Bengaluru: சொத்துக்காக பெற்ற தாயையே கொல்ல முயற்சித்த மகன்..! பெங்களூரில் நிகழ்ந்த கொடுமை..!
பணத்திற்காக பெற்றெடுத்த அம்மாவை கொல்ல முயற்சித்த கொடுமை பெங்களூரில் நடந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
பெங்களூரில் உள்ள ஆர்.டி. நகரில் வசித்து வருபவர் ஜான் டி க்ரூஸ் (John D Cruz) (65). இவர் சொத்துக்காக அம்மாவை கொலை செய்ய முயற்சி செய்துள்ளார். இதனால் ஜான் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அரசு பணியிருந்து ஓய்வு பெற்ற ஜான், தனது அம்மா கேத்ரீன் டி க்ரூஸ் (Catherine de Cruz) உடன் வசித்து வந்தார். 88-வயதான அம்மாவுக்கு உடல்நல பிரச்சினைகள் இருக்கிறது. இவருக்கு நான்கு பிள்ளைகள். இருவர் வெளிநாட்டில் வசித்து வருகின்றனர். இருவர் இந்தியாவில் இருக்கின்றனர். கேத்ரீன் தனது வீட்டையும், சொத்துக்களையும் மகன் ஜான் பெயரில் மாற்றிவிட்டார். இருப்பினும், மகனுக்குள் அம்மாவை கொன்றுவிட வேண்டுமென்ற எண்ணம் இருந்துள்ளது. 85 வயதான அம்மாவை அவரது வீட்டிலெயே கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.
ஒருநாள் அம்மாவின் அறைக்குச் சென்று, பாராமரிப்பாளரை வெளியே செல்லுமாறு கூறியுள்ளார். அவரும் சென்றுவிட்டார். அப்போது அம்மாவின் ஆக்ஸிஜன் மாஸ்கை எடுத்துவிட்டார். கேத்ரீனுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. ஏதோ, சரியில்லாததை உணர்ந்த பராமளிப்பாளர் அறைக்கு திரும்ப வந்துள்ளார். அங்கு, கேத்ரீன் மூச்சு திணறலால் அவதிப்படுதை கண்டு ஆம்புலன்சிற்கும் போலீசாருக்கும் ஃபோன் செய்துள்ளார். மேலும், ஜான் கொலை செய்ய முயற்சி செய்ததாக போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ஜானை கைது செய்தனர். மேலும், கேத்ரீன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பணம், சொத்து உள்ளிட்டவைகளுக்காக பெற்றோர்களை கொலை செய்யும் சமபவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, 1090 என்ற உதவி எண் அறிமுகம் செய்யப்பட்டது. மேலும்,இந்த உதவி எண்ணிக்கு நிறைய அழைப்புகள் வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற பிரச்சினைகளை தடுக்க 2007 ஆம் ஆண்டு கொண்டுவரபட்ட மூத்த குடிமக்கள் நலன்கள் மற்றும் பராமரிப்பு சட்டத்தின் படி, பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளுக்கு வழங்கிய சொத்துக்களை திரும்ப பெறும் அதிகாரத்தை வழங்குகிறது. பெற்றோர்கள் புகார் அளித்த 90 நாட்களுக்கு சொத்துக்கள் மீட்கப்பட்டு அவர்களுக்கு வழங்கப்படும்.
மேலும் வாசிக்க..
David Miller : உலகை விட்டுப் பிரிந்த குட்டி ரசிகை..! மனம் உடைந்து போன டேவிட் மில்லர்..!