Atrocities On Dalits: ’என்னோட நிலத்துல மாட்டை மேய்ப்பியா?' பட்டியலினத்தவரை மரத்தில் கட்டி வைத்து அடித்த கொடூரம்..
தெலங்கானாவில் பட்டியலினத்தவரை மரத்தில் கட்டி வைத்து அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Atrocities On Dalits: தெலங்கானவில் பட்டியலினத்தவரை மரத்தில் கட்டி வைத்து அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தொடரும் கொடூரங்கள்:
சமூகம் முன்னேற்றம் அடைந்ததாக சொல்லி கொண்டாலும், தொழில்நுட்ப ரீதியாக எவ்வளவு வளர்ச்சி அடைந்தாலும், சாதிய கொடூரங்கள் இன்றளவும் தொடர்கிறது. குறிப்பாக, தலித் பெண்கள், சிறுமிகளுக்கு எதிராக நடத்தப்படும் வன்முறை சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொடர் கோரிக்கைகளும் எழுந்து வருகிறது. சமீபத்தில் கூட, மத்திய பிரதேசத்தில் பழங்குடி சமூகத்தை சேர்ந்த ஒருவர் மீது, பாஜக நிர்வாகி சிறுநீர் கழித்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.
அதன் தொடர்ச்சியாக, ஆந்திர பிரதேசம் மாநிலத்தில் பழங்குடி இளைஞர், சிறுமி ஒருவரை காதலித்த காரணத்தால் ஆறு இளைஞர்கள் சேர்ந்து அவர் மீது சிறுநீர் கழித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த அதிர்ச்சி அடங்குவதற்குள், தற்போது தெலங்கானாவில் மற்றுமொரு சம்பவம் அரங்கேறியுள்ளது.
மரத்தில் கட்டி வைத்து அடித்த கொடூரம்:
#Terrible A Dalit farmer was tied to a pole and mercilessly thrashed by a caste Hindu man because he had tied cattle in front of his house. The incident happened on August 10 in Shetpalli, Kotapalli mandal of Manchyryala district, Telangana. pic.twitter.com/9hX7wSBZZf
— The Dalit Voice (@ambedkariteIND) August 12, 2023