மேலும் அறிய

காருக்குள் இருந்து கூச்சலிட்ட யாஷிகா..! போலீசில் அளித்த வாக்குமூலம் என்ன?

நடிகை யாஷிகா படுகாயமடைந்து சிகிச்சை பெற்றுவரும் நிலையில், காரை தாம்தான் ஓட்டி வந்ததாக போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் பகுதிக்கு நேற்று முன்தினம் இரவு நடிகை யாஷிகா ஆனந்த், ஹைதராபாத்தைச் சேர்ந்த பவனி என்ற பெண் தோழி மற்றும் சையது,அமீர், ஆகியோருடன் நேற்று முன்தினம் இரவு, யாஷிகா ஆனந்தின்,  நண்பர்களும் அங்கு நடந்த பார்ட்டியில் கலந்து கொண்டுள்ளனர். பின்பு பாண்டிச்சேரியிலிருந்து நேற்று இரவு  தனது நண்பர்களுடன் சென்னை  கிழக்குக் கடற்கரை சாலை வழியாக  சென்னை நோக்கி சென்றுள்ளனர். காரை யாஷிகா ஆனந்த் ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது, சூளேரிக்காடு பகுதியில் அதிவேகமாக சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து, சாலையின் சென்டர் மீடியனில் மோதி அருகே உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், நடிகையின் பெண் தோழி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்த மாமல்லபுரம் போலீஸார், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, காயமடைந்தவர்களை மீட்டு பூஞ்சேரியில் உள்ள விபத்து முதலுதவி சிகிச்சை மையத்துக்கு அனுப்பி வைத்தனர்.
 
இதனை தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக தற்போது சென்னை அடையாறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது நடிகை யாஷிகாவிற்கு இடுப்பு மற்றும் கால் எலும்புகள் முறிந்து உள்ளதால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து மகாபலிபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
சம்பவம் குறித்து யாஷிகாவிடம், மகாபலிபுரம் காவல்துறையினர் வாக்குமூலம் பெற்றனர். அதில்,யாஷிகா அதிவேகமாக காரை ஓட்டி வந்தபோது , திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்ததால், விபத்துக்குள்ளானதாகவும் அந்த காரில் இருந்த யாஷிகாவின் தோழி பவானி சீட்பெல்ட் அணியாததால், காருக்கு வெளியே தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே மரணமடைந்ததாகவும், மேலும் விபத்து நடந்த பிறகு ரத்த வெள்ளத்தில் இருந்த நண்பர்களை காப்பாற்ற கூச்சல் விட்டதாகவும் அவருடைய வாக்குமூலத்தில் இருந்து தெரியவந்துள்ளது. அதே சமயம் அவர் மதுபோதையில் இல்லை எனவும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. யாஷிகா ஆனந்த் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் யாஷிகாவின் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். 279, 337, 304 A அதிவேகமாக கார் ஓட்டியது, உயிர் சேதம் ஏற்படுத்தும் வண்ணம் காரை ஓட்டியது ஆகிய பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
 
கவலை வேண்டாம் படத்தின் மூலம் அறிமுகமான நடிகை யாஷிகா, பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்தார். அதன் பின்னர், இருட்டு அறையில் முரட்டு குத்து, ராஜ பீமா, இவன் தான், நோட்டா, உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் மேலும் "கடமை செய்" ஆகிய படங்களில் தற்போது நடித்து வருகிறார். மேலும், குறைந்த அளவில் படங்கள் நடித்திருந்தாலும், யாஷிகா சமூக வலைத்தளத்தில் தொடர்ந்து ஆக்டிவாக இருந்து வருவதால், அவருக்கு என்று தனி ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

