ட ஒருவரின் சடலம் - பீகாரில் என்ன நடந்தது?

பீகாரில் பட்டியலின சிறுமிகள் இரண்டு பேர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 சமூகம் முன்னேற்றம் அடைந்ததாக சொல்லி கொண்டாலும், தொழில்நுட்ப ரீதியாக எவ்வளவு வளர்ச்சி அடைந்தாலும் சாதிய, மத ரீதியான ஒடுக்குமுறைகள் இன்றளவும் தொடர்கிறது. குறிப்பாக, பட்டியலின மக்களுக்கு எதிராக நடத்தப்படும் வன்முறை சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன.

பட்டியலின சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்:

இதைத் தடுத்து நிறுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், இம்மாதிரியான சம்பவங்கள் நின்றபாடில்லை.  இந்த நிலையில் தற்போது ஒரு கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

பீகார்  மாநிலம் பாட்னாவில் பட்டியலின சிறுமிகள் இரண்டு பேரை பாலியல் வன்கொடுமை செய்ததாக 55 வயதான தயானந்த் ராய்  என்பவர் கைதாகி உள்ளார். இரண்டு சிறுமிகளும் வயல்வெளிக்கு சென்றிருந்தனர். அப்போது அங்கு வந்த தயானந்த் ராய், இவர்களை சிமெண்ட் கல்லால் கொடூரமாக பலமுறை அடித்திருக்கிறார். பின்னர், இரண்டு சிறுமிகளையும் பாலியல் வன்கொடுமை செய்திருப்பதாக  போலீசார் தெரிவித்தனர். 

சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை:

இதனையடுத்து, பாதிக்கப்பட்ட சிறுமிகளின் குடும்பத்தினர் காணாமல்  போனதாக காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது, சிறுமி ஒருவரின் உடலை போலீசார் கண்டெடுத்தனர். இதனையடுத்து, சிறுமி ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்டு, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்தது பிரேத பரிசோதனையில் தெரியவந்தது. 

மற்றொரு சிறுமிக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து போலீசார் கூறுகையில், "2 சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளனர். குற்றம் சாட்டப்பட்ட தயானந்த் ராய் மீது பல்வேறு வழக்குகள் பதிவாகி உள்ளன. சமீபத்தில் கூட,  அண்டை வீட்டில் இருக்கும் சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்திருக்கிறார். இறுதியில் அண்டை வீட்டாரையும் தாக்கியுள்ளார். மேலும், 70 வயது பெண்ணை கொலை செய்துள்ளார்" என்று தெரிவித்தனர். 

சமீபத்தில் கூட, பீகாரில் பட்டியலின பெண்ணை, போலீஸ் அதிகாரி ஒருவர் நடுரோட்டில் தடியால் கடுமையாக தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.  தற்போது பட்டியலின சிறுமியை தாக்கி பாலியல் வன்கொடுமை செய்து உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க

டாய்லெட்டில் இருந்து எஸ்கேப் ஆன கைதி; மனைவியுடன் ஊட்டிக்கு சுற்றுலா சென்ற போது தூக்கிய போலீஸ்

மூன்றாவதாகவும் ஆண் குழந்தை! கோபத்தில் கழுத்தை நெரித்து கொலை செய்த தந்தை - ம.பி.யில் கொடூரம்

தலைப்பு செய்திகள்

தொப்புள் கொடியோடு சாலையோரம் வீசப்பட்ட குழந்தை; வாணியம்பாடியில் நெஞ்சைப் பதறவைக்கும் கொடூரம்
தொப்புள் கொடியோடு சாலையோரம் வீசப்பட்ட குழந்தை; வாணியம்பாடியில் நெஞ்சைப் பதறவைக்கும் கொடூரம்
அதிகாரிகள் தில்லுமுல்லு..! புதிய அரசுக்கு ஒரு வாரம் டைம்...
அதிகாரிகள் தில்லுமுல்லு..! புதிய அரசுக்கு ஒரு வாரம் டைம்..." கிராம மக்கள் விடுத்த அதிரடி கெடு! 
மணல்மேடு வாலிபர் கொலை வழக்கில் திடீர் திருப்பம்: அண்ணன், தம்பிக்கு நேர்ந்த கதி!
மணல்மேடு வாலிபர் கொலை வழக்கில் திடீர் திருப்பம்: அண்ணன், தம்பிக்கு நேர்ந்த கதி!
மயிலாடுதுறையில் பரபரப்பு: கடைவீதியில் எஸ்பி தலைமையில் திடீரென நுழைந்த போலீஸ் படை - பின்னணி என்ன?
மயிலாடுதுறையில் பரபரப்பு: கடைவீதியில் எஸ்பி தலைமையில் திடீரென நுழைந்த போலீஸ் படை - பின்னணி என்ன?

