மேலும் அறிய

”4 மாதங்களில் 50 கோடி ரூபாய் மதிப்பிலான போதை பொருள் பறிமுதல்” கலக்கத்தில் தூத்துக்குடி

தூத்துக்குடியில் பீடி இலையில் துவங்கி சாரஸ், கிறிஸ்ட்டல் மெத்தம் பிட்டமைன் முதல் தொடர்ந்து பிடிபடும் போதை பொருள்

இலங்கைக்கு கடத்த முயன்ற 26 கோடி மதிப்பிலான சாரஸ் போதை பொருள் பறிமுதல்- வக்கீல் உள்ளிட்ட 3 பேர் கைது

”4 மாதங்களில் 50 கோடி ரூபாய் மதிப்பிலான போதை பொருள் பறிமுதல்” கலக்கத்தில் தூத்துக்குடி

கண்காணிப்பு

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள், பீடி இலை மற்றும் பல்வேறு அத்தியாவசிய பொருட்கள் கடத்தப்பட்டு வருகின்றன. இதனால் கடலோர பாதுகாப்பு போலீசார், கடலோர காவல்படை மற்றும் கியூ பிரிவு போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் அவ்வப்போது, பீடி இலை, கஞ்சா உள்ளிட்டவை பிடிபட்டு வருகின்றன. இந்த நிலையில் தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு போதைபொருள் கடத்தப்படுவதாக கியூ பிரிவு போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

”4 மாதங்களில் 50 கோடி ரூபாய் மதிப்பிலான போதை பொருள் பறிமுதல்” கலக்கத்தில் தூத்துக்குடி

அதன்பேரில் கியூ பிரிவு போலீஸ் ஆய்வாளர் விஜயஅனிதா தலைமையில், உதவி ஆய்வாளர் ஜீவமணி தர்மராஜ் மற்றும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது திரேஸ்புரத்தில் இருந்து வடபகுதியில் உள்ள கடற்கரையில் 3 பேர் நின்று கொண்டு இருந்தனர். அவர்கள் படகுக்காக காத்து இருந்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து போலீசார் விரைந்து சென்று 3 பேரையும் மடக்கி பிடித்தனர். அவர்களிடம் இருந்த பாக்கெட்டை பறிமுதல் செய்து ஆய்வு செய்தனர்.

சாரஸ் பறிமுதல்

அதில் தலா ஒரு கிலோ எடை கொண்ட 56 பாக்கெட்டுகள் இருந்தன. இதில் மஞ்சள் நிறத்தில் அல்வா போன்ற பொருள் இருந்தது. இதனை கைப்பற்றிய போலீசார் பரிசோதனை செய்தனர். அப்போது, அது கஞ்சா செடியில் இருந்து தயாரிக்கப்படும் சாரஸ் போதை பொருள் என்பது தெரியவந்தது. இந்த சாரஸ் கஞ்சா செடியின் பிசினில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இதனால் 56 கிலோ சாரஸ் போதை பொருளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதன் சர்வதேச மதிப்பு ரூ.28 கோடி என்று கூறப்படுகிறது.

”4 மாதங்களில் 50 கோடி ரூபாய் மதிப்பிலான போதை பொருள் பறிமுதல்” கலக்கத்தில் தூத்துக்குடி

இதைத் தொடர்ந்து பிடிபட்டவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் தூத்துக்குடியை சேர்ந்த வழக்கறிஞர்  அமல்ராஜ்(வயது 46), தெர்மல்நகர் பகுதியை சேர்ந்த கேம்ப்-2 சுனாமி காலனியை சேர்ந்த நிஷாந்தன்(32), கோவில்பிள்ளை விளையை சேர்ந்த இன்பென்ட் விக்டர்(31)  எ்ன்பது தெரியவந்தது. மேலும் அவர்கள், சாரஸ் போதைபொருளை ஆந்திராவில் இருந்து சென்னை வழியாக தூத்துக்குடிக்கு கடத்தி வந்து உள்ளனர். தூத்துக்குடியில் இருந்து படகு மூலம் இலங்கைக்கு சாரஸ் போதை பொருளை கடத்த முயன்றது தெரியவந்தது.  இதனை தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா மற்றும் பிடிபட்டவர்களை தூத்துக்குடி மாவட்ட போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். அதன்பேரில் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். போதை பொருள் பிடிபட்ட சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

