மேலும் அறிய

Principal Suspended: பெண் ஊழியருடன் பள்ளி அறையில் தலைமையாசிரியர்.. வீடியோ வைரலானதால் இடைநீக்கம்..!

ஆந்திரா அரசுப் பள்ளியில் தலைமை ஆசிரியர், பெண் ஊழியருடன் நெருக்கமாக இருக்கும் வீடியோ இணையத்தில் வைரலானதை தொடர்ந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

ஆந்திரா அரசுப் பள்ளியில் தலைமை ஆசிரியர், பெண் ஊழியருடன் நெருக்கமாக இருக்கும் வீடியோ இணையத்தில் வைரலானதை தொடர்ந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். 

ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் மசூலிப்பட்டணம் சிலகலப்புடி ரயில் நிலையம் அருகே  அரசு உருது சிறுபான்மையினர் உண்டு உறைவிட  பள்ளி உள்ளது.  இதில் மசூலிப்பட்டணம் பகுதி மாணவர்கள் ஏராளமானோர் தங்கி படித்து வருகின்றனர். இந்த பள்ளி விடுதி அறையில் இரவு நேரங்களில் தலைமை ஆசிரியர் ஆனந்த பாபு, பெண்  கணினி ஆபரேட்டருடன் நெருக்கமாக இருந்துள்ளார். மேலும், பகல் நேரத்திலேயே பள்ளி அறைகளில் இரண்டு பேரும் ஒன்றாக இணைந்து சந்தோஷமாக இருந்துள்ளனர். 

இதை தொடர்ந்து கவனித்து வந்த மாணவர்கள், தங்கள் வீட்டிலிருந்து செல்போனை மறைமுகமாக எடுத்துவந்து வீடியோ எடுத்து மற்ற மாணவர்களுக்கு பகிர்ந்துள்ளனர்.இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வீடியோ எடுக்கப்பட்டதை அறிந்த தலைமை ஆசிரியர் மாணவர்களை கடுமையாக தாக்கி உள்ளார். தினமும் அவர் வகுப்பறைக்கு வரும் மாணவர்களை சராமரியாக தாக்கி உள்ளதாக கூறப்படுகிறது. சில மாணவர்கள் அடிக்கு பயந்து உறவினர்கள் வீட்டிற்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், தலைமை ஆசிரியரின் வீடியோ சமூக வளைதளங்களில் வெளியானதால் சிலகலப்புடி போலீசார் வழக்குப் பதிவு செய்து ஆனந்த்பாபுவை கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்தநிலையில் வீடியோ வைரலானதை தொடர்ந்து, தலைமையாசிரியர் உடனடியாக இடைநீக்கம் செய்யப்பட்டார். ஆந்திரா கல்வி நிறுவனங்களின் சங்கத்தின் செயலாளர் நரசிம்மராவ், குமாரை சஸ்பெண்ட் செய்து, இது குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டார். இதற்கிடையில், ஒப்பந்த பெண் ஊழியரை பணியில் இருந்து நீக்குவது குறித்து பரிசீலித்து வருகின்றனர். 

இதற்கிடையில், சிறுபான்மை குருகுலப் பள்ளியில் கணினி ஆபரேட்டராகப் பணிபுரியும் பெண் ஊழியர் ஷகீலா, தலைமை ஆசிரியர் தன்னை அறைக்குள் வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று, தவறாக நடந்துகொண்டதாக காவல்துறையில் புகார் அளித்துள்ளார். 

மற்றொரு சம்பவம்:

மயிலாடுதுறை சேந்தங்குடியைச் சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி என்பவரின் மகன் 34 வயதான சீனிவாசன். இவர் மயிலாடுதுறையில் தனியார் பள்ளி ஒன்றில் இயற்பியல் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். மேலும்,  இவர் அப்பள்ளியின் கூடுதலாக  மாணவர்கள் விடுதியையும் கண்காணித்து வந்துள்ளார். இந்நிலையில் திருமணமாகாத இவர், அதே பள்ளியில் 9 -ஆம் வகுப்பு படித்து வரும் 13 வயது மாணவன் ஒருவரிடம் தகாத முறையில் தன்பாலின ஈர்ப்புக்கு வற்புறுத்தியுள்ளார். 

பயத்தின் காரணமாக இதனை வெளியில் சொல்ல முடியாத சிறுவன், அதே விடுதியில் தங்கி 6 -ஆம் வகுப்பு படிக்கும் தனது தம்பியிடம் மட்டும் இதுபற்றி கூறியுள்ளார். அந்த சிறுவன் உடனே தனது அண்ணனிடம் ஆசிரியர் தவறாக நடந்து கொண்டது குறித்து தாயாரிடம் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவனின் தாயார் மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.  இதனிடையே, மாணவனிடம் தவறாக நடந்து கொண்ட ஆசிரியர் சீனிவாசனை பணி நிர்வாகம் பள்ளியில் இருந்து நீக்கியது.  

