மேலும் அறிய

ஜன்னல் ஓரம் தூங்கும் பெண்மணிகளே உஷார்... செயின் பறிக்கும் ஆந்திரா குரூப் பராக்!

வேளச்சேரி பகுதியில் வீட்டின் ஜன்னல் ஓரம் தூங்கும் பெண்களை குறி வைத்து தொடர் சங்கிலி பறிப்பில் ஈடுபட்டு வந்த ஆந்திர கொள்ளையனை போலீசார் கைது செய்தனர். 

வேளச்சேரி பகுதியில் வீட்டின் ஜன்னல் ஓரம் தூங்கும் பெண்களை குறி வைத்து தொடர் சங்கிலி பறிப்பில் ஈடுபட்டு வந்த ஆந்திர கொள்ளையனை போலீசார் கைது செய்தனர். 

திருடறது என்று முடிவு செய்துவிட்டால் தினுசு தினுசா திருடுறாங்க. அதில் திருடர்கள் தங்களுக்கு என்று ஒரு திருடும் பாணியையும் கடைபிடிக்கிறார்கள். அந்த வகையில் தற்போது திருடன் ஒருவன் அடிக்கடி செயின் பறிப்பில் ஈடுபட்டு வசமாக போலீசாரிடம் மாட்டிக்கொண்டுள்ளான். செயின் பறிப்பு என்றதும் இருச்சக்கர வாகனத்தில் வந்து சாலையில் நடந்து செல்லும் பெண்களில் செயின் பறிப்பது அல்ல. இது கொஞ்சம் புதுவகை. வீட்டில் ஜன்னல் ஓரம் தூங்கும் பெண்களை குறிவைத்து செயின் பறிப்பில் ஈடுபடுவார் இந்த கொள்ளையன். 

வேளச்சேரி பகுதிகளில் உள்ள வீடுகளில் ஜன்னலோரம் காற்றுக்காக படுத்திருந்த பெண்களின் கழுத்தில் இருந்து தங்க சங்கிலி பறிப்பு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவதாக வேளச்சேரி போலீசாருக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து வேளச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் தீவிரமாக ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.

ஜன்னல் ஓரம் தூங்கும் பெண்மணிகளே உஷார்... செயின் பறிக்கும் ஆந்திரா குரூப் பராக்!
மேலும் கொள்ளையனை பிடிக்கத் தனிப்படையும் அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் நடத்திய விசாரணையில், அடிக்கடி வீட்டின் ஜன்னல் ஓரம் படுத்திருக்கும் பெண்களிடம் சங்கிலி பறித்து தப்பிச்சென்ற கொள்ளையன் ஆந்திராவில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தெரிய வந்தது.

இதையடுத்து தனிப்படையினர் ஆந்திரா சென்றனர். அங்கு பதுங்கி இருந்த சம்பவத்தில் ஈடுபட்ட ஆந்திரா மாநிலம் நகரி பகுதியை சேர்ந்த திருலோகசந்தர் (56) என்பவரை பிடித்து கைது செய்து போலீசார் விசாரித்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில், ஆந்திராவில் இருந்து சென்னைக்கு பகலில் வந்து நள்ளிரவில் ஜன்னல் ஓரம் தூங்குவோரை நோட்டமிட்டு கழுத்தில் அணிந்திருக்கும் தங்கச் சங்கிலியை பறித்து கொண்டு ஆந்திராவில் உள்ள அடகு கடையில் விற்று உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வந்தது தெரியவந்தது.

ஜன்னல் ஓரம் தூங்கும் பெண்மணிகளே உஷார்... செயின் பறிக்கும் ஆந்திரா குரூப் பராக்!

இவர் மீது ஆதம்பாக்கம், பள்ளிகரணை, மடிப்பாக்கம், வேளச்சேரி ஆகிய காவல் நிலையங்களில் 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது.

இதையடுத்து திருட்டு நகைகளை வாங்கியதாக நகரியில் உள்ள அடகு கடை உரிமையாளர் உகமாராம் (40) என்பவரையும் போலீசார் கைது செய்தனர். இவரிடம் 15 பவுன் தங்க நகையை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட 2 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...

ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

கள்ளத் தொடர்பு சந்தேகத்தில் காதலி கொலை !! தனிமையில் இருந்த போது நேர்ந்த கொடூரம்
கள்ளத் தொடர்பு சந்தேகத்தில் காதலி கொலை !! தனிமையில் இருந்த போது நேர்ந்த கொடூரம்
வீட்டில் தனியாக இருந்த 12 - ம் வகுப்பு மாணவி 7 மாத கர்ப்பம் !! பள்ளி மாணவர் மீது போக்சோ
வீட்டில் தனியாக இருந்த 12 - ம் வகுப்பு மாணவி 7 மாத கர்ப்பம் !! பள்ளி மாணவர் மீது போக்சோ
அரசு பேருந்தில் பயங்கரம் !! பேருந்தில் இளைஞருக்கு சரமாரி அரிவாள் வெட்டு
அரசு பேருந்தில் பயங்கரம் !! பேருந்தில் இளைஞருக்கு சரமாரி அரிவாள் வெட்டு
Car Accident: 7 பைக்குகளை முட்டி மோதிய சிறுவன், காருக்கு அடியில் சிக்கிய முதியவர் - நையப்புடைத்த பொதுமக்கள்
7 பைக்குகளை முட்டி மோதிய சிறுவன், காருக்கு அடியில் சிக்கிய முதியவர் - நையப்புடைத்த பொதுமக்கள்

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kanimozhi: அருவருப்பான பேச்சு, மருமகனை கண்டிப்பாரா? கனிமொழி வாய் திறக்காதது ஏன்? - TVKவினர் சரமாரி கேள்வி
அருவருப்பான பேச்சு, மருமகனை கண்டிப்பாரா? கனிமொழி வாய் திறக்காதது ஏன்? - TVKவினர் சரமாரி கேள்வி
முதல்வர் பற்றி சர்ச்சை பேச்சு.. அவை அடக்கம் இல்லாத ஆபாசநிதி.. உதயநிதியை வெளுத்து வாங்கிய ஆனந்த்!
முதல்வர் பற்றி சர்ச்சை பேச்சு.. அவை அடக்கம் இல்லாத ஆபாசநிதி.. உதயநிதியை வெளுத்து வாங்கிய ஆனந்த்!
TN Weather News: 7 மாவட்டங்களுக்கு இடி, மின்னலுடன் மழை எச்சரிக்கை - சென்னை? தமிழக வானிலை அறிக்கை
7 மாவட்டங்களுக்கு இடி, மின்னலுடன் மழை எச்சரிக்கை - சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Actor Dhanush : ’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
Bankipur Bypoll: பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
Trump Vs Iran: பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
Embed widget