30 வயது பெண்ணை கொலை செய்து துண்டுதுண்டாக வெட்டிய சம்பவம்.. ஜம்முவில் அதிகரிக்கும் கொலை குற்றங்கள்..
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பட்காமைச் சேர்ந்த ஷபீர் அகமது 30 வயது பெண்ணை கொலை செய்து, அவரது உடலை துண்டுதுண்டாக் வெட்டி பல இடங்களில் புதைத்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பட்காமைச் சேர்ந்த ஷபீர் அகமது 30 வயது பெண்ணை கொலை செய்து, அவரது உடலை துண்டுதுண்டாக் வெட்டி பல இடங்களில் புதைத்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பட்காமைச் சேர்ந்த ஒருவர், போலீஸ் காவலில், 30 வயது பெண்ணைக் கொன்று, அவரது உடலை பல துண்டுகளாக வெட்டி, வெவ்வேறு இடங்களில் புதைத்ததை ஒப்புக்கொண்டார். கொலை செய்யப்பட்டவரின் சகோதரர், பட்காமில் உள்ள சோய்புக் பகுதியைச் சேர்ந்த தன்வீர் அகமது கான், மார்ச் 8 ஆம் தேதி, தனது சகோதரி காணாமல் போனது குறித்து எழுத்துப்பூர்வமாக புகார் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர்.
மார்ச் 7 ஆம் தேதி பயிற்சி வகுப்புகளுக்குச் சென்ற தனது 30 வயது சகோதரி வீடு திரும்பவில்லை என்று அவர் அளித்த புகாரில் கூறியிருந்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தினர். பட்காமில் உள்ள மொஹந்த்போராவைச் சேர்ந்த ஷபீர் அகமது வானி உட்பட பல சந்தேகத்திற்குரிய நபர்களை போலீசார் சுற்றி வளைத்தனர். தொடர் விசாரணையின் போது, காணாமல் போன பெண்ணை கொலை செய்ததை திருமணமான ஷபீர் ஒப்புக்கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.
தனது குற்றத்தை மறைக்க, ஷபீர் உடலை துண்டு துண்டாக வெட்டி பாகங்களை வெவ்வேறு இடங்களில் புதைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஷபீர் அகமதின் வாக்குமூலத்தின் அடிப்படையில் பெண்ணின் உடல் பாகங்களை போலீசார் மீட்டுள்ளனர். மூத்த அதிகாரிகளின் கூற்றுப்படி, மருத்துவ-சட்ட நடைமுறைகள் நடந்து வருகிறது என தெரிவித்துள்ளனர்.
கடந்த வாரத்தில் மட்டும் காஷ்மீரில் இது இரண்டாவது சம்பவமாகும். கடந்த வெள்ளிக்கிழமை மருத்துவர் ஒருவர் தனது காதலனுடன் ஏற்பட்ட சண்டையில் குத்தி கொலை செய்யப்பட்டார். பின் அவரும் தற்கொலைக்கு முயற்சி செய்தார். ஆனால் அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதற்கிடையில், உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள சுஷாந்த் கோல்ஃப் நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சோனே கசெஹ்ரா கிராமத்தில் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்ற இளைஞரை அடையாளம் தெரியாத சிலர் கொன்றனர். போலீசார் கூறுகையில், சனிக்கிழமை இரவு 11 மணியளவில் ஃபோன் பேசுவதற்காக வெளியே வந்த நபர் அடையாளம் தெரியாத சிலர் அவரை ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிக்கு கடத்திச்சென்று கழுத்தை அறுத்து கொலை செய்தனர் என தெரிவித்துள்ளனர்.