மேலும் அறிய

Crime: மது அருந்த பணம் கேட்டு நச்சரித்த ரவுடி! போதையில் போட்டுத்தள்ளிய நண்பன்! சேலத்தில் பரபரப்பு

வீட்டில் இருந்த கத்தியை எடுத்து பரசுராமனின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார்.

சேலம் மாநகர் ஜான்சன்பேட்டை பகுதியை சேர்ந்தவர் பரசுராமன். பிரபல ரவுடியான இவர் மீது திருட்டு, வழிப்பறி, கஞ்சா விற்பனை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் பதிவாகி உள்ளன. அவருடைய மனைவி மலர். இவர்களுக்கு சாய்லாராஸ்ரீ என்ற மகள் உள்ளார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வழிப்பறி வழக்கு ஒன்றில் பரசுராமனை அஸ்தம்பட்டி காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர் கடந்த மாதம் ஜாமீனில் வெளியே வந்தார். ஜான்சன்பேட்டையை சேர்ந்தவர் சின்னதம்பி, பிரபல ரவுடியான இவர் மீது கொலை, வழிப்பறி, சாராய விற்பனை உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் காவல்நிலையங்களில் பதிவாகி நிலுவையில் உள்ளன. பரசுராமனும், சின்னதம்பியும் அடிக்கடி ஒன்றாக சேர்ந்து மது குடிப்பது வழக்கம் எனக் கூறப்படுகிறது. அதேபோல் நேற்று காலையும் அவர்கள் 2 பேரும் ஒன்றாக சேர்ந்து மது அருந்திவிட்டு சுற்றி திரிந்துள்ளனர். பிற்பகலில் சின்னதம்பியிடம், பரசுராமன் மீண்டும் மது குடிப்பதற்கு பணம் கேட்டுள்ளார். இதற்கு அவர் மறுத்துவிட்டு தனது வீட்டுக்கு வந்தார். ஆனால் பரசுராமன் விடாமல் பணம் கேட்டு சின்னதம்பி வீட்டுக்கே சென்றார்.

Crime: மது அருந்த பணம் கேட்டு நச்சரித்த ரவுடி! போதையில் போட்டுத்தள்ளிய நண்பன்! சேலத்தில் பரபரப்பு

இதுதொடர்பாக அவர்களிடையே அங்கு திடீரென தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த சின்னதம்பி அங்கு கிடந்த செங்கலை எடுத்து பரசுராமனை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் நிலைதடுமாறி ரோட்டில் கீழே விழுந்துள்ளார். பின்னர் சின்னதம்பி வீட்டில் இருந்த கத்தியை எடுத்து பரசுராமனின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். மேலும் அவரது முகத்தில் சில இடங்களில் கத்தியால் வெட்டினார். இதில் படுகாயம் அடைந்த பரசுராமன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதை பார்த்து அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் பரசுராமன் உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர். தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் கொலை செய்யப்பட்ட பரசுராமனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து இந்த கொலை தொடர்பாக அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் விசாரித்தனர். கொலை நடந்த இடத்துக்கு தடயவியல் மற்றும் கைரேகை நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்தனர். இதனிடையே அந்த பகுதியில் சுற்றி திரிந்த சின்னதம்பியை காவல்துறையினர் கைது செய்து காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்து வருகின்றனர். மேலும் கொலை நடந்த இடத்தில் பொருத்தப்பட்டிருக்கும் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். சேலத்தில் பிரபல ரவுடியை கழுத்தை அறுத்து படுகொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அமைச்சர் துரைமுருகன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை: குவிக்கப்பட்ட துப்பாக்கி ஏந்திய போலீஸ் - வேலூரில் பரபரப்பு

Rohit Sharma: முடிவுக்கு வந்தது சகாப்தம்? பும்ராவிடம் கேப்டன்சி! பெஞ்சில் உட்கார்ந்த தலைவன் ரோகித்!

வீட்ல இருங்க! பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் இன்று விநியோகம்

Tamilnadu Roundup: பொங்கல் பரிசு டோக்கன் விநியோகம்! துரைமுருகன் வீட்டில் ரெய்டு - தமிழ்நாட்டில் 10 மணி வரை!

ABP Premium

வீடியோ

ஹெல்மெட் போட்டா தங்க காசு! NEW YEAR சர்ப்ரைஸ்! துள்ளிக் குதித்த வாகன ஓட்டிகள்Zomato Search in 2024 | ”எனக்கு Girlfriend வேணும்” மிரளவைத்த YOUNGSTERS! ஷாக்கான Zomato |‘’முகுந்தனுக்கு பதவி உறுதி!’’  அடித்து சொன்ன ராமதாஸ்   அதிர்ச்சியில் பாமகவினர்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அமைச்சர் துரைமுருகன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை: குவிக்கப்பட்ட துப்பாக்கி ஏந்திய போலீஸ் - வேலூரில் பரபரப்பு
அமைச்சர் துரைமுருகன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை: குவிக்கப்பட்ட துப்பாக்கி ஏந்திய போலீஸ் - வேலூரில் பரபரப்பு
Rohit Sharma: முடிவுக்கு வந்தது சகாப்தம்? பும்ராவிடம் கேப்டன்சி! பெஞ்சில் உட்கார்ந்த தலைவன் ரோகித்!
Rohit Sharma: முடிவுக்கு வந்தது சகாப்தம்? பும்ராவிடம் கேப்டன்சி! பெஞ்சில் உட்கார்ந்த தலைவன் ரோகித்!
வீட்ல இருங்க! பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் இன்று விநியோகம்
வீட்ல இருங்க! பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் இன்று விநியோகம்
Tamilnadu Roundup: பொங்கல் பரிசு டோக்கன் விநியோகம்! துரைமுருகன் வீட்டில் ரெய்டு - தமிழ்நாட்டில் 10 மணி வரை!
Tamilnadu Roundup: பொங்கல் பரிசு டோக்கன் விநியோகம்! துரைமுருகன் வீட்டில் ரெய்டு - தமிழ்நாட்டில் 10 மணி வரை!
Vijayakanth: விஜயகாந்த் பார்த்து பார்த்து கட்டிய வீட்டின் கிரகப்பிரவேசம் - எப்போது? வெளியான தகவல்!

ரயிலில் மதுரைக்கு பார்சலில் வந்த 240 கிலோ கணேஷ் புகையிலை பறிமுதல்

ஸ்பீடு பிரேக்கரில் ஏறி இறங்கிய ஆம்புலன்ஸ்! உயிரிழந்தவர் உயிர் பெற்ற அதிசயம்! அதிர்ச்சியில் மருத்துவர்கள்!

பெண்கள் இருக்கும் வீடுகளில் ஜன்னல் இருக்கக்கூடாது: ஆப்கனில் தலிபான் அரசு புது உத்தரவு 

Embed widget