கடந்த ஜூன் மாதம் தூத்துக்குடி இனிகோ நகர் பகுதியில் போதைப் பொருள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து  அங்குள்ள ஒருவீட்டில் போலீஸார் சோதனை நடத்தியதில், 8 பாலித்தீன் பாக்கெட்களில், தலா ஒரு கிலோ எடை கொண்ட போதைப் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.விசாரணையில், அவை 'ஐஸ்' என்று அழைக்கப்படும் 'கிறிஸ்டல் மெத்தம் பீட்டாமைன்' என்ற உயர்ரக போதைப் பொருள் என்பதும் தெரியவந்தது. சுமார் 60 சதவீதம் தூய்மையான இந்த போதைப் பொருளின் சர்வதேச மதிப்பு ரூ.24 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

ஆசிரியர் தற்கொலை: 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்
ஆசிரியர் தற்கொலை: 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்
Video: சபரிமலை மகரஜோதி தரிசன வீடியோ... விண்ணைப்பிளந்த ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம்
சபரிமலை மகரஜோதி தரிசன வீடியோ... விண்ணைப்பிளந்த ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை: அரசு பொறுப்பேற்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் கண்டனம்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை: அரசு பொறுப்பேற்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் கண்டனம்
இந்தியா vs நியூசிலாந்து: ராகுலின் அதிரடி சதம்! 285 ரன்கள் இலக்குடன் நியூசிலாந்துக்கு சவால்!
இந்தியா vs நியூசிலாந்து: ராகுலின் அதிரடி சதம்! 285 ரன்கள் இலக்குடன் நியூசிலாந்துக்கு சவால்!
ABP Premium

வீடியோ

”மானத்த பத்தி நீங்க பேசலாமா?” அடக்குமுறைகளை எதிர்க்கும் இஸ்லாமிய தமிழச்சி! | Wahitha Begum
அயோத்தி செல்லும் ராகுல்! காங்கிரஸ் பக்கா ப்ளான் கொந்தளிக்கும் பாஜகவினர் | Rahul Gandhi Visit Ayodhya
’’ரவுடிகள்..கோமாளிகள்’’விஜய் ரசிகர்களை திட்டிய சுதா கொங்கரா

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஆசிரியர் தற்கொலை: 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்
ஆசிரியர் தற்கொலை: 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்
Video: சபரிமலை மகரஜோதி தரிசன வீடியோ... விண்ணைப்பிளந்த ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம்
சபரிமலை மகரஜோதி தரிசன வீடியோ... விண்ணைப்பிளந்த ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை: அரசு பொறுப்பேற்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் கண்டனம்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை: அரசு பொறுப்பேற்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் கண்டனம்
இந்தியா vs நியூசிலாந்து: ராகுலின் அதிரடி சதம்! 285 ரன்கள் இலக்குடன் நியூசிலாந்துக்கு சவால்!
இந்தியா vs நியூசிலாந்து: ராகுலின் அதிரடி சதம்! 285 ரன்கள் இலக்குடன் நியூசிலாந்துக்கு சவால்!
பராசக்தி சர்ச்சை: காங்கிரஸின் எதிர்ப்பை பயன்படுத்திக்கொண்ட பாஜக? - திமுக செந்தில்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
பராசக்தி சர்ச்சை: காங்கிரஸின் எதிர்ப்பை பயன்படுத்திக்கொண்ட பாஜக? - திமுக செந்தில்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
Mattu Pongal Kolam: மாட்டுப் பொங்கலுக்கு என்ன கோலம் போடலாம்..? இந்த டிசைன் ட்ரை பண்ணுங்க
Mattu Pongal Kolam: மாட்டுப் பொங்கலுக்கு என்ன கோலம் போடலாம்..? இந்த டிசைன் ட்ரை பண்ணுங்க
Iran Erfan Soltani: ஈரான் அரசுக்கு எதிராக போராட்டம்; விசாரணை இன்றி தூக்கு; தண்டனை பெற்ற எர்ஃபான் சோல்தானி யார்.?
ஈரான் அரசுக்கு எதிராக போராட்டம்; விசாரணை இன்றி தூக்கு; தண்டனை பெற்ற எர்ஃபான் சோல்தானி யார்.?
பொங்கலுக்கு Maruti Baleno வாங்கலாமா? ஆஃபரை அள்ளித் தந்த மாருதி சுசுகி - எவ்வளவு?
பொங்கலுக்கு Maruti Baleno வாங்கலாமா? ஆஃபரை அள்ளித் தந்த மாருதி சுசுகி - எவ்வளவு?
Embed widget