கலெக்டர் ஸ்ரீகாந்த் ஐஏஎஸ் அதிரடி! மயிலாடுதுறையில் 29 வாகனங்கள் பறிமுதல்..! 
கலெக்டர் ஸ்ரீகாந்த் ஐஏஎஸ் அதிரடி! மயிலாடுதுறையில் 29 வாகனங்கள் பறிமுதல்..! 
மதுரை சோழவந்தான்: பெட்ரோல் பங்கில் பட்டாக்கத்தி கொள்ளை - சிசிடிவி மூலம் 6 மணி நேரத்தில் 2 இருவர் கைது !
மதுரை சோழவந்தான்: பெட்ரோல் பங்கில் பட்டாக்கத்தி கொள்ளை - சிசிடிவி மூலம் 6 மணி நேரத்தில் 2 இருவர் கைது !
'நோ காம்ப்ரமைஸ்!' - குற்றவாளிகளுக்குத் தொடர் செக்: மயிலாடுதுறையில் மீண்டும் மீண்டும் பாயும் குண்டாஸ்!
'நோ காம்ப்ரமைஸ்!' - குற்றவாளிகளுக்குத் தொடர் செக்: மயிலாடுதுறையில் மீண்டும் மீண்டும் பாயும் குண்டாஸ்!
ஆபாச பேச்சு... ஓய்வு உடற்கல்வி ஆசிரியர் போக்சோவில் கைது: உடந்தையாக இருந்த ஆசிரியையும் கைது
ஆபாச பேச்சு... ஓய்வு உடற்கல்வி ஆசிரியர் போக்சோவில் கைது: உடந்தையாக இருந்த ஆசிரியையும் கைது

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: ”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
Aavin Milk Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
பணிந்த அரசு! ’கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் போராடக்கூடாது’ கடும் எதிர்ப்பால் தடை உத்தரவு வாபஸ்!
பணிந்த அரசு! ’கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் போராடக்கூடாது’ கடும் எதிர்ப்பால் தடை உத்தரவு வாபஸ்!
நடுத்தர SUV போர்; டாடா சியரா வருகையால் கியா செல்டோஸ்-க்கு கடும் போட்டி!- யாருக்கு முதலிடம்?
நடுத்தர SUV போர்; டாடா சியரா வருகையால் கியா செல்டோஸ்-க்கு கடும் போட்டி!- யாருக்கு முதலிடம்?
Hyundai Tucson: ரக்கட் ஆன டிசைன், பேக்கேஜ்ட் அம்சங்கள், ஹைப்ரிட் - முற்றிலும் புதிய டக்சன் SUV - விலை என்ன?
ரக்கட் ஆன டிசைன், பேக்கேஜ்ட் அம்சங்கள், ஹைப்ரிட் - முற்றிலும் புதிய டக்சன் SUV - விலை என்ன?
தோழர்களுக்கே குஜிலிமஸ்தா.! கூட்டணிக்காக கம்யூனிஸ்டுக்கு மிரட்டலா.? TVK அரசை போட்டு தாக்கும் அதிமுக
தோழர்களுக்கே குஜிலிமஸ்தா.! கூட்டணிக்காக கம்யூனிஸ்டுக்கு மிரட்டலா.? TVK அரசை போட்டு தாக்கும் அதிமுக
சிபிஐ, சிபிஎம் என்ன தடை செய்யப்பட்ட அமைப்புகளா? - வட்டாட்சியர் செயலுக்கு அன்புமணி ராமதாஸ் கொந்தளிப்பு!
சிபிஐ, சிபிஎம் என்ன தடை செய்யப்பட்ட அமைப்புகளா? - வட்டாட்சியர் செயலுக்கு அன்புமணி ராமதாஸ் கொந்தளிப்பு!
CM Joseph Vijay: பெரம்பூரில் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை.. 7 புதிய செவிலியர் கல்லூரிகள்.. அறிவிப்புகளை அள்ளி வீசிய முதலமைச்சர்!
CM Joseph Vijay: பெரம்பூரில் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை.. 7 புதிய செவிலியர் கல்லூரிகள்.. அறிவிப்புகளை அள்ளி வீசிய முதலமைச்சர்!
Embed widget