மேலும் அறிய

Crime : ’துபாயில் வேலை வாங்கித் தரேன்..’ சினிமா பாணியில் பொறியாளரிடம் ரூ.4 லட்சம் மோசடி , ஒருவர் கைது

துபாயில் வேலை வாங்கி தருவதாக என்ஜினீயரிடம் ரூ.4 லட்சம் மோசடி செய்த திருச்சி வாலிபரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, ரஞ்சன்குடி கிராமத்தை சேர்ந்தவர் கலியமூர்த்தி. இவரது மகன் மாயவேல் (வயது 32). எலக்ட்ரிக்கல் என்ஜினீயரிங் படிப்பு முடித்துள்ள இவர் வேலை இல்லாமல் இருந்து வந்துள்ளார். இந்தநிலையில், மாயவேலிடம் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் எம்.பி.ஏ. பட்டதாரியான திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் தாலுகா, ஓலையூர் கிராமத்தை சேர்ந்த செல்வத்தின் மகன் மதன்குமார் என்கிற மரிய ரஞ்சித் (32) என்பவர் வாட்ஸ்-அப் மூலம் தொடர்பு கொண்டு நண்பராக பழகியுள்ளார். 

மாயவேலிடம் மரிய ரஞ்சித் துபாய் நாட்டில் வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி ரூ.4 லட்சத்தை ஆன்லைன் மூலம் வாங்கியுள்ளார். ஆனால் மரிய ரஞ்சித் கூறியபடி மாயவேலுக்கு துபாய் நாட்டில் வேலை வாங்கி தரவில்லை. மேலும் அவர் கொடுத்த பணத்தையும் திருப்பி தராமல் மோசடி செய்தார். இந்த சம்பவம் குறித்து பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இயங்கும் மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் கடந்த மார்ச் மாதம் 9-ந்தேதி மாயவேல் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணி உத்தரவின் பேரில், சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வாணி, சப்-இன்ஸ்பெக்டர்கள் மனோஜ், சிவமீனா (தொழில்நுட்பம்), போலீசார் சதீஷ்குமார், வேல்முருகன், முத்துசாமி ஆகியோர் அடங்கிய குழுவினர் மரிய ரஞ்சித்தை வலைவீசி தேடி வந்தனர்.
Crime : ’துபாயில் வேலை வாங்கித் தரேன்..’ சினிமா பாணியில் பொறியாளரிடம் ரூ.4 லட்சம் மோசடி , ஒருவர் கைது

இந்த நிலையில் சென்னை கொட்டிவாக்கத்தில் பதுங்கியிருந்த மரிய ரஞ்சித்தை நேற்று முன்தினம் கைது செய்த சைபர் கிரைம் போலீசார் நேற்று பெரம்பலூருக்கு அழைத்து வந்தனர். மரிய ரஞ்சித்திடம் இருந்து ரூ.4 லட்சம், 9 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து மரியரஞ்சித் பெரம்பலூர் ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு எண்-2-ல் ஆஜர்படுத்தப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் சிறப்பாக பணிபுரிந்து நடவடிக்கை எடுத்த சைபர் கிரைம் போலீசாருக்கு பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணி பாராட்டு தெரிவித்தார்.

மேலும் அவர் நிருபர்களிடம் கூறுகையில், "பொதுமக்கள் யாரும் ஆன்லைனில் பரிசு பொருட்கள் விழுந்துள்ளதாகவும், குறைந்த வட்டியில் கடன் தருவதாகவும், வேலை வாய்ப்பு தருவதாகவும், ஆன்லைன் ரம்மி, லோன் ஆப் ஆகியவற்றில் ஆசை வார்த்தைகளை நம்பி ஏமாற வேண்டாம். மேலும் இணையவழி மூலம் பணமோசடி புகார்களுக்கு 24 மணி நேரத்திற்குள் 1930 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை அழைத்து புகார் தெரிவிக்கலாம். சைபர் குற்றங்களுக்கு www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகார் பதிவிடலாம்" என்றார். 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain Update: சென்னையில் பரவலாக மழை, வலுவடையும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், கனமழைக்கு வாய்ப்பு? வானிலை மையம்
TN Rain Update: சென்னையில் பரவலாக மழை, வலுவடையும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், கனமழைக்கு வாய்ப்பு? வானிலை மையம்
Sunita Williams: சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்?  பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்;  புதிய சிக்கல் என்ன?
சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்? பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்; புதிய சிக்கல் என்ன?
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
Rahul Gandhi: ''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Ashwin Profile: ”நான் சொடுக்கு பந்து போடணுமா?”தலையெழுத்தை மாற்றிய COACH நாயகன் அஸ்வினின் கதை..!Rahul gandhi on MP injury: ”ஆமா...தள்ளிவிட்டேன்! என்னையவே தடுக்குறீங்களா?” ஆதாரத்துடன் பேசிய ராகுல்Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain Update: சென்னையில் பரவலாக மழை, வலுவடையும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், கனமழைக்கு வாய்ப்பு? வானிலை மையம்
TN Rain Update: சென்னையில் பரவலாக மழை, வலுவடையும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், கனமழைக்கு வாய்ப்பு? வானிலை மையம்
Sunita Williams: சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்?  பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்;  புதிய சிக்கல் என்ன?
சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்? பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்; புதிய சிக்கல் என்ன?
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
Rahul Gandhi: ''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
TN Rain: மழை வருமா, வராதா? ;  தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
மழை வருமா, வராதா? ; தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
"ஒரு ஆணுக்கு இரண்டு மனைவிகள்.. லிவ் இன் ரிலேஷன்ஷிப் தவறு" நிதின் கட்காரி பரபர கருத்து!
Embed widget