டீனேஜ் பெண்ணின் ஆபாச வீடியோ: இணையத்தில் கசியவிட்ட 24 வயது இளைஞர் கைது!
குற்றம்சாட்டப்பட்ட அந்த இளைஞர் சமூக வலைதளங்களில் பல பெண்களை ஏமாற்றி ஆபாசமான படங்கள் மற்றும் வீடியோக்களைப் பெறுவதற்கு இதே முறையைப் பின்பற்றியுள்ளார்.
குஜராத்தின் அகமதாபாத்தில் டீனேஜ் பெண்ணை ஏமாற்றி அவரது ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோ கிளிப்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்ததாக 24 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சிறுமியின் தந்தையின் புகாரைத் தொடர்ந்து, அகமதாபாத் சைபர் கிரைம் பிரிவு இளைஞரை இன்று கைது செய்துள்ளது.
இன்ஸ்டாகிராமைப் பயன்படுத்தி அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தனது மகளுடன் நட்பு கொண்டுள்ளார். அவரிடம் நட்புரீதியில் பழகிய அந்த இளைஞர், டீனேஜ் பெண்ணிடம் நம்பிகை ஏற்படுத்தும் விதமாக பேசி, பின்னர் சிறுமியின் ஆபாச வீடியோ கிளிப்புகள் மற்றும் புகைப்படங்களை வாங்கியுள்ளார். அதன்பின்னர், வெவ்வேறு சமூகவலை தளங்களில் வீடியோக்களையும், புகைப்படங்களையும் ஷேர் செய்துள்ளார். சிறுமியின் நண்பர்கள் மூலம், இந்த விவகாரம் குறித்து சிறுமிக்கு தெரியவர அதிர்ச்சி அடைந்துள்ளார். என்ன செய்வது தெரியாமல் இருந்த சிறுமி, இதுகுறித்து தனது தந்தையிடம் கூறினார். அவர் உடனே போலீசாரிடம் புகார் கூறினார். மேலும் படிக்க: POCSO | 18 வயதிற்கு கீழ் இருக்கும் குழந்தைகளை பாதுகாப்பது எப்படி? போக்சோ சட்டம் சொல்வது என்ன?
இதனைத்தொடர்ந்து, தொழில்நுட்ப நுண்ணறிவு உதவியுடன், சைபர் கிரைம் போலீசார் இளைஞரை இன்று அவரது வீட்டில் கைது செய்தனர். இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 354D மற்றும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் (போக்சோ) சட்டத்தின் தொடர்புடைய விதிகளின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தகவல் தொழில்நுட்பத் திருத்தச் சட்டத்தின் கீழ் தொடர்புடைய குற்றச்சாட்டுகளும் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளன. மேலும் படிக்க: Coimbatore Student Suicide | கோவை மாணவி தற்கொலை : பள்ளிக் கல்வித்துறை அளித்திருக்கும் புதிய உத்தரவு என்ன?
"குற்றம்சாட்டப்பட்ட அந்த இளைஞர் சமூக வலைதளங்களில் பல பெண்களை ஏமாற்றி ஆபாசமான படங்கள் மற்றும் வீடியோக்களைப் பெறுவதற்கு இதே முறையைப் பின்பற்றியதையும் நாங்கள் கண்டறிந்துள்ளோம்" என்று அதிகாரி கூறினார். மேலும் படிக்க: சென்னையில் தாலிக்கயிற்றால் மனைவிகளின் கழுத்தை நெரித்து கொன்ற கணவன்கள்- ஒரு மாதிரி இரு சம்பவங்கள்!
டெல்லியைச் சேர்ந்த 16 வயது சிறுமியை சமூகவலைதளம் மூலம் நட்பாக்கிய ஒருவரால் கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் நடைபெற்ற சில வாரங்களுக்குப் பிறகு இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்