மேலும் அறிய

Kerala: பேய் ஓட்டுவதாக கூறி சிறுமியிடம் ஜோதிடர் செய்த வேலை.. கொந்தளித்த மக்கள்..

கொல்லத்தில் ஒரு தாயும், மகளும் ராஜன் பாபுவை சந்திக்க சென்றிருக்கின்றனர். அந்த சிறுமிக்கு பேய் பிடித்திருப்பதாகவும், அதனை ஓட்ட வேண்டும் எனவும் தாய் கூற, ஜோதிடர் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.

கேரளாவில் பேய் ஓட்டுவதாக கூறி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சாமியாரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ள புதூர் பகுதியை அடுத்து வேந்தர் என்ற ஊரைச் சேர்ந்தவர் ராஜன் பாபு என்ற முராரி தந்திரி. 52 வயதான இவர் ஜோதிடம் பார்த்து வந்துள்ளார். அவரைக் காண தினமும் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான மக்கள் வருகை தருவது வழக்கமாகும். இப்படியான நிலையில் சமூக வலைத்தளங்களில் இந்த முராரி தந்திரி ஆக்டிவாக இருப்பது வழக்கம்.  முராரி ஜோதிஷாலயம் என்ற முகநூல் பக்கத்தில் ரீல்ஸ் வீடியோக்களை வெளிட்டு அந்த மாநிலம் முழுக்க பிரபலமாகியுள்ளார். தன்னிடம் ஜோதிடம் பார்க்க வருபவர்களுக்கு அவர்கள் தேவை என்ன என்பதை அறிந்து ஜோதிடம் சொல்லி, ஆயிரம் முதல் லட்சக்கணக்கில் ராஜன் பாபு பணம் பறித்தும் வந்துள்ளார். 

இதனிடையே அதே பகுதியைச் சேர்ந்த ஒரு தாயும், மகளும் ராஜன் பாபுவை சந்திக்க சென்றிருக்கின்றனர். அந்த சிறுமிக்கு பேய் பிடித்திருப்பதாகவும், அதனை ஓட்ட வேண்டும் எனவும் தாய் கூற, ஜோதிடர் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். அதன்படி வேந்தரில் உள்ள தனது வீட்டில் சிறுமிக்கு பேயோட்டும் சடங்குகளை ராஜன் பாபு நடத்தியுள்ளார். தான் சிறுமியுடன் தனியாக நேரம் செலவிட விரும்புவதாகவும், அதனால் நீங்கள் சிறிது நேரம் வெளியே இருக்கும்படி தாயாரிடம் அவர் கூறியுள்ளார். 

அதன்படி தாய் வெளியே இருக்கவும், அறைக்கதவை மூடிய ராஜன் பாபு அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். வெளியே வந்த சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமையை தனது தாயிடம் கூறி கதறி அழுதுள்ளார். 

இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அந்த பெண் உடனடியாக மகளை அழைத்துக் கொண்டு காவல்துறையை நாடினார். அவரின் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தலைமறைவாக இருந்த ராஜன் பாபுவை தேடினர். அவரோ சிறுமி விவகாரத்தில் தன் வீட்டின் முன்னால் பலரும் வந்து போராட்டம் நடத்துவதைக் கண்டு ஒரு விடுதியில் தங்கியிருந்தார். அவரை தேடி சென்று கைது செய்த போலீசார் பாலியல் வன்கொடுமை, போக்சோ சட்டம் என பல பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 

இதனிடையே குளக்கட பஞ்சாயத்து முன்னாள் துணைத் தலைவர் ஆர். ராஜேஷ் செய்தியாளர்களிடம் பேசும்போது, ராஜன் பாபு இதற்கு முன்னால் ஒரு ஆட்டோ ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்துள்ளார். அப்போது மூத்த ஜோதிடர் ஒருவரிடமிருந்து ஜோதிடம் கற்றுக்கொண்டு அதை தொழில் ரீதியாக ஏற்றுக்கொண்டார். ஜோதிடராக மாறுவதற்கு முன்பு அவர் முராரி என்று அழைக்கப்பட்டார். அவருக்கு எதிராக நாங்கள் கேள்விப்பட்ட முதல் புகார் இது என தெரிவித்துள்ளார்.

தலைப்பு செய்திகள்

தவெக மாவட்ட செயலாளருக்கு அரசு மேடையில் முதல் மரியாதை? மயிலாடுதுறையில் தொடரும் சர்ச்சை!
தவெக மாவட்ட செயலாளருக்கு அரசு மேடையில் முதல் மரியாதை? மயிலாடுதுறையில் தொடரும் சர்ச்சை!
மயிலாடுதுறை மாவட்டத்தில் நீளும் குண்டாஸ் பட்டியல்... இதுவரை 67 கைது...!
மயிலாடுதுறை மாவட்டத்தில் நீளும் குண்டாஸ் பட்டியல்... இதுவரை 67 கைது...!
திருவொற்றியூரில் 6 வயது சிறுமிக்கு கொடூரம்... குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனை வேண்டும் – அன்புமணி ஆவேசம்
திருவொற்றியூரில் 6 வயது சிறுமிக்கு கொடூரம்... குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனை வேண்டும் – அன்புமணி ஆவேசம்
மயிலாடுதுறையில் கொடூர விபத்து: பொறியியல் கல்லூரி மாணவன் பலி - புதுமணத் தம்பதி உள்ளிட்ட மூவர் கவலைக்கிடம்!
மயிலாடுதுறையில் கொடூர விபத்து: பொறியியல் கல்லூரி மாணவன் பலி - புதுமணத் தம்பதி உள்ளிட்ட மூவர் கவலைக்கிடம்!

