மேலும் அறிய

Crime : பூஜைக்காக வைக்கப்பட்ட ஆப்பிளை சாப்பிட்ட 6 வயது சிறுவன் அடித்துக்கொலை.. பீஹாரில் பயங்கரம்..

பீகார் மாநிலம் கயாவில் உள்ள தனியார் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வந்த 6 வயது சிறுவன் விவேக் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பீகார் மாநிலம் கயாவில் உள்ள தனியார் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வந்த 6 வயது சிறுவன் விவேக், தனது பள்ளியில் துர்கா பூஜைக்காக ஆப்பிளை சாப்பிட்டதற்காக அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பீகார் மாநிலம் கயாவில் உள்ள பாக்கி பிகா கிராமத்தில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இங்கு ன்றாம் வகுப்பு படித்து வந்த 6 வயதான விவேக் என்ற  சிறுவன் படித்து வந்துள்ளார். கடந்த செவ்வாய் கிழமை பள்ளி வளாகத்தில் துர்கா தெய்வத்திற்கான பூஜை ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. அப்போது பூஜை தட்டில் இருந்த ஆப்பிள் ஒன்றை விவேக் எடுத்து சாப்பிட்டுள்ளார். 

இதைகண்டு கோவமடைந்த அப்பள்ளியின் ஆசிரியர் விவேக் சிங் மற்றும் அவரது மனைவி இருவரும் சேர்ந்து விவேக்கை ஒரு அறைக்கு அழைத்துசென்று, பூஜைக்காக வைத்திருந்த பழத்தை ஏன் சாப்பிட்டாய் என்று கேட்டு அந்த சிறுவனை கொடூரமாக தாக்கியுள்ளனர். இருவரும் சேர்ந்து அடித்ததால் அந்த சிறுவன் நிலைகுலைந்து போனார். தொடர்ந்து சிறுவனில் நெஞ்சில் எட்டி உதைத்து, வெளியில் வீசியதாகவும் கூறப்படுகிறது. விவேக் அரை மயக்கத்தில் கிடந்ததை பார்த்த அங்கிருந்த ஆட்டோ டிரைவர் ஒருவர், சிறுவனை தூக்கி அவரது வீட்டில் கொண்டுபோய் சேர்த்துள்ளார். 

அந்தநேரத்தில், விவேக்கில் நிலைமை மோசமானதை கண்டு குடும்பத்தினர் சிகிச்சைக்காக மருத்துவக் கல்லூரிக்கு கொண்டு செல்லும் வழியில் விவேக் உயிரிழந்தார். இதையடுத்து, பள்ளியை நடத்தி வந்த தம்பதியை கயா காவல்துறையினர் கைது செய்தனர்.

பாதிக்கப்பட்ட குழந்தை விவேக்கின் தாத்தா ராம் பாலக் பிரசாத் காவல்துறையினரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது: ”பள்ளி வளாகத்திற்குள் துர்கா பூஜைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேஜையில் சில பழங்கள் இருந்தன, அப்போது என் பேரன் விவேக் அதிலிருந்து ஒரு ஆப்பிளை எடுத்து சாப்பிட்டார். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, பள்ளியின் உரிமையாளர்கள் விவேக்கை ஒரு அறையில் வைத்து கொடூரமாகத் தாக்கினர். உடல்ரீதியான தாக்குதலுக்குப் பிறகு, அவர்கள் அவரை வளாகத்திற்கு வெளியே தூக்கி எறிந்தனர்.

என் பேரன் பள்ளி வாயிலுக்கு வெளியே சுயநினைவின்றி கிடந்தான். என் கிராமத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் விவேக் மயங்கிய நிலையில் இருப்பதைப் பார்த்து, வசீர்கஞ்ச் தொகுதிக்கு உட்பட்ட உக்ரா கிராமத்தில் உள்ள வீட்டிற்கு அழைத்து வந்து எங்களிடம் ஒப்படைத்தார். அவரது உடல்நிலை மோசமாக இருந்ததால், நாங்கள் உடனடியாக அவரை உள்ளூர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.அவரது உடல்நிலையைப் பார்த்து, மருத்துவமனையின் மருத்துவர்கள் அவரை மகத் மருத்துவக் கல்லூரிக்கு பரிந்துரைத்தனர். மருத்துவக் கல்லூரிக்கு கொண்டு செல்லும் வழியில் விவேக் உயிரிழந்தார். விவேக்கை மருத்துவமனைக்கு அழைத்து செல்லும்போது, தனது நேர்ந்த கொடுமை குறித்து என்னிடம் சொன்னார். அதில், விகாஸ் சிங்கும் அவரது மனைவியும் தன்னை மார்பில் தாக்கியதாக தெரிவித்தார். 

