ஆவடி : பாலியல் அத்துமீறல் வழக்கில் 5 பேர் கைது... சிறுமி அளித்த புகாரில் புதிய திருப்பம்..
புகாரை பெற்றுக்கொண்ட ஆவடி காவல் நிலைய அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அதனை அடுத்து கவுதம், பாபு, லக்ஷமணன், அப்துல்லா, அக்பர் ஆகிய ஐந்து பேரை காவல் துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
ஆவடி செங்குன்றம் பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமியின் தந்தை லாரி ஓட்டுநராக உள்ளார். அவரது தாய் பிரிந்து சென்றுவிட்டதாக தெரிகிறது. இதனால், தனது பாட்டி மற்றும் அண்ணனுடன் வசித்து வந்திருக்கிறார் அந்த சிறுமி. 7-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில், அச்சிறுமி வீட்டில் தனியாக இருந்த நேரத்தில் 5 பேர் கொண்ட கும்பல் வீட்டிற்குள் புகுந்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட அச்சிறுமி அம்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்.
அதில், குடிப்பழக்கம் கொண்ட தந்தை வீட்டிற்கு வரமாட்டார். அம்மாவும் வேறொருவருடன் சென்றுவிட்டார். அண்ணன்தான் என்னை படிக்க வைத்து வருகிறார். வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து, குடிபோதையில் இருந்து ஐந்து பேர் வீட்டிற்கு வந்து என்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டனர். போதையில் வீட்டு வந்தவர்கள் என் அண்ணனை கொலை செய்துவிடுவோம் என மிரட்டியதால், அவனை என் பெரியப்பா வீட்டிற்கு அனுப்பி வைத்துவிட்டோம். இதை அறிந்து கொண்ட அந்த கும்பல், அடிக்கடி வீட்டிற்கு வந்து என்னிடம் தவறாக நடந்து கொண்டனர். அவர்களது தொல்லை நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. அவர்கள் சொல்வது போல நடந்து கொள்ளவில்லை என்றால் என்னை கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டுகின்றனர். அவர்கள் மீது உரிய நடவடிக்கை வேண்டும் என தெரிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக புகாரை பெற்றுக்கொண்ட ஆவடி காவல் நிலைய அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அதனை அடுத்து கவுதம், பாபு, லக்ஷமணன், அப்துல்லா, அக்பர் ஆகிய ஐந்து பேரை காவல் துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர். மேலும், விசாரணை மேற்கொள்ளப்பட்டதில், அச்சிறுமி அளித்த புகாரின்படி அந்த ஐவரும் பாலியல் வன்கொடுமையில் ஈடுபடவில்லை என்பதும் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகவும் தெரிய வந்துள்ளது. அச்சிறுமியின் அண்ணனுக்கும், அந்த ஐவருக்கும் உள்ள பகையால் வழக்கறிஞர் கூறிய அறிவுரையின்படி புகாரில் மாற்றி சொல்லியதாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், திருவள்ளூர் சமூக நல அதிகாரிகள் முன்பு, தான் புகாரை மாற்றி சொல்லியதாக அச்சிறுமி ஒப்புக்கொண்டுள்ளார். இதனால், போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள நபர்களை காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்