அதனைத் தொடர்ந்து விஷயம் வெளியே தெரிந்ததை அறிந்த ஆசிரியர் சீனிவாசன் எலிபேஸ்ட் விஷத்தைத் தின்று தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். இதன்காரணமாக, மயங்கி விழுந்த சீனிவாசனை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மயிலாடுதுறையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சிதம்பரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலைய காவலர்கள் ஆசிரியர் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், ஆசிரியர் சீனிவாசன் குணமடைந்து  மயிலாடுதுறை பேருந்து நிலையம் வந்தவரை  பேருந்து நிலையத்தில் வைத்து கைது செய்தனர். 

தலைப்பு செய்திகள்

" பெண் வங்கி மேலாளரை ஏமாற்றிய காவலர் " ஜெயிலுக்கு போறேன் , கல்யாணம் பண்ண மாட்டேன் - காவலர்
தண்டவாளத்தில் ஆடையின்றி கிடந்த பெண் சடலம் - கொலையா ? தற்கொலையா ?
தண்டவாளத்தில் ஆடையின்றி கிடந்த பெண் சடலம் - கொலையா ? தற்கொலையா ?
லஞ்ச ஒழிப்புத்துறையில் வெளிப்படைத்தன்மைக்கு 'இடமாற்றம் தான்' தீர்வு - சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல் !
லஞ்ச ஒழிப்புத்துறையில் வெளிப்படைத்தன்மைக்கு 'இடமாற்றம் தான்' தீர்வு - சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல் !
மயக்க மருந்து கொடுத்து ஜிம் பெண் உரிமையாளர் பலாத்காரம் !! வீடியோ எடுத்து மிரட்டிய தம்பதி கைது
மயக்க மருந்து கொடுத்து ஜிம் பெண் உரிமையாளர் பலாத்காரம் !! வீடியோ எடுத்து மிரட்டிய தம்பதி கைது

வீடியோ

காங்., கவுன்சிலர் புடவையை இழுத்த திமுக கவுன்சிலர்கள்! வெளியான பகீர் வீடியோ!
மீண்டும் DELIMITATION மசோதா திமுக-வை நாடிய பாஜக? ஸ்டாலின் அவசர ஆலோசனை!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
US Iran War: ஈரான் மீது தரைவழித் தாக்குதல் நடத்தப் போகிறதா அமெரிக்கா.? ரகசிய திட்ட வரைபடம் வைரலானதால் பரபரப்பு
ஈரான் மீது தரைவழித் தாக்குதல் நடத்தப் போகிறதா அமெரிக்கா.? ரகசிய திட்ட வரைபடம் வைரலானதால் பரபரப்பு
72nd national film awards: தேசிய விருதுகளை அள்ளிய தமிழ் சினிமா.. யார்? யாருக்கு என்னென்ன விருது? - முழு லிஸ்ட் இதோ
தேசிய விருதுகளை அள்ளிய தமிழ் சினிமா.. யார்? யாருக்கு என்னென்ன விருது? - முழு லிஸ்ட் இதோ
National Film Award-Dhanush: 2024 தேசிய திரைப்பட விருதுகள்; இயக்குனர், நடிகர் என 2 விருதுகளை அள்ளிய தனுஷ்.! எந்தெந்த படங்கள்.?
2024 தேசிய திரைப்பட விருதுகள்; இயக்குனர், நடிகர் என 2 விருதுகளை அள்ளிய தனுஷ்.! எந்தெந்த படங்கள்.?
3 வருட கட்சி தவெக.. உங்களுக்கு இவ்வளவு திமிரா? - விஜயை விளாசிய வளர்மதி!
3 வருட கட்சி தவெக.. உங்களுக்கு இவ்வளவு திமிரா? - விஜயை விளாசிய வளர்மதி!
குறைகளைக் கொட்டிய சமூகநீதி விடுதி மாணவர்கள்.. ஒரே நாளில் ஆக்‌ஷன் எடுத்த விஜய்..குவியும் பாராட்டு!
குறைகளைக் கொட்டிய சமூகநீதி விடுதி மாணவர்கள்.. ஒரே நாளில் ஆக்‌ஷன் எடுத்த விஜய்..குவியும் பாராட்டு!
RBI Plans Plastic Notes: கள்ளநோட்டு கும்பலுக்கு ஆப்பு.! புதிய பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்த RBI திட்டம்.? விவரம்
கள்ளநோட்டு கும்பலுக்கு ஆப்பு.! புதிய பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்த RBI திட்டம்.? விவரம்
Samsung Flex Titanium Display: ‘கீழ விழுந்தாலும் உடையாது‘; மடிக்கக்கூடிய ஃபோன் டிஸ்ப்ளேக்களில் புதிய டெக்னாலஜி; அசத்தும் சாம்சங்
‘கீழ விழுந்தாலும் உடையாது‘; மடிக்கக்கூடிய ஃபோன் டிஸ்ப்ளேக்களில் புதிய டெக்னாலஜி; அசத்தும் சாம்சங்
ரூ.1 லட்சம் போதும்; ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 மாத இஎம்ஐ எவ்வளவு?- முழு விவரம்
ரூ.1 லட்சம் போதும்; ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 மாத இஎம்ஐ எவ்வளவு?- முழு விவரம்
Embed widget