மேலும் அறிய

அக்கிரமம்! நண்பர்களுடன் சேர்ந்து சட்டக்கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த காதலன்!

ஆந்திராவில் சட்டக்கல்லூரி மாணவியை நண்பர்களுடன் சேர்ந்து மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த காதலனை போலீசார் கைது செய்தனர்.

ஆந்திராவில் அமைந்துள்ளது விசாகப்பட்டினம். இங்குள்ள சட்டக்கல்லூரியில் 20 வயதான மாணவி ஒருவர் படித்து வருகிறார். இவர் திடீரென தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். அப்போது, அதிர்ஷ்டவசமாக அதைப் பார்த்த அவரது தந்தை தனது மகளை காப்பாற்றியுள்ளார். தனது மகளின் தற்கொலை முயற்சியை கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த பெண்ணின் தந்தை இதுகுறித்து விசாரித்துள்ளார். அப்போது, அந்த பெண் கூறிய தகவலை கேட்டு அவர் அதிர்ச்சியில் உறைந்தார்.

நெருக்கமாக இருக்கும் வீடியோ:

விசாகப்பட்டினத்தைச் சேர்ந்தவர் வம்சி. வம்சிக்கும் தற்கொலைக்கு முயன்ற சட்டக்கல்லூரி மாணவிக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது.

 இதையடுத்து, அந்த கல்லூரி மாணவியும், வம்சியும் அடிக்கடி வெளியில் சந்தித்து பேசி வந்துள்ளனர். அப்போது, இருவரும் ஒருமுறை தனிமையில் சந்தித்தபோது நெருக்கமாக இருந்துள்ளனர். அப்போது, அதை வம்சி தனது செல்போனில் வீடியோவாக எடுத்துள்ளார்.

மிரட்டி பாலியல் வன்கொடுமை:

அப்போது, ஒருநாள் வம்சி தனது நண்பர்கள் 3 பேரிடம் மாணவியிடம் நெருக்கமாக இருந்த வீடியோவை காட்டியுள்ளார். அதைப் பார்த்த வம்சியின் நண்பர்கள் தாங்களும் அந்த பெண்ணிடம் நெருக்கமாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். இதற்கு வம்சியும் சம்மதம் தெரிவித்துள்ளார்.

பின்னர், வம்சி அந்த சட்டக்கல்லூரி மாணவியை விசாகப்பட்டினத்தில் உள்ள கிருஷ்ணா நகரில் உள்ள தனது நண்பன் அறைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது, வம்சியும் அந்த பெண்ணும் நெருக்கமாக இருந்துள்ளனர். அதை வம்சியின் நண்பர்கள் மறைந்து இருந்து வீடியோவாக எடுத்துள்ளனர்.

பின்னர், திடீரென உள்ளே வந்த அவர்களை கண்டு அந்த பெண் அதிர்ச்சியில் உறைந்துள்ளார். செய்வதறியாமல் திகைத்த அந்த பெண்ணிடம் வீடியோவை காட்டி மிரட்டியுள்ளனர். வம்சியும் அந்த பெண்ணை மிரட்டியதை கண்டு அந்த பெண் அதிர்ச்சியில் உறைந்துள்ளார். மேலும், அவர்கள் 4 பேரும் சேர்ந்து இளம்பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

காதலன் உள்பட 4 பேர் கைது:

இந்த வீடியோவை காட்டி வம்சியும், அவரது நண்பர்களும் மாணவியை மிரட்டி தங்களது ஆசைக்கு இணங்க வற்புறுத்தியுள்ளனர். இதனால், மனம் உடைந்த மாணவி கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். பின்னர், மன உளைச்சலில் தற்கொலைக்கு முயற்சித்தபோது அவரது தந்தை காப்பாற்றியுள்ளார்.

இந்த சம்பவத்தை கேட்டு அதிர்ச்சியில் உறைந்த அந்த பெண்ணின் தந்தை போலீசிடம் இதுதொடர்பாக புகார் அளித்துள்ளார். இதையடுத்து போலீசார் வம்சி மற்றும் அவரது நண்பர்கள் 3 பேரையும் கைது செய்தனர். காதலியை நண்பர்களுடன் சேர்ந்து காதலனே பாலியல் வன்கொடுமை செய்த விவகாரம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தலைப்பு செய்திகள்

சாமி கும்பிட போன நேரத்தில் விபரீதம் !! உறவுக்கார பெண் செய்த மாஸ்டர் பிளான்
சாமி கும்பிட போன நேரத்தில் விபரீதம் !! உறவுக்கார பெண் செய்த மாஸ்டர் பிளான்
45 வயது பெண்ணுடன் காதல் உறவு.. ரயிலில் தள்ளி கொன்ற காதலன்.. சிக்க வைத்த ஹேண்ட் பேக்!
45 வயது பெண்ணுடன் காதல் உறவு.. ரயிலில் தள்ளி கொன்ற காதலன்.. சிக்க வைத்த ஹேண்ட் பேக்!
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
பெத்த தாயையே உயிரோடு அடித்தே கொன்ற மகன்... ஜோலார்பேட்டையில் பரபரப்பு - நடந்தது என்ன?
பெத்த தாயையே உயிரோடு அடித்தே கொன்ற மகன்... ஜோலார்பேட்டையில் பரபரப்பு - நடந்தது என்ன?

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
US Iran War: “சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
“சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
US Tariff on India: இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
Zelensky Serbia Weapons: பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
Lottery Martin's donation ; ”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
Best Selling Midsize SUV: எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
Embed widget