மேலும் அறிய

Crime: பாம்பு கடித்ததால் உயிரிழந்த சிறுமி..மரணத்துக்கு பின்பு வெளியான அதிர்ச்சி வீடியோ.. 75 வயது முதியவர் போக்சோவில் கைது

புதிய எருமைவெட்டிபாளையம் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான செங்கல் சூளை ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு பெற்றோரை இழந்த 9 வயது சிறுமி ஒருவர் தனது உறவினருடன் தங்கியுள்ளார்.

சென்னை அருகே 9 வயது சிறுமி 75 வயது முதியவரால் பாலியல் வன்கொடுமை  செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை அம்பத்தூர் அருகேயுள்ள சோழவரம் அடுத்த புதிய எருமைவெட்டிபாளையம் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான செங்கல் சூளை ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு பெற்றோரை இழந்த 9 வயது சிறுமி ஒருவர் தனது உறவினருடன் தங்கியுள்ளார். அருகிலுள்ள பள்ளியில் 4 ஆம் வகுப்பு படித்து வந்த அச்சிறுமியை கடந்த ஜூலை 24 ஆம் தேதி செங்கல் சூளை பின்புறம்  உள்ள திறந்தவெளியில் இயற்கை உபாதை கழிக்க சென்றபோது பாம்பு கடித்துள்ளது. 

சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அங்கு பாம்பு கடித்து ஆபத்தான நிலையில் நிலையில் அவரை மீட்டு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவனைக்கு அழைத்து சென்றனர். சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக சோழவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். 

இதற்கிடையில் அச்சிறுமியை முதியவர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதுகுறித்து அறிந்த உறவினர்கள் சோழவரம் காவல் நிலையத்தில் நடவடிக்கை எடுக்ககோரி புகாரளித்தனர். இந்த புகாரானது அம்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர  விசாரணை நடத்தினர். இதில் புதிய எருமைவெட்டிபாளையம் பகுதியை சேர்ந்த கண்ணன் (எ) சின்னதுரை, பாஸ்கர், சதீஷ், ரமேஷ், விஜயகுமார்  ஆகிய 5 பேரும் வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவிட்டது கண்டுபிடிக்கப்பட்டது. 

அவர்களை பிடித்து விசாரணை நடத்தியதில் அதே கிராமத்தை சேர்ந்த பாலு என்ற 75 வயது முதியவர் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சிறுமியை மிரட்டி பாலியல் தொல்லைகள் செய்து வந்ததும், அந்த இழி செயலை இளைஞர்கள் 5 பேரும் செல்ஃபோனில் வீடியோ எடுத்ததும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து முதியவர் உட்பட 6 பேர் மீதும் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

சீர்காழியில் பரபரப்பு: வீதிக்கு வர அஞ்சும் மக்கள் - ஓட ஓட விரட்டி 4 பேரை கடித்து குதறிய வெறிநாய்!
சீர்காழியில் பரபரப்பு: வீதிக்கு வர அஞ்சும் மக்கள் - ஓட ஓட விரட்டி 4 பேரை கடித்து குதறிய வெறிநாய்!
பாங்காக் விமானத்தில் வந்த 'கடத்தல் குருவி': சென்னை ஏர்போர்ட்டில் மடக்கிப் பிடித்த சுங்கத்துறை அதிகாரிகள்!
பாங்காக் விமானத்தில் வந்த 'கடத்தல் குருவி': சென்னை ஏர்போர்ட்டில் மடக்கிப் பிடித்த அதிகாரிகள்!
மயிலாடுதுறை பரபரப்பு: கணவர் தற்கொலைக்குக் காரணமான கள்ளக்காதலன் கைது; தப்பியோடிய மனைவிக்கும் வலைவீச்சு!
மயிலாடுதுறை பரபரப்பு: கணவர் தற்கொலைக்குக் காரணமான கள்ளக்காதலன் கைது; தப்பியோடிய மனைவிக்கும் வலைவீச்சு!
அரிவாள் மிரட்டல் முதல் போதைப்பொருள் விற்பனை வரை: மயிலாடுதுறையில் 5 பேர் மீது பாய்ந்தது குண்டாஸ்!
அரிவாள் மிரட்டல் முதல் போதைப்பொருள் விற்பனை வரை: மயிலாடுதுறையில் 5 பேர் மீது பாய்ந்தது குண்டாஸ்!  

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK vs DMK: கடந்த ஆட்சியில் யாரைத் திருப்திப்படுத்த கார் பந்தயம்? உதயநிதிக்கு தவெக கேள்வி
TVK vs DMK: கடந்த ஆட்சியில் யாரைத் திருப்திப்படுத்த கார் பந்தயம்? உதயநிதிக்கு தவெக கேள்வி
TN Flash News Today: சட்டசபையில் வெடித்த மோதல்.. தங்க மோதிரம் திட்டத்தில் ட்விஸ்ட்.. இன்றைய முக்கிய நிகழ்வுகள்!
TN Flash News Today: சட்டசபையில் வெடித்த மோதல்.. தங்க மோதிரம் திட்டத்தில் ட்விஸ்ட்.. இன்றைய முக்கிய நிகழ்வுகள்!
MLAக்களுக்கு கார் கொடுக்குறது இருக்கட்டும்.. விவசாயிகளைப் பாருங்க.. உதயநிதி கடும் கண்டனம்!
MLAக்களுக்கு கார் கொடுக்குறது இருக்கட்டும்.. விவசாயிகளைப் பாருங்க.. உதயநிதி கடும் கண்டனம்!
Chennai Boat Service: சென்னையில் படகு சவாரி செய்ய ரெடியா? ரூ.876 கோடியில் பிரம்மாண்ட திட்டம்.. வரப்போகும் 8 மின்சாரப் படகுகள்!
Chennai Boat Service: சென்னையில் படகு சவாரி செய்ய ரெடியா? ரூ.876 கோடியில் பிரம்மாண்ட திட்டம்.. வரப்போகும் 8 மின்சாரப் படகுகள்!
ஒரே சார்ஜில் 699 கி.மீட்டர் மைலேஜ்.. தொடங்கியது BMW i5 LWB மின்சார காரின் முன்பதிவு - விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 699 கி.மீட்டர் மைலேஜ்.. தொடங்கியது BMW i5 LWB மின்சார காரின் முன்பதிவு - விலை எவ்ளோ?
Sowcar Janaki: 15 வயதிலே கல்யாணம்.. குழந்தை பெற்ற பிறகே நடிப்பு... 70 ஆண்டு திரைவாழ்க்கை.. செளகார் ஜானகியின் மறுபக்கம்
Sowcar Janaki: 15 வயதிலே கல்யாணம்.. குழந்தை பெற்ற பிறகே நடிப்பு... 70 ஆண்டு திரைவாழ்க்கை.. செளகார் ஜானகியின் மறுபக்கம்
தலைமைச் செயலாளர் மீது அதிருப்தி: நாளை போராட்டத்தில் குதிக்கும் சிபிஎம் - காரணம் என்ன?
தலைமைச் செயலாளர் மீது அதிருப்தி: நாளை போராட்டத்தில் குதிக்கும் சிபிஎம் - காரணம் என்ன?
SBI அடிப்படை சேமிப்பு கணக்கு: அக்டோபர் 1 முதல் புதிய கட்டணங்கள் - உஷார்!
SBI அடிப்படை சேமிப்பு கணக்கு: அக்டோபர் 1 முதல் புதிய கட்டணங்கள் - உஷார்!
Embed widget