மேலும் அறிய

கொலைக்கு கொலைதான் தீர்வு.. கொடூர தீர்ப்பு வழங்கிய பஞ்சாயத்து! சத்தமில்லாமல் நடந்த சம்பவம்!

தங்களது தந்தை இறந்துவிட்டதால் சிங்கண்ணாவும் இறக்க வேண்டும் என்று கயாவின் மகன்கள் கூறினர்

ஆந்திராவில் கொலை சம்பவம் ஒன்றில் கிராம பஞ்சாயத்து வழங்கிய தீர்ப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இதுதொடர்பாக பாலகொண்டா டி.எஸ்.பி எம்.ஸ்ரவாணி கூறியுள்ள தகவலில், ஆந்திர மாநிலம் பார்வதிபுரம் மாவட்டத்தில் உள்ள பழங்குடியின கடைநிலை கிராமமான ரெகுலகுடாவில் கடந்த மே மாதம் 27 ஆம் தேதி திருமணம் ஒன்று நடைபெற்றுள்ளது. இந்நிகழ்ச்சியின் போது ​​அதே கிராமத்தைச் சேர்ந்த சவர் கயா (வயது 60) என்பவரின் மகள் பத்மாவை மனவளர்ச்சி குன்றிய நபரான சவர் சிங்கண்ணா (33) என்பவர் கட்டையால் தாக்கியுள்ளார்.

இதைக் கண்டு அதிர்ச்சியான சவர் கயா சிங்கண்ணாவை கீழே தள்ளியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சிங்கண்ணா கயாவை கட்டையால் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதற்கு மறுநாள் கயாவின் மகன்கள் சிங்கண்ணாவின் கை, கால்களை கட்டி வீட்டுக்குள் அடைத்து வைத்தனர். இதையறிந்த அப்பகுதி மக்கள் சிங்கண்ணா குடும்பத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். 

உடனடியாக இந்த சம்பவம் கிராம பஞ்சாயத்தின் கவனத்திற்கு கொண்டு செய்யப்பட்டது. இரு தரப்பினரையும் அழைத்து பழங்குடியின தலைவர்கள் விசாரணை நடத்தினர். இதில் தங்களது தந்தை இறந்துவிட்டதால் சிங்கண்ணாவும் இறக்க வேண்டும் என்று கயாவின் மகன்கள் கூறினர்.இல்லையென்றால் அவரின் குடும்பத்தில் அனைவரையும் கொன்று விடுவோம் என மிரட்டல் விடுத்தனர். 

பஞ்சாயத்தின் கொடூர தீர்ப்பு

இதனைத் தொடர்ந்து இருதரப்பு வாதங்களையும் கேட்ட பின்  பஞ்சாயத்தில் மரணத்திற்கு மரணம் தான் தீர்வு என்ற அடிப்படையில் சிங்கண்ணாவை கொலை செய்யலாம் என கொடூர தீர்ப்பை வழங்கப்பட்டது. இதனை மறுத்தால் தாங்கள் அனைவரும் கொலை செய்யப்பட்டு விடுவோம் என அஞ்சிய சிங்கண்ணாவின் குடும்பத்தினர் இதற்கு ஒப்புக் கொண்டனர். அதன்படி மே 28 ஆம் தேதி சிங்கண்ணா விஷம் கொடுக்கப்பட்டு அதன்பின் அவர் தூக்கிலிடப்பட்டார். பின்னர் யாருக்கும் தெரியாமல் அவரது சடலம் எரியூட்டப்பட்டது. 

 கயா மற்றும் சிங்கண்ணாவின் மரணம் இயற்கையானது போல கிராம மக்கள் வழக்கம்போல பணிகளை மேற்கொள்ள தொடங்கினர். ஆனால் இந்த மரணங்கள் குறித்து தகவல் அறிந்த கிராம வருவாய் அலுவலர்கள் காவல்துறையில் புகாரளித்தனர். இதனையடுத்து விசாரணையில் இறங்கிய போலீசார் அடுத்த இரண்டு நாட்களில் கொலைக்கு தூண்டியவர்கள், பஞ்சாயத்து மூலம் அதற்கு ஏற்பாடு செய்த தலைவர்கள் என 16 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் ஆந்திர மாநிலத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