வீடியோ

Congress MLA Abuse : எல்லை மீறிய காங். எம்.எல்.ஏ! ஓடும் பேருந்தில் அநாகரிகம்.. விளாசும் நெட்டிசன்கள்
TVK Cadre Issue : செல்போன் கடைக்காரரிடம் வழிப்பறி.. அடிக்க சொன்ன தவெக நிர்வாகி! போலீஸ் வலைவீச்சு
Dindigul Murder : திமுக பிரமுகர் கொலை வழக்கு! ஜாமீனில் வந்த முக்கிய குற்றவாளி.. ஓட ஓட வெட்டிக் கொலை
VS Babu Health : V.S பாபுக்கு டிரக்கியாஸ் சிகிச்சை? வெளியான பகீர் தகவல் குடும்பத்தினரின் அப்டேட்
வாக்காளர்களுக்கு டோக்கன்? தவெகவினரை மடக்கிய அதிமுகவினர் தாராபுரத்தில் பரபரப்பு!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விஜய்க்கு டஃப் கொடுக்க களமிறங்கும் தனுஷ்.? புதிய கட்சி பெயர் என்ன.? தேர்தல் ஆணையத்தில் பதிவு.?
விஜய்க்கு டஃப் கொடுக்க களமிறங்கும் தனுஷ்.? புதிய கட்சி பெயர் என்ன.? தேர்தல் ஆணையத்தில் பதிவு.?
Repo Rate: ஷாக் கொடுத்த RBI..! எகிறும் EMI, வீட்டுக் கடன் வாங்கலாமா? வைப்புத் தொகைக்கு வாய்ப்பா? ரெப்போ வட்டி
ஷாக் கொடுத்த RBI..! எகிறும் EMI, வீட்டுக் கடன் வாங்கலாமா? வைப்புத் தொகைக்கு வாய்ப்பா? ரெப்போ வட்டி
MK Stalin vs Vijay : தலைதூக்கும் அரிவாள் வெட்டு.! ShootingMode-இல் இருந்து விடுபட்டு Please Take Action CM Sir- சீறிய ஸ்டாலின்
தலைதூக்கும் அரிவாள் வெட்டு.! ShootingMode-இல் இருந்து விடுபட்டு Please Take Action CM Sir- சீறிய ஸ்டாலின்
TNPSC Vacancy: க்ரூப்-4 தேர்வு - எந்தெந்த துறையில் எத்தனை காலிப்பணியிடங்கள், ஊதியம், கல்வித்தகுதி என்ன? முழு விவரம்
க்ரூப்-4 தேர்வு - எந்தெந்த துறையில் எத்தனை காலிப்பணியிடங்கள், ஊதியம், கல்வித்தகுதி என்ன? முழு விவரம்
சென்னையில் இனி பீச்களுக்கு பஞ்சமில்லை..! 5,904 சதுர கிலோ மீட்டருக்கு பிரமாண்ட திட்டம் - காஞ்சி, திருவள்ளூர்
சென்னையில் இனி பீச்களுக்கு பஞ்சமில்லை..! 5,904 சதுர கிலோ மீட்டருக்கு பிரமாண்ட திட்டம் - காஞ்சி, திருவள்ளூர்
Jaguar Type 01 EV Car: மின்சார சொகுசு ரதம்.! 1015 HP சக்தியுடன் புயலாக வரும் ஜாக்குவாரின் புதிய EV கார்; முழு விவரம்
மின்சார சொகுசு ரதம்.! 1015 HP சக்தியுடன் புயலாக வரும் ஜாக்குவாரின் புதிய EV கார்; முழு விவரம்
Tata Avinya X Launch: லுக்கு அள்ளுதே.! EV கார் சந்தையை தெறிக்கவிட வரும் டாடா அவின்யா.! எப்போது அறிமுகம் தெரியுமா.?
லுக்கு அள்ளுதே.! EV கார் சந்தையை தெறிக்கவிட வரும் டாடா அவின்யா.! எப்போது அறிமுகம் தெரியுமா.?
Chennai Power Cut: சென்னை மக்களே.! வியாழகிழமை (08.10.2026) எந்தெந்த ஏரியால மின்சாரத் தடை ஏற்படப் போகுது தெரியுமா.?
சென்னை மக்களே.! வியாழகிழமை (08.10.2026) எந்தெந்த ஏரியால மின்சாரத் தடை ஏற்படப் போகுது தெரியுமா.?
Embed widget