Pocso : நெல்லையில் பள்ளி மாணவியை ஏமாற்றி, ஆபாச வீடியோ எடுத்துப் பகிர்ந்த நபர் கைது..
”பள்ளி மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி நிர்வாணமாக வீடியோ காலிங் செய்து அதை ரெக்கார்ட் செய்து தனது நண்பர்களான சக்திவேல் மற்றும் பாக்கியராஜுக்கு அனுப்பிய நாகராஜ் போக்சோவில் கைது”
நெல்லை மாவட்டம் ஆற்றங்கரை பள்ளிவாசல் அருகே உள்ளது ராமன்குடி கிராமம். இந்த பகுதியை சேர்ந்த நாகராஜ், இவர் விமலா என்பவரை கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்த நிலையில் கோயம்புத்தூர் அருகே மேட்டுப்பாளையத்தில் வசித்து வருகிறார். கடந்த இரண்டு ஆண்டுக்கு முன்பு கொரோனா பலரின் வாழ்வாதரத்தையும் புரட்டி போட்ட நிலையில் நாகராஜும் வேலை இன்றி இருந்து உள்ளார், இந்த நிலையில் தான் தனது சொந்த ஊரான நெல்லை மாவட்டத்தில் உள்ள தனது ராமன்குடி கிராமத்திற்கு வந்து உள்ளார்,
வேலை இல்லாததால் தனது மனைவி விமலாவுடன் ராமன் குடியில் வந்து தங்கியுள்ளார், அப்போது அந்தப் பகுதியில் உள்ள பள்ளி மாணவி ஒருவருடன் நாகராஜுக்கு பழக்கம் ஏற்பட்டதாக தெரிகிறது. அதன் பின்னர் நாகராஜ் அந்த மாணவியுடன் வாட்ஸ் அப் வீடியோ காலில் அவ்வப்போது பேசிக் கொண்டதாக தெரிகிறது. மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி நாகராஜ் நிர்வாணமாக வீடியோ காலிங் செய்து அதை ரெக்கார்ட் செய்து தனது போனில் வைத்து உள்ளார். தொடர்ந்து அந்த வீடியோவை தனது நண்பர்களான சக்திவேல் மற்றும் பாக்கியராஜுக்கு அனுப்பியதாகவும் தெரிகிறது,
இதனை நாகராஜின் நண்பர்கள் சமூக வலைதளங்களில் பரப்பியதாக கூறப்படுகிறது. இது குறித்து மாணவியின் பெற்றோருக்கு தகவல் தெரிந்ததை தொடர்ந்து அவர்கள் பதறியதோடு திசையன்விளை காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்து உள்ளனர். புகாரின் அடிப்படையில் திசையன்விளை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்ததோடு நாகராஜை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். காவல்துறையினர் தொடர்ந்து நடத்திய விசாரணையில் நாகராஜ் இதே போன்று அந்த ஊரில் பல பெண்களிடம் வாட்ஸ் அப் வீடியோ கால் பேசியதோடு அவர்களை தொடர்புகொண்டு மிரட்டி பணம் சம்பாதித்ததாக கூறப்படுகிறது.
பள்ளி மாணவியை ஆசை வார்த்தை கூறி ஆபாச வீடியோ கால் எடுத்து அதனை நண்பர்களுக்கு பகிர்ந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்