(Source: ECI/ABP News/ABP Majha)
Bangaluru Double Murder: “கெட்டவர்களையே காயப்படுத்துகிறேன்; நல்லவர்களை அல்ல” - எம்.டி, சிஇஓவை கொலை செய்த முன்னாள் ஊழியர்: பரபரப்பு சம்பவம்
Bangaluru Double Murder: எப்போதும் பரபரப்பாக இயங்கும் பெங்களூரு நகரில் பட்டப்பகலில் இரட்டை கொலை நடந்துள்ளது மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Bangaluru Double Murder: எப்போதும் பரபரப்பாக இயங்கும் பெங்களூரு நகரில் பட்டப்பகலில் இரட்டை கொலை நடந்துள்ளது மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஏரோனிக்ஸ் இன்டர்நெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி இருவரும் அதே நிறுவனத்தில் பணியாற்றிய ஊழியர் ஒருவரால் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெங்களூரு மட்டும் இல்லாமல் ஒட்டுமொத்த நாட்டிலும் ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது.
பெங்களூரில் உள்ள அம்ருதஹள்ளி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. கொலை செய்யப்பட்டவர்கள் ஏரோனிக்ஸ் இன்டர்நெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பனிந்திர சுப்ரமணி, தலைமை நிர்வாக அதிகாரி வினு குமார் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் பெலிக்ஸ் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ஏரோனிக்ஸ் நிறுவனத்தின் முன்னாள் ஊழியரான பெலிக்ஸ் தனது வேலையை விட்டுவிட்டு சொந்த நிறுவனத்தைத் தொடங்கினார். ஆனால் அவரது தொழிலுக்கு பனீந்திரன் எதிரியாக இருந்ததால், அவரை கொலை செய்ய திட்டம் தீட்டினார். அதன்படி, செவ்வாய்க்கிழமை மாலை 4 மணியளவில் இருவருடன் நிறுவனத்துக்குள் நுழைந்த பெலிக்ஸ், அரிவாள் மற்றும் கத்தியால் பனீந்திரா, வினுகுமார் ஆகிய இருவரையும் சராமாரியாக தாக்கினார். இதனால் இருவரும் சம்பவ இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். தாக்குதலுக்குப் பிறகு, கொலையாளிகள் மூவரும் கட்டிடத்தின் பின்னால் இருந்து தப்பிச் சென்றனர். சம்பவம் நடந்த இடத்தில் அம்ருதஹள்ளி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சந்தேக நபருக்கு joker_felix_rapper என்ற இன்ஸ்டாகிராம் பக்கமும் JF Media என்ற யூடியூப் சேனலும் உள்ளது . பெலிக்ஸ் இன்ஸ்டாகிராமில் தன்னை ஒரு "கன்னட ராப்பர்" என்று அடையாளப்படுத்திக் கொண்டு, ராப் பாடல்கள் என்று கூறி சில வீடியோக்களை வெளியிட்டுள்ளார்.
View this post on Instagram
கொலை நடப்பதற்கு சில மணி நேரத்திற்கு முன்பு, ஃபெலிக்ஸ் இன்ஸ்டாகிராமில் ஸ்டோரி ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் “இந்த கிரக மக்கள் எப்போதும் ஏமாற்றுக்காரர்கள். அதனால் நான் இந்த கிரக மக்களை காயப்படுத்துகிறேன். நான் கெட்டவர்களை மட்டுமே காயப்படுத்துகிறேன். நான் எந்த நல்ல மனிதர்களையும் காயப்படுத்தவில்லை” என உள்ளது. இந்த ஸ்டோரியின் ஸ்கீர்ன் ஷாட் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஃபெலிக்ஸின் இன்ஸ்டாகிராமில் உள்ள வேறு சில பதிவுகள், டிசி காமிக்ஸில் முக்கியமாக இடம்பெற்றுள்ள வில்லன் மற்றும் சூப்பர் ஹீரோ பேட்மேனின் பரம எதிரியான தி ஜோக்கரால் பெலிக்ஸ் ஈர்க்கப்பட்டிருக்கலாம் என்றும் சமூக வலைதளங்களில் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.