மேலும் அறிய

உதவித்தொகைக்கு விண்ணப்பித்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை.. தாசில்தாருக்கு தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்..!

சிக்கோடியில் அரசின் உதவித்தொகை கேட்டு விண்ணப்பித்த கணவரை இழந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தாசில்தாரை அந்த பெண்ணும்,பொதுமக்களும் சேர்ந்து அடித்து, உதைத்தனர்.

பெங்களூரு : சிக்கோடியில், அரசின் உதவித்தொகை கேட்டு விண்ணப்பித்த கணவரை இழந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தாசில்தாரை அந்த பெண்ணும், பொது மக்களும் சேர்ந்து அடித்து, உதைத்தனர். பெலகாவி மாவட்டம் சிக்கோடி தாலுகாவில் தாசில்தாராக பணியாற்றி வருபவர் டி.எஸ்.ஜெயதார். 2-ஆம் நிலை தாசில்தாரான அவரிடம், அதே தாலுகா அங்கலி கிராமத்தை சேர்ந்த கணவரை இழந்த பெண் ஒருவரின் மகன் அரசின் மாதாந்திர உதவித்தொகை வழங்குமாறு கோரி விண்ணப்பம் வழங்கினார். மனுவை பெற்றுக்கொண்ட அவர், உங்களின் தாயுடன் வந்து என்னை பார்க்கவேண்டும் என்று அறிவுறுத்தினார். இந்த நிலையில் தனது மகனுடன் அந்த கைம்பெண் நேற்று சிக்கோடிக்கு வந்து தாசில்தார் டி.எஸ்.ஜெயதாரை நேரில் சந்தித்தார். அப்போது அந்த பெண்ணை மட்டும் அலுவலகத்திற்குள் வரும்படி தாசில்தார் கூறினார். இதையடுத்து அந்த பெண் தனது மகனை அலுவலகத்திற்கு வெளியே நிறுத்திவிட்டு அவர் மட்டும் உள்ளே சென்றார்.


உதவித்தொகைக்கு விண்ணப்பித்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை.. தாசில்தாருக்கு தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்..!

உடனே தாசில்தார் டி.எஸ்.ஜெயதார், கணவரை இழந்த அந்தப் பெண்ணிடம் ஆபாசமான முறையில் பேசினார். அத்துடன் நிற்காமல் அவர் அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். மேலும் ஒருபடி மேலே போய், தனது பேண்டை கழற்றி மர்ம உறுப்பை காட்டியதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் செய்வதறியமால் அந்த அலுவலகத்தை விட்டு வெளியே ஓடி வந்துவிட்டார். அவர் தனது மகனிடம் நடந்த விஷயங்களை கூறினார்.  இதை கேட்டுக்கொண்ட அவரது மகன் அந்த தகவலை ஊடகங்களிடம் தெரிவித்தார். மேலும் அந்த பெண் தனது மகனுடன் தாசில்தார் அலுவலகம் முன்பு ஆவேசமாக பேசி போராட்டம் நடத்தினார். அந்த தாசில்தார் மீது நடவடிக்கை எடுக்குமாறு கோரினார். மேலும் தாசில்தார் டி.எஸ்.ஜெயதாரை அந்த பெண்ணும், அங்கு கூடியிருந்த பொதுமக்களும் சேர்ந்து அடித்து உதைத்தனர். 


உதவித்தொகைக்கு விண்ணப்பித்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை.. தாசில்தாருக்கு தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்..!

இதில் தாசில்தார் டி.எஸ்.ஜெயதாரை அந்தப்பெண் செருப்பால் அடித்து தாக்கினார். இதனால் அங்கு சிறிது பரபரப்பு நிலவியது. இதை அறிந்த காவல்துறையினர் மற்றும்  இன்னொரு தாசில்தார் ப்ரீத்தம் ஜெயின் அங்கு வந்தார். அவரிடம் நடந்த சம்பவத்தை அந்த பெண் விவரித்தார். இதை கேட்டுக்கொண்ட அந்த தாசில்தார், இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். தாசில்தார் டி.எஸ்.ஜெயதார், இவ்வாறு பெண்களிடம் அருவருப்பாக நடந்துகொள்வது புதிது அல்ல என கூறப்படுகிறது. அவர் ஏற்கனவே தனது அலுவலகத்தில் பணியாற்றிய ஒரு பெண் ஊழியரிடமும் இவ்வாறு தகாத முறையில் நடந்துகொண்டதாக அங்கு இருந்தவர்கள் கூறியுள்ளனர்.

மேலும் படிக்க : ‛மைசூரு மன்னர் பேமிளி’ புருடா: பெண்களிடம் லட்சங்களை அள்ளிய ‛நான் அவன் இல்லை’ சித்தார்த் கைது!

தலைப்பு செய்திகள்

" இளம் பெண்ணிடம் எல்லை மீறிய மெடிக்கல் ரெப் " பணம் கேட்டு மிரட்டிய பெண் வழக்கறிஞர்
மாமூல் தர மறுத்த அரிசிக்கடை மீது பெட்ரோல் குண்டுவீச்சு: புதுச்சேரியில் ரவுடியின் வெறியாட்டம்!
மாமூல் தர மறுத்த அரிசிக்கடை மீது பெட்ரோல் குண்டுவீச்சு: புதுச்சேரியில் ரவுடியின் வெறியாட்டம்!
கொள்ளிடம் ரயில்வே சுரங்கப்பாதையில் ரகசியச் சதி... சிக்கிய ரௌடி மொட்டை சிவா!
கொள்ளிடம் ரயில்வே சுரங்கப்பாதையில் ரகசியச் சதி... சிக்கிய ரௌடி மொட்டை சிவா!
தாம்பரம் அருகே கொடூரம்! 6-ஆம் வகுப்பு மகளுக்கு நடந்த அநீதி... பெற்ற தாய் செய்த அதிர்ச்சி காரியம்!
தாம்பரம் அருகே கொடூரம்! 6-ஆம் வகுப்பு மகளுக்கு நடந்த அநீதி! பெற்ற தாய் செய்த அதிர்ச்சி காரியம்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai Slams Nainar: “மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
TASMAC Liquor Ban Revoke : அப்பாடா.. குடிமகன்கள் நிம்மதி.! டாஸ்மாக்கில் மீண்டும் 11 சரக்குகளுக்கு அனுமதி- வெளியான புதிய உத்தரவு
அப்பாடா.. குடிமகன்கள் நிம்மதி.! டாஸ்மாக்கில் மீண்டும் 11 சரக்குகளுக்கு அனுமதி- வெளியான புதிய உத்தரவு இதோ..
Heavy Rain Alert : சூறாவளி காற்றுடன் கனமழை வெளுத்து வாங்கும்.! 3 நாட்களுக்கு அலர்ட் – எந்தெந்த மாவட்டங்களுக்கு? முழு லிஸ்ட் இதோ..
சூறாவளி காற்றுடன் கனமழை வெளுத்து வாங்கும்.! 3 நாட்களுக்கு அலர்ட் – எந்தெந்த மாவட்டங்களுக்கு? முழு லிஸ்ட் இதோ..
Udhayanidhi : நேற்று அமுதன்.. இன்று தனுஷ்.! தொடரும் கொலைகளே சாட்சி- விஜய் அரசை விளாசிய உதயநிதி
நேற்று அமுதன்.. இன்று தனுஷ்.! தொடரும் கொலைகளே சாட்சி- விஜய் அரசை விளாசிய உதயநிதி
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
Embed widget