வீடியோ

DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
Annamalai New Party |
NEET Exam Student Suicide |
Illegal Relationship | மனைவி உயிரோடுதான் இருக்காங்க குழந்தையுடன் கணவன் தலைமறைவு போலீஸார் விசாரணை!
Annamalai Resignation | பாஜகவுக்கு Bye Bye! புதிய பாதையில் அண்ணாமலை.. வெளியான அறிக்கை

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai: அண்ணாமலையும் இல்ல.. யாரை வச்சு தாமரைக்கு தண்ணி ஊத்துறது? புலம்பும் பாஜக
Annamalai: அண்ணாமலையும் இல்ல.. யாரை வச்சு தாமரைக்கு தண்ணி ஊத்துறது? புலம்பும் பாஜக
Annamalai: 18 மாதமாக பாஜகவில் பிரச்னை.. புது கட்சி தொடங்கப்போவதாக அண்ணாமலை அறிவிப்பு!
Annamalai: 18 மாதமாக பாஜகவில் பிரச்னை.. புது கட்சி தொடங்கப்போவதாக அண்ணாமலை அறிவிப்பு!
TVK Vijay: தமிழ்நாட்டில் சாதி வாரி கணக்கெடுப்பு - பட்ஜெட் உரையிலேயே அறிவிப்பு? பாமக கூட்டத்தில் தவெக பேச்சு
தமிழ்நாட்டில் சாதி வாரி கணக்கெடுப்பு - பட்ஜெட் உரையிலேயே அறிவிப்பு? PMK கூட்டத்தில் TVK பேச்சு
Sathyaraj: கட்டப்பா கண்ணீர் வடிக்கலாமா? சத்யராஜை கலாய்த்து தள்ளும் தவெக பாய்ஸ் - இணையத்தில் இதான் ட்ரெண்ட்
Sathyaraj: கட்டப்பா கண்ணீர் வடிக்கலாமா? சத்யராஜை கலாய்த்து தள்ளும் தவெக பாய்ஸ் - இணையத்தில் இதான் ட்ரெண்ட்
இந்தியா கூட்டணி சிதறிவிடக் கூடாது; திமுக பங்கேற்காதது வருத்தமளிக்கிறது: விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி!
இந்தியா கூட்டணி சிதறிவிடக் கூடாது; திமுக பங்கேற்காதது வருத்தமளிக்கிறது: விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி!
வாவ்.. வாட் எ லுக்.. ஸ்டைலும், கம்பீரமும் சேர்ந்த Royal Enfield Shortgun 650! விலை எவ்ளோ?
வாவ்.. வாட் எ லுக்.. ஸ்டைலும், கம்பீரமும் சேர்ந்த Royal Enfield Shortgun 650! விலை எவ்ளோ?
Annamalai: தமிழ்நாட்டு மக்களுக்கு புரியும் மொழியில் பாஜக பேசவில்லை - அண்ணாமலை ராஜினாமா கடித விவரங்கள்
தமிழ்நாட்டு மக்களுக்கு புரியும் மொழியில் பாஜக பேசவில்லை - அண்ணாமலை ராஜினாமா கடித விவரங்கள்
RBI வட்டி விகித அறிவிப்பு இன்று: ரெப்போ ரேட் குறித்து பொருளாதார வல்லுநர்கள் கணிப்பு!..
RBI வட்டி விகித அறிவிப்பு இன்று: ரெப்போ ரேட் குறித்து பொருளாதார வல்லுநர்கள் கணிப்பு!..
Embed widget