இது குறித்து வசீர்கஞ்ச் மாவட்ட எஸ்.ஹெச்.ஓ ராம் எக்பால் யாதவ் கூறியதாவது: ”நாங்கள் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து குற்றவாளிகளை கைது செய்துள்ளோம். மாணவர் விவேக் தனியார் பள்ளியில் படித்து வருவதாகவும், அங்கு விடுதியில் தங்கி இருப்பதாகவும் இறந்தவரின் குடும்பத்தினர் கூறினர். அவர் கொடூரமாக தாக்கப்பட்டார். பள்ளியின் உரிமையாளர்களான விகாஸ் சிங் அவரது மனைவியால் பாதிக்கப்பட்டவர் மர்மமான முறையில் இறந்தார். சம்பவம் குறித்து விசாரித்து வருகிறோம்.

பிரேதப் பரிசோதனைக்கு பின்னரே மரணத்திற்கான உண்மையான காரணம் தெரியவரும்” என்று தெரிவித்தார். 

தலைப்பு செய்திகள்

மனைவி தற்கொலைனு சொன்ன கணவன்... காஞ்சிபுரத்தில் அதிர்ச்சி! போலீஸ் தூக்கியதும் வெளிவந்த உண்மை!
மனைவி தற்கொலைனு சொன்ன கணவன்... காஞ்சிபுரத்தில் அதிர்ச்சி! போலீஸ் தூக்கியதும் வெளிவந்த உண்மை!
இதையெல்லாம் வீடியோ எடுக்கக் கூடாது... வழக்கு போட்ருவேன் - காவல் ஆய்வாளர் பகிரங்க மிரட்டல் !
இதையெல்லாம் வீடியோ எடுக்கக் கூடாது... வழக்கு போட்ருவேன் - காவல் ஆய்வாளர் பகிரங்க மிரட்டல் !
ஆட்டோவில் அலறிய பெண்! தப்பிக்க போட்ட மாஸ்டர் பிளான்... அம்பத்தூர் கொலையில் சிக்கிய கணவன்!
ஆட்டோவில் அலறிய பெண்! தப்பிக்க போட்ட மாஸ்டர் பிளான்... அம்பத்தூர் கொலையில் சிக்கிய கணவன்!
கோவையில் பயங்கரம்: கல்லூரி மாணவர் அடித்துக் கொலை - பழிக்குப்பழியாக நடந்த கொடூரம்!
கோவையில் பயங்கரம்: கல்லூரி மாணவர் அடித்துக் கொலை - பழிக்குப்பழியாக நடந்த கொடூரம்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Govt: அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
TVK Vijay: பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
TNEB: 200 யூனிட் இலவச மின்சாரம் இல்லையா?.. தமிழக அரசு பரபரப்பு விளக்கம்.. வசமாக மாட்டிய நடிகை!
TNEB: 200 யூனிட் இலவச மின்சாரம் இல்லையா?.. தமிழக அரசு பரபரப்பு விளக்கம்.. வசமாக மாட்டிய நடிகை!
AIADMK Apsara Reddy: அதிமுகவில் அடுத்த விக்கெட்.. துணை கொள்கை பரப்பு செயலாளர் அப்சரா ரெட்டி விலகல்
AIADMK Apsara Reddy: அதிமுகவில் அடுத்த விக்கெட்.. துணை கொள்கை பரப்பு செயலாளர் அப்சரா ரெட்டி விலகல்
Skoda Superb: அட்ரா சக்க..! 40KM மைலேஜ், இந்தியாவிற்கு கன்ஃபார்ம் செய்த ஸ்கோடா - விலை, அம்சங்கள், ரேட்டிங்
அட்ரா சக்க..! 40KM மைலேஜ், இந்தியாவிற்கு கன்ஃபார்ம் செய்த ஸ்கோடா - விலை, அம்சங்கள், ரேட்டிங்
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Embed widget