தலைப்பு செய்திகள்

ஐபோன் கேட்ட காதலி..! சென்னையில் அரங்கேறிய சினிமா பாணி திருட்டு.. காட்டிக்கொடுத்த 'வரிக்குதிரை' சட்டை!
ஐபோன் கேட்ட காதலி..! சென்னையில் அரங்கேறிய சினிமா பாணி திருட்டு.. காட்டிக்கொடுத்த சட்டை!
காரைக்கால் டூ இலங்கை... ரகசியத் தகவலால் நடுக்கடலுக்குள் பாய்ந்த போலீஸ் படை: நடந்தது என்ன?
காரைக்கால் டூ இலங்கை... ரகசியத் தகவலால் நடுக்கடலுக்குள் பாய்ந்த போலீஸ் படை: நடந்தது என்ன?
வயிற்றுக்குள் 15 கோடி.. எக்ஸ்ரே பார்த்து மிரண்டு போன சென்னை ஏர்போர்ட் அதிகாரிகள்.. அதிர்ச்சி பின்னணி!
வயிற்றுக்குள் 15 கோடி! எக்ஸ்ரே பார்த்து மிரண்டு போன ஏர்போர்ட் அதிகாரிகள்.. அதிர்ச்சி பின்னணி!
கடந்த ஆண்டு 50... இந்த ஆண்டு 17! மயிலாடுதுறையில் தொடரும் குண்டாஸ்..அலறும் சமூக விரோதிகள்!
கடந்த ஆண்டு 50... இந்த ஆண்டு 17! மயிலாடுதுறையில் தொடரும் குண்டாஸ்..அலறும் சமூக விரோதிகள்!

வீடியோ

Transgender vs Student | திருநங்கை vs மாணவி! பேருந்தில் சரமாரி தாக்குதல்.. வைரல் சிசிடிவி வீடியோ
TVK Reels Atrocity | அறிவில்லாமல் ரீல்ஸ் போடும் தவெகவினர்!அமைச்சர் பேச்சுக்கே மரியாதை இல்லை
நிர்மலா Out சக்திகாந்த தாஸ் IN 5 மத்திய அமைச்சர்கள் நீக்கம்? மோடியின் புதிய அமைச்சரவை
TVK Reels Viral Video : எம்.எல்.ஏ CHAIR-ல் தவெகவினர்! தொடரும் ரீல்ஸ் அட்டூழியம்.. வைரல் வீடியோ
CV Shanmugam Next Move | பதவி கொடுக்காத EPS அப்செட்டில் சி.வி.சண்முகம் அடுத்தது என்ன?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN CM VIJAY : அப்போ NO.. இப்போ OK.. தவெகவின் இரட்டை வேடம்.? ஆதாரத்தோடு அடித்து நொறுக்கும் சமூக ஆர்வலர்கள்
அப்போ NO.. இப்போ OK.. தவெகவின் இரட்டை வேடம்.? ஆதாரத்தோடு அடித்து நொறுக்கும் சமூக ஆர்வலர்கள்
Commercial Cooking Gas Price: காலையிலேயே குஷி.! அதிரடியாக குறைந்தது சிலிண்டர் விலை- எவ்வளவு தெரியுமா.?
காலையிலேயே குஷி.! அதிரடியாக குறைந்தது சிலிண்டர் விலை- எவ்வளவு தெரியுமா.?
TN Weather Update: எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை, தமிழக வானிலை அறிக்கை
எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை, தமிழக வானிலை அறிக்கை
Sierra EV Price List: சியாரா மின்சார எடிஷனின் வேரியண்ட், விலை, கலர்..! பேட்டரிக்கு லைஃப் டைம் வாரண்டி உண்மையா?
சியாரா மின்சார எடிஷனின் வேரியண்ட், விலை, கலர்..! பேட்டரிக்கு லைஃப் டைம் வாரண்டி உண்மையா?
EV Velu Case: மாஜி அமைச்சர் எ.வ. வேலுவுக்கு ஸ்கெட்ச் போட்ட விஜய்.! லஞ்ச ஒழிப்புத்துறை சம்மன் - அலறும் திமுக
மாஜி அமைச்சர் எ.வ. வேலுவுக்கு ஸ்கெட்ச் போட்ட விஜய்.! லஞ்ச ஒழிப்புத்துறை சம்மன் - அலறும் திமுக
C Vijayabaskar Join Tvk: நாளை தவெகவில் இணைகிறேன்.! அதிகாரப்பூர்வமாக அறிவித்த சி.விஜயபாஸ்கர்
நாளை தவெகவில் இணைகிறேன்.! அதிகாரப்பூர்வமாக அறிவித்த சி.விஜயபாஸ்கர்
Tata Sierra EV Vs Rivals: சியாரா மின்சார காரின் போட்டியாளர்கள் எப்படி? விலை, பேட்டரி பேக், ரேஞ்ச் முழு ஒப்பீடு
சியாரா மின்சார காரின் போட்டியாளர்கள் எப்படி? விலை, பேட்டரி பேக், ரேஞ்ச் முழு ஒப்பீடு
MK STALIN DMK : டோட்டலா மாறப்போகுது திமுக.! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு- அதிர்ச்சியில் நிர்வாகிகள்
டோட்டலா மாறப்போகுது திமுக.! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு- அதிர்ச்சியில் நிர்வாகிகள்
Embed widget