மேலும் அறிய
Advertisement
வண்டலூர் பூங்காவா இல்ல சென்னை ஏர்போர்ட்டா..!? பயங்கர பாம்புகளுடன் வந்த பயணி..
2 மலைப்பாம்பு குட்டிகள் உட்பட, 13 அரியவகை விலங்குகள், தாய்லாந்து நாட்டிற்கு உயிருடன் திருப்பி அனுப்பப்பட்டன.
தாய்லாந்து நாட்டிலிருந்து, விமானத்தில் சென்னைக்கு கடத்திக்கொண்டுவரப்பட்ட, அரிய வகை மலைப்பாம்பு குட்டிகள், ஆப்பிரிக்க அரிய வகை குரங்குகள், ஆப்பிரிக்க கண்டத்து எலிகள், ஆகிய 31 அரிய வகை விலங்குகள், சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டு, தஞ்சாவூரை சேர்ந்த கடத்தல் பயணியை, சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்து, சிறையில் அடைக்கப்பட்டார். இந்த அரிய வகை விலங்குகளில், குரங்குகள் எலிகள் ஆகிய 18 அரிய வகை உயிரினங்கள்,உயிரிழந்து விட்டன. 2 மலைப்பாம்பு குட்டிகள் உட்பட, 13 அரியவகை விலங்குகள், தாய்லாந்து நாட்டிற்கு உயிருடன் திருப்பி அனுப்பப்பட்டன.
சுங்க அதிகாரிகள் சோதனை
சென்னை ( Chennai News ) : தாய்லாந்து நாட்டு தலைநகர் பாங்காக்கில் இருந்து தாய் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், நேற்று சனிக்கிழமை இரவு சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகளை சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது தஞ்சாவூர் சேர்ந்த குருசாமி சுதாகர் (44) என்ற பயணி, மீது சந்தேகம் ஏற்பட்டது. எடுத்து சுங்க அதிகாரிகள் அந்தப் பயணியை நிறுத்தி விசாரித்தனர். அதோடு அவருடைய உடமைகளை பரிசோதித்தனர். அவர் வைத்திருந்த பெரிய பைக்குள், அரிய வகை மலைப்பாம்பு உள்ளிட்ட வெளிநாட்டு விலங்குகள், இருந்ததை கண்டுபிடித்தனர்.
வெளிநாட்டு விலங்குகள் ஆய்வு
உடனடியாக பயணி குருசாமி சுதாகரை வெளியில் விடாமல், நிறுத்தி வைத்து விட்டு, சென்னை பெசன்ட் நகரில் உள்ள, ஒன்றிய குற்றப் புலனாய்வு வன பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் சென்னை விமான நிலையத்திற்கு விரைந்து வந்து, அரிய வகை வெளிநாட்டு விலங்குகளை ஆய்வு செய்தனர். அதில் 2 வெளிநாட்டு மலை பாம்பு குட்டிகள், 3 ஆப்பிரிக்க அரிய வகை குரங்கு குட்டிகள், 26 அரிய வகை ஆப்பிரிக்க கண்டத்து எலிகள் மொத்தம் 31, இருந்ததை கண்டுபிடித்தனர்.
உயிரிழந்த அரிய வகை குரங்குகள்
அதில் 3 ஆப்பிரிக்க அரிய வகை குரங்குகளும்,15 ஆப்பிரிக்க கண்டத்து அரிய வகை எலிகளும் ஏற்கனவே உயிரிழந்த நிலையில் இருந்தன. 2 மலைப்பாம்பு குட்டிகளும், 11 அரிய வகை எலிகளும், ஆகிய 13 அரிய வகை உயிரினங்கள் மட்டுமே உயிருடன் இருந்தன. இதை அடுத்து உயிருடன் இருந்த 2 மலைப்பாம்புகள் குட்டிகள் உட்பட 13 அரிய வகை உயிரினங்களை தாய்லாந்து நாட்டுக்கே திருப்பி அனுப்ப முடிவு செய்தனர். மேலும் உயிரிழந்த அரிய வகை குரங்குகள் எலிகளை, செங்கல்பட்டு பகுதியில் உள்ள தனியார் பாய்லர் ஆலைக்கு எடுத்து சென்று மிகுந்த பாதுகாப்பான முறையில், எரித்து அளித்தனர்.
சுங்கத்துறை நீதிமன்றத்தில் ஆஜர்
அதேபோல் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சென்னையில் இருந்து, பாங்காக் சென்ற தாய் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில், 2 மலைப்பாம்பு குட்டிகள் உட்பட 13 அரிய வகை உயிரினங்களை தாய்லாந்து நாட்டுக்கு திருப்பி அனுப்பினர். அதற்கான செலவு தொகையை, இந்த அரிய வகை வனவிலங்கு கடத்தி வந்த பயணி, குருசாமி சுதாகரிடம் வசூல் செய்தனர். மேலும் சுங்க அதிகாரிகள் அரிய வகை வன உயிரினங்களை உரிய அனுமதி இன்றி வெளிநாட்டில் இருந்து கடத்தி வந்த பயணி, குருசாமி சுதாகரை கைது செய்து, சுங்கத்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, புழல் சிறையில் அடைத்துள்ளனர்.
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
தமிழ்நாடு
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion