அவர் என்ன செய்ய விரும்புகிறார் என்பதில் ஆர்வம் காட்டுங்கள். விளையாட்டு, இசை அல்லது வீடியோ கேம்கள் எதுவாக இருந்தாலும் சரிதான்
திரைப்படம் பார்ப்பது, உணவு சமைப்பது அல்லது நடைபயிற்சி செல்வது என ஒன்றாக நேரத்தை செலவிடுவது உங்கள் பிணைப்பை பலப்படுத்துகிறது
உங்கள் அன்றாட வாழ்க்கையில் மரியாதை, நேர்மை மற்றும் கருணை காட்டுங்கள் மகன் உங்கள் முன்மாதிரியைப் பின்பற்றலாம்
அவரது முயற்சிகளையும் சாதனைகளையும் பாராட்டுங்கள். தேவைப்படும்போது ஆக்கபூர்வமான கருத்துக்களை சொல்லவும்
முடிவுகளை எடுக்கவும் தவறுகளில் இருந்து கற்றுக்கொள்ளவும் அனுமதிக்கவும்
அவரது பள்ளி வாழ்க்கையில் ஆர்வம் காட்டுங்கள். பெற்றோர்-ஆசிரியர் சந்திப்புகளில் கலந்துகொண்டு, அவரது முன்னேற்றத்தைப் பற்றி
தெரிந்துக்கொள்ள வேண்டும்
அவர்கள் உறவில் ஏற்ற தாழ்வுகள் இருக்கும். சவால்களை சமாளிக்க அமைதியாகவும் ஆதரவாகவும் இருங்கள்
நல்ல உணவுப் பழக்கம், வழக்கமான உடற்பயிற்சி மற்றும் போதுமான தூக்கம் ஆகியவற்றை ஊக்குவிக்கவும்
அவர்களின் உணர்வுகளை அற்பமானவை என்று நிராகரிக்காமல் ஏற்றுக்கொள்ளுங்கள்
மனச்சோர்வு அல்லது பதட்டம் போன்ற கடுமையான பிரச்சினைகளின் அறிகுறிகளை நீங்கள் கண்டால் உங்கள் ஆலோசனை கொடுக்க வேண்டும்