Crime : காதல் திருமணம் செய்து கொண்ட இளம்பெண்..! திடீரென தூக்கிட்டு தற்கொலை..!
தண்டராம்பட்டு பகுதியில் காதலித்து திருமணம் செய்து கொண்ட இளம்பெண் 10 மாதத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து உதவி ஆட்சியர் விசாரணை நடத்தி வருகிறார்.
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு தாலுகா பெருங்குளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை வயது 45) இவர் விவசாயாம் செய்து வருகிறார். இவருடைய மனைவி வள்ளியம்மாள் வயது (38) இவர்களுக்கு கோதாவரி வயது (20) என்ற மகளும், அர்ஜுன் வயது (18) என்ற மகனும் உள்ளனர்.
இதில் ஏழுமலையின் குடும்பத்தில் பணம் பற்றாக்குறையினால் வள்ளியம்மாள் மலேசியாவில் வீட்டு வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் அதே கிராமத்தை சேர்ந்த உறவினரான கார்த்திக் வயது (24) இவரும் கோதாவரியும் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். பின்னர் கார்த்திக்கை கோதாவரி கடந்த பிப்ரவரி மாதம் 6-ந் தேதி பெருங்குளத்தூரில் உள்ள பெருமாள் கோவிலில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.இந்த நிலையில் நேற்று இரவு கோதாவரி வீட்டில் உள்ள ஒரு அறையில் தனியாக தூங்கிக் கொண்டிருந்தார்.
அப்போது வெளியில் கார்த்திக் மற்றும் அவரது தாயாரும் தூங்கியுள்ளனர். இன்று அதிகாலையில் கார்த்திக் மற்றும் அவருடைய தாயாரும் எழுந்து வீட்டினுல் சென்று தனி அறையில் உள்ள கோதவாரியை எழுப்ப சென்றனர். அரையை பார்த்தபோது கோதாவரி வீட்டுக்குள் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த கணவன் கார்த்தி மற்றும் மாமியார் கதரி அழுதனர்.
பின்னர் கார்த்தியின் தாயார் அழுது கொண்டே வெளியே ஓடிவந்துள்ளார். இதனைப்பார்த்த அக்கம் பக்கத்தினர், கார்த்திகேயின் தாயாரிடம் கேட்டுள்ளனர். அப்போது என்னுடைய மருமகள் கோதாவரி தூக்கு மாட்டி இறந்து விட்டார் என்று தெரிவித்தாக கூறப்படுகிறது. மேலும், அங்கிருந்த பொதுமக்கள் உடனடியாக இந்த சம்பவம் குறித்து தானிப்பாடி காவல்நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். தகவலின் அடிப்படையில் உடனடியாக துணை ஆய்வாளர் மணிமாறன் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கோதாவரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் திருமணமான 10 மாதத்தில் காதலித்து திருமணம் செய்து கொண்ட இளம்பெண் தற்கொலை செய்து கொண்டதால் திருவண்ணாமலை உதவி ஆட்சியர் மந்தாகினி கோதாவரி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது அவரை கொடுமை செய்யப்பட்டாரா? அல்லது யாராவது அவரை அடித்து கொலை செய்து விட்டு தூக்கில் மாட்டி விட்டார்களா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மன உளைச்சலோ, தற்கொலை எண்ணமோ மேலிடும்போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம். சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம், எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம், சென்னை - 600